Friday, January 11, 2013

உயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்

 சிகாகோ.... நான் சென்ற முதல் அமெரிக்க நகரம் ! அமெரிக்கா என்றாலே வானை தொடும் கட்டிடங்கள் என்று நமக்கு ஒரு எண்ணம் உண்டு. அதுவும் நீங்கள் அந்த வீதிகளில் நடந்து போகும் போது, கழுத்தை சுளுக்கி கொள்ளும் அளவுக்கு உங்களது தலையை தூக்கி பார்க்கும் அளவுக்கு உயரம் என்றால் மலைப்பு இருக்கத்தானே செய்யும். சிகாகோ நகரில் மிக பெரிய கட்டிடம் என்றால் இந்த சியர்ஸ் டவர்தான். அதன் உச்சியில் சென்று நீங்கள் பார்க்கும்போது உங்கள் முன் விரியும் முழு சிகாகோ நகரமும் சிறியதாய் தெரியும் !



இந்த கட்டிடத்திற்கு வில்லிஸ் டவர் என்ற பெயரும் உண்டு. 1969ம் வருடம்  Sears, Roebuck & Co. என்ற மிக பெரிய கம்பெனி தங்களது பெருகும் ஊழியர்களை எல்லாம் கொண்டு ஒரு கட்டிடம் அமைக்க திட்டமிட்டது. சுமார் மூன்று லட்சம் சதுர அடியில் ஒரு கட்டிடம் கட்ட அன்று திட்டமிடப்பட்டது, 108 மாடிகள் கொண்ட 1451 அடி உயரம் உடைய கட்டிடம் 1973இல் கட்டி முடிக்கப்பட்டது. நியூயார்க்ன் வேர்ல்ட் டிரேடு சென்ட்டர் (ஒசாமா பின் லேடன் இடித்த கட்டிடம்) கட்டிடம் அப்போது கட்டப்பட்டு கொண்டிருந்தது, அதை விட வெகு சில மாடிகள்தான் இந்த சியர்ஸ் டவர் சிறியது. ஆனால், அதை முந்த வேண்டும் என்று இரண்டு பெரிய ஆண்டெனா கொண்டு இதன் உயரம் அதிகரிக்கப்பட்டு சுமார் 25 வருடங்களாக அமெரிக்க வரலாற்றில் உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்றது.


 
இந்த கட்டிடத்தை கட்டி முடித்தபோது பலரும் சென்று பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தனர், இதனால் ஜூன் 22, 1974ம் ஆண்டு பொதுமக்களுக்காக 103வது மாடி வேடிக்கை பார்க்கும் தளமாக ஆக்கப்பட்டது. இந்த தளம் தரையிலிருந்து 1353 அடி (412 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. நீங்கள் இந்த மாடிக்கு செல்வதற்கு ஸ்கை டெக் என்னும் முதல் தளத்தில் 17.5$ கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும், பின்னர் லிப்ட் உள்ளே நுழைந்தால் ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் காது அடைகும்படியான வேகத்தில் உங்களை 103வது மாடியில் கொண்டு செல்லும்.

மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.....சியர்ஸ் டவர்


இன்று துபாயில், மலேசியாவில் என்று உலகம் முழுவதும் உயரமான கட்டிடங்கள் கட்ட பட்டாலும் அதற்க்கு முன் உதாரணமாக கட்டப்பட்டது இது. அந்த காலத்தில் சில பல டெக்னாலஜி குறைவு என்றாலும் இன்றும் மனிதனின் மூளைக்கு சாட்சியாக நிற்கிறது இந்த கட்டிடம், நீங்களும் அந்த 103வது மாடி சென்று பார்க்கும் போது இந்த உண்மை உங்களுக்கு புரியும் !

Labels : Big building, Sears tower, willis tower, kadalpayanangal, Suresh, Chicago, uyaram thoduvom

7 comments:

  1. இன்றும் மனிதனின் மூளைக்கு சாட்சியாக நிற்கும் கட்டிடம், பற்றி சிகரம் தொடும் சிறப்பான பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! தங்களது உற்சாகமான வார்த்தைகள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது !

      Delete
  2. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் ...நேரம் இருந்தால் வந்து பாருங்கள் ...நன்றி

    http://blogintamil.blogspot.com/2013/01/2519.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! எனது பதிவுகளை ரசித்து அதை பகிர்ந்ததற்கு ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. பயணத்தை அருமையாக என்ஜாய் செய்துல்லிர்கள் ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தாங்கள் மயிலாடுதுறையில் கணிப்பொறி ஆசிரியராக பணியில் இருந்துகொண்டு எழுதும் "என் ராஜபாட்டை" வலைபூ படித்தேன், மகிழ்ந்தேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete