Saturday, December 1, 2012

நான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)

வாயை திறக்காமல் பேசு பார்க்கலாம் என்று சிலர் சவால் விடுவார்கள், அதை இந்த வென்றிலோகிசம் (Ventriloquist) தெரிந்தவர்களிடம் சொன்னால் அதை ரசித்து செய்வார்கள். சுலபமாக சொல்வதென்றால், இந்த "அவர்கள்" படத்தில் கமல் ஒரு பொம்மையுடன் வந்து "ஜூனியர்....ஜூனியர்" என்று பாடுவாரே அதுதான். என்ன ஒரு அருமையான கலை தெரியுமா ?





முதலில் இந்த பெயர் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்வோம் !! இலத்தீன் மொழியில் வெண்டேர் (Venter) என்றால் பெல்லி / வயிறு என்று அர்த்தம், லௌகி (louqi) என்றால் பேச்சு என்று அர்த்தம், அதாவது வயிற்றில் இருந்து பேசுவது எனப்படும். இந்த கலையை 19ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பலர் கடவுள் பேசுகிறார், ஆவிகள் பேசுகின்றன என்று உபயோகித்து வந்தனர். பின்னர், 1896இல் பிரெட் ரஸ்ஸல் என்பவர் (இவர்தான் இந்த வென்றிலோகிசம் கலையின் தந்தை என்பர்), ஒரு பொம்மையில் சில பாகங்களை அசைத்து அவர் பேசியது இன்றுவரை பின்பற்றபடுகிறது.


ஒவ்வொரு கலைஞனும் அவன் தனியாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள், அதனால் அவர்களுடன் இருக்கும் இந்த பொம்மையும் தனித்தன்மையுடன் இருக்கும். உன்னிப்பாக பார்த்தால் அவர்கள் இந்த பொம்மையை ஒரு குழந்தையை போல பார்ப்பார்கள். இந்த பொம்மைகள் பல வகைகளில் கிடைகின்றன, அதன் வகைகளை இந்த வீடியோவில் பாருங்கள்...




ஆக, பொம்மை கிடைத்துவிட்டது......அதற்க்கு ஒரு பெயர் சூட்டியவுடன் அடுத்து அதை போல நீங்கள் பேச வேண்டும், அது எப்படி என்று இங்கு பாருங்கள்


நீங்கள் இப்போது ரெடி !! சிறிது நகைசுவை, பேச்சு, கதை உருவாக்கும் திறமை இருந்தால் நீங்கள் உலக புகழ் பெறலாம். யோகா செய்வது இந்த கலைக்கு மிகவும் உதவும், ஏனென்றால் மூச்சை அடக்குவது இங்கு அவசியம்...ஒரு சிறந்த வென்றிலோகிசம் வீடியோ ஒன்றுடன் இந்த கலை பற்றிய சந்தோசத்துடன் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.

8 comments:

  1. நல்லதொரு விளக்கம் :) தெரியாத தகவல் தெரியும்படி ஆனது :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சஞ்சய் கிருஷ்ணா !! அருமையான இந்த கலை இப்போது அழிந்து வருகிறது....வருந்தவேண்டிய விஷயம்.

      Delete
  2. Replies
    1. நன்றி !! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  3. பல தடவை வியக்க வைக்கும் விஷயம்....

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  4. Replies
    1. நன்றி ஜெயதேவ் சார் ! உங்களது கருத்துக்கள் என்னை உற்சாகபடுதுகின்றன !

      Delete