Wednesday, January 2, 2013

அறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ

 கடந்த ஆறு மாதமாக ஏதோ ஒரு வகையில் இந்த உணவகத்தை பற்றி கேள்வி பட்டு வந்திருக்கிறேன், ஆனால் இங்கு செல்ல வேண்டும் என்று மட்டும் தோன்றியதில்லை. காரணம், இங்கு இருக்கும் உணவு வகைகள், அதாவது இங்கு அமெரிக்கன், மெக்ஸிக்கன், காண்டினெண்டல் உணவு வகைகள் கிடைக்கும். பொதுவாக குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது நார்த் இந்தியன் உணவகதிர்க்கே செல்வோம், இந்த முறை அந்த முடிவை மாற்றி இங்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அந்த முடிவு ஒரு அருமையான முடிவு என்று இந்த உணவகம் சொல்லியது, அது மட்டும் இல்லை இனி இங்கே அடிக்கடி செல்ல வேண்டும் என்று முடிவும் எடுத்தேன்.







பொதுவாக சிஸ்ஸிலர் (Sizzler) எனப்படும் உணவு வகைகள் ஒரு அதிசூடான இரும்பினால் ஆன தட்டுகளில் பரிமாறப்படும், இதனால் நீங்கள் உண்டு முடிக்கும் வரை இந்த உணவு சூடாக இருக்கும். ஆனால், இந்த தட்டை நீங்கள் தெரியாமல் தொட்டால் அவ்வளவுதான்..... உங்களது விரல்கள் சூட்டினால் கொப்பளமாகிவிடும் என்பது காரண்டி ! நீங்கள் உணவு சமைக்க ஆரம்பிக்கும்போதே பக்கத்து அடுப்பினில் உணவு எடுத்து போகும் அந்த இரும்பு தட்டை சூட்டாக்க வேண்டும், பின்னர் உணவினை தயார் செய்யுங்கள். பொதுவாக வேக வைக்கப்பட்ட காய்கறி, அரிசி அல்லது நூடுல்ஸ், பாஸ்தா வைத்து, அதன் மேலே சிக்கன் அல்லது மட்டன் சமைத்து, அது முடிந்தவுடன் நீங்கள் பக்கத்து அடுப்பினில் சூடு படுத்திக்கொண்டிருக்கும் இரும்பு தட்டினில் சமைத்த உணவினை வையுங்கள், பின்னர் எண்ணை அல்லது வெண்ணையை மேலே ஊற்றுங்கள், அது அந்த சூடான தட்டினில் படும்போது சடசடவென சப்தம் ஏற்படுத்தி நல்ல புகையோடு வரும். இதை நீங்கள் உடனே நாக்கில் வைத்தால் இரண்டு நாட்களுக்கு சுவையே தெரியாத அளவு நாக்கு சுட்டிருக்கும் !!




நாங்கள் சென்று இருந்தபோது முதலில் ஸ்டப்டு மஷ்ரூம் ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு, அதன் சுவையில் மெய் மறந்திருந்தோம் என்றுதான் சொல்லவேண்டும். பொன்னிறமாக பொறிக்கப்பட்ட அந்த மஸ்ரூமின் உள்ளே நன்றாக மசிக்கப்பட்ட சீஸ் வித் காய்கறி அடைக்கபட்டிருன்தது. மெயின் மெனுவாக நாங்கள் ஸ்பைசி சிக்கன் சிஸ்ஸிலர் மற்றும் குங் பாவ் சிக்கன் சிஸ்ஸிலர் ஆர்டர் செய்திருந்தோம். அது தூரத்தில் வரும்போதே அதன் ஓசை காட்டி கொடுத்துவிட்டது, முடிவில் எங்கள் டேபிளில் வரும்போது ஒரே புகைமூட்டம். ஏதோ கனவுலகத்தில் உட்கார்ந்திருப்பது போல ஒரு பிரம்மை !! ஆனால், சாப்பிட ஆரம்பித்தபோது அதன் சுவை எங்களை கட்டிபோட்டது. பேசிக்கொண்டே சாபிட்டோம், இதனால் நேரம் ஆனாலும் அந்த உணவின் சூடு மட்டும் குறையவே இல்லை.



நன்கு உண்டுவிட்டு, அடுத்து டேசெர்ட் ஏதாவது ஆர்டர் செய்யலாமா என்று யோசித்தோம், அதில் சிஸ்ஸிலர் எங்களை கவர்ந்ததால் அங்கு இருந்த சிஸ்ஸிலிங் சாக்லேட் ஆர்டர் செய்தோம். அதாவது ப்ரௌனி கேக் மேலே வெண்ணிலா ஐஸ் கிரீம் போட்டு, அதை ஒரு சூடான இரும்பு தட்டில் கொண்டு வந்து விட்டு, பின்னர் எங்களின் முன்னே சாக்லேட் சாஸ் அதன் மேல் ஊற்றியபோது புகை கிளம்பியது. அதை சாப்பிட ஆரம்பித்தபோது, இதற்காகவே இங்கே வரலாம் என்று தோன்றியது !!


பஞ்ச் லைன் :
சுவை               -      சிஸ்ஸிலர் (Sizzler) உணவின் சுவை மிகவும் அருமை. விலை அதிகமானாலும் அந்த சுவைக்கு கொடுக்கலாம் என்று தோன்றும்.

அமைப்பு         -       பெரிய இடம், ஸ்மோகிங் - நோ ஸ்மோகிங் என்று பிரிக்கப்பட்ட இடம், பார்கிங் வசதி உள்ளது, லைட் வெளிச்சம்தான் கம்மி. இது பப் போன்ற இடம் ஆதலால் பெரியவர்கள், குழந்தைகளுடன் போவது பற்றி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் !
பணம்              -      கொஞ்சம் விலை ஜாஸ்திதான் !! மெனு கார்டின் சில
பக்கங்கள் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.
சர்வீஸ்           -       நல்ல சர்வீஸ் !

அட்ரஸ் :
RMZ Infinity,
Old Madras Road,
Bangalore - 560 016.

46/2, Kalpak Arcade,
Church Street,
Bangalore - 560 001.

1, Carlton Towers,
Old Airport Road
மெனு கார்டு :



No comments:

Post a Comment