Monday, January 14, 2013

அறுசுவை - பெங்களுரு ஜல்சா

முதலிலேயே சொல்லி விடுகிறேன்.... இந்த உணவகம் சென்றால் காதிலிருந்து புகை, வயிற்றின் உள்ளே எரிச்சல் எல்லாம் வரும்..... ஆனால் அது எல்லாம் அங்கு இருக்கும் உணவை உண்பதினால் அல்ல, அதன் விலையை பார்த்து !! இங்கு ஓசியில் யாராவது சாப்பிட கூபிட்டாலோ, அல்லது உங்களது கம்பெனியில் யாரவது வெள்ளைக்காரர் வந்து இந்திய சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று சொன்னாலோ மட்டும் இங்கே செல்லலாம். நீங்கள் உங்களது சொந்த செலவில் சென்று சாப்பிடலாம் என்றால் மேலே சொன்ன காதிலிருந்து புகை, வயிற்றின் உள்ளே எரிச்சல் எல்லாம் கண்டிப்பாக வரும். கீழே உள்ள படத்தில் புகைமூட்டம் தெரிந்தது என்றால் அது இதனால்தான் ! :-) ஜல்சா.... பேரே வித்யாசமாக இருக்கிறதா ?



நான் இதுவரை மூன்று முறை இங்கே சென்றிருக்கிறேன், முதல் இரண்டு முறையும் எங்களது டீம் டின்னர் என்பதால், இந்த மூன்றாவது முறை எனது குடும்பத்துடன் ஒரு பிறந்தநாள் கொண்டாடத்திற்கு ! முதலில் உள்ளே நுழையும்போதே அங்கே தெரியும் முகலாயர்களின் அரண்மனை போன்ற தோற்றம், கார் நிறுத்துவதற்கு விசாலமான இடம் என்று மிரட்டும். உணவகத்திற்கு உள்ளே நுழைந்தால் ஏதோ ஒரு அரண்மனையின் உள்ளே நுழைவது போலவே இருக்கும். இதை பார்க்கும்போது கண்டிப்பாக நீங்கள் ஒரு அரசரை போல உணர்வீர்கள் என்பது நிச்சயம். இதை நிஜமாகும் வகையில் கிரீடம், வாள் என்று உண்ணும்போது கொடுத்து அசத்துவார்கள் !



இதன் பின்னர் அவர்கள் தரும் மெனு கார்டு பார்க்கும்போது அட, அம்பானி இங்கு வந்து சாப்பிட்டு இருப்பார் போல என்று தோன்றுவது நிச்சயம் ! எதை எடுத்தாலும் இருநூறு ரூபாய்க்கு குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டது அழகு ! நாங்கள் ஆர்டர் செய்ததில் ஜல்சா கி பசந்த், வெஜ் பிளாட்டர் மற்றும் சிக்கன் பாட்டியாலா ஆகியவை 
மிகவும் நன்றாக இருந்தது, மற்றதெல்லாம் வேறு இடங்களில் உள்ளது 
போல்தான். இங்கு நீங்கள் சில இடங்களில் அமராமல் இருப்பது நல்லது, நாங்கள் ஒரு கூண்டு போன்ற அமைப்பின் உள்ளே உட்கார்ந்து விட்டு வெளிச்சமே இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம் !


சில நேரங்களில் ஒரு திரையை வைத்து கஜல் பாடல்களை ஒளிபரப்பினர், ஆகவே நீங்கள் உட்காரும் இடத்தை பார்த்து உட்காருங்கள். முடிவில் நீங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது வரும் பில் பார்த்து கண்டிப்பாக பயப்பட வேண்டாம். சாப்பிட்ட சாப்பாடு உடனடியாக ஜீரணம் ஆகும் என்பது நிச்சயம் !




பஞ்ச் லைன் :
சுவை               -      சில உணவு வகைகள் எல்லாம் பாரசீக, முகலாய உணவுகள். அவை இங்கு மட்டுமே கிடைப்பதால் மிஸ் செய்ய வேண்டாம்.

அமைப்பு         -       பெரிய இடம், வேலேட் பார்கிங் வசதி உள்ளது, லைட் வெளிச்சம்தான் கம்மி.

பணம்              -      ரொம்பவே விலை ஜாஸ்திதான் !! யாரவது வகையாக மாட்டினால் இங்கே சொல்லலாம் ! மெனு கார்டின் சில பக்கங்கள் கீழே
கொடுத்துள்ளேன் பாருங்கள்.
சர்வீஸ்           -       நல்ல சர்வீஸ் ! அப்புறம் இவ்வளவு விலைக்கு இது கூட வேண்டாமா ?

அட்ரஸ் :

NO.25, OUTER RING ROAD
DODDANEKUNDI VILLAGE
MARATHAHALLI
BENGALURU – 560037
CALL : 080 32425757 / 080 32436767 / 9886657788 / 9886687788


மெனு கார்டு :

இவர்களது மெனு பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.....ஜல்சா மெனு





4 comments:

  1. நல்ல சாப்பாடு .........
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
    அன்புடன்
    நாடிகவிதைகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணி ! தங்கள் வாழ்த்துக்கள் பொங்கலுக்கு இனிமை சேர்த்தது ! தங்களது நாடி கவிதைகள் எல்லாம் பலே ரகம்....உங்களை தொடர்கிறேன் !

      Delete
  2. அடிக்கடி இந்த மாதிரி பதிவுகள் போடுங்கள், எங்கள மாதிரி ஏழை பாழைகள் அந்தப் பக்கமே தலை கூட வச்சுப் படுக்காம இருந்துக்குவோம்.

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் இப்படி சொல்லிடீங்க...... கண்டிப்பாக நீங்கள் பெங்களூர் வரணும், உங்களோடு நான் உணவு அருந்தணும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete