Thursday, January 10, 2013

சாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)

ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV) எனப்படும் இந்த வகை வாகனங்களை இப்போது சென்னை பீச்களில் போலீஸ் உபயோகிப்பதை காணலாம். இந்த வாகனங்கள் கரடு முரடான சாலைகளில், மண் நிறைந்த பகுதிகளில் எல்லாம் பயணம் செய்ய வல்லவை. ஒரு முறை இந்தோனேசியாவில் பின்டன் தீவு சென்றிருந்தபோது இந்த வாகனங்கள் பார்க்க முடிந்தது, அப்போது ஒரு ரவுண்டு சென்று வந்தோம்.


இந்த வகை வாகனங்கள் பார்க்க சிறியது போல இருந்தாலும், மிகுந்த சக்தி வாய்ந்தவை. இதில் நான்கு வீல் டிரைவ் இருப்பதால், சரியான நேரத்தில் நீங்கள் கியர் மாற்றி இதை ஓட்டி செல்ல வேண்டும். சமமான தரையில் செல்லும்போது இரண்டு வீல் டிரைவ் போதும், ஆனால் அங்கு குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் ஓட்டும்போதுதான் உண்மையான சவால் தெரிந்தது. பெரும்பாலான நேரங்களில் சேற்றில் மாற்றிக்கொண்டும், புதர்களில் சிக்கியும் என்று ஆரம்பம் மிகவும் திகிலாக இருந்தது.





எங்களுக்கு ஒரு ஆள் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் அந்த வண்டியை எப்படி இயக்குவது என்று சொல்லி கொடுத்தார், முதலில் கேட்டபோது அட இவ்வளவுதானா..... நாங்க எல்லாம் ராக்கெட்டே ஓட்டுவோம் என்று மனதில் சொல்லி வண்டியை எடுத்தேன், ஆனால் முன்னால் எலுமிச்சம்பழம் சொருக மறந்துவிட்டேன், அதனால் பயணம் ரொம்பவே நல்லாஆஆஆஆ இருந்தது !! ஒரு சதுப்பு நிலம், ஆள் உயரம் புற்கள் வளர்ந்து இருந்தது.....எங்களின் முன்னே ஒருவர் பாதை காட்டி முன்னேறுவார் அவரை தொடர்ந்து செல்ல வேண்டும், அவ்வபோது நமது காமெராவில் படம் எடுப்பார்..... அவர் எடுக்குபோது போஸ் குடுக்க முடியாதவாறு திகிலாக இருந்தது !!


அவர் ஒரு சில சமயம் இப்படி வாருங்கள் என்று சொல்லிவிட்டு முன்னே சென்று விட, நாங்கள் தவறான வழியில் சென்று விட்டு மாட்டி கொண்டோம். சில இடங்களில் மணலில் புதைந்து கொண்டு வண்டியை என்ன செய்தாலும் முன்நோக்கி செலுத்த முடியவில்லை. இது எல்லாம் அந்த வண்டியின் நாடி புரியும் வரைதான்....... சிறிது நேரத்தில் எல்லாம் புரியும்போது நீங்களும் ஒரு ஜேம்ஸ் பான்ட் ஆகி விடுவீர்கள் !! உண்மையிலேயே ஒரு திகிலும், சாகசமும் நிறைந்த பயணம் எனலாம். நமது ஊரில் இது போல் ஒன்று இருந்தால் கண்டிப்பாக ட்ரை பண்ணுங்களேன் !


Labels : Bintan, Indonesia, ATV, All Terrian Vehicle, ride, kadalpayanangal, Suresh, joy ride, fun ride

4 comments:

  1. இருந்தாலும் பயமா இருக்கிறது. மேடு பள்ளத்தில் போகும்போது ஒரு பக்கம் தூக்கிபோடுவதை போலவே இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆகாஷ், மேடு பள்ளங்களில் பல தடவை கவிழ்ந்து விடுமோ என்று அஞ்சினேன் ! ஆனாலும், ஒரு முறை கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய ஒன்று !

      Delete
  2. //சிறிது நேரத்தில் எல்லாம் புரியும்போது நீங்களும் ஒரு ஜேம்ஸ் பான்ட் ஆகி விடுவீர்கள் !! //
    ஏன் கடல் பயணங்கள் சுரேஷ் குமார் ஆக ஆகமாட்டார்களா?!!!!


    //நமது ஊரில் இது போல் ஒன்று இருந்தால் கண்டிப்பாக ட்ரை பண்ணுங்களேன் !//
    //ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV) எனப்படும் இந்த வகை வாகனங்களை இப்போது சென்னை பீச்களில் போலீஸ் உபயோகிப்பதை காணலாம். //

    கேட்டா குடுக்க மாட்டாங்களே!!!

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. //ஏன் கடல் பயணங்கள் சுரேஷ் குமார் ஆக ஆகமாட்டார்களா?!!!! // - நீங்கள் சொன்னதை ரசித்தாலும், நானெல்லாம் இன்னும் வளர வேண்டிய பையான் சார் !!

      ஹா ஹா ஹா.... போலீஸ் கிட்ட என் பேர் சொல்லி பாருங்களேன் !

      Delete