Wednesday, January 16, 2013

சாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்

ஜப்பான் என்றாலே நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது இந்த புல்லெட் ரயில் இல்லையா ? நாம் எல்லாம் ட்ரைன் என்று சொல்லி வாயை பிளந்து பார்த்து கொண்டிருக்கும்போது, மின்னல் நொடிகளில் உங்களை கடக்கும் இந்த அதிசயத்தை கண்டால் வாயை எவ்வளவு தூரம் திறப்போம் என்று தெரியவில்லை !! ஜப்பானில் இதற்க்கு ஷின்கான்ஷேன் என்று பெயர். டோக்கியோவில் இருந்து பல ஊர்களுக்கு செல்லும் இந்த  புல்லெட் ரயில் என்பது வெளியிலிருந்து பார்த்தாலே ஒரு அதிசயம் என்றால், உள்ளே நீங்கள் உட்கார்ந்து பயணம் செய்தால் எப்படி இருக்கும்...... அந்த அனுபவம் தான் இந்த பதிவு !





1964இல் ஆரம்பிக்கப்பட்ட (அப்ப எல்லாம் நான் பொறக்கவே இல்லை, இன்று என் மகன் பிறந்தும் இந்த புல்லெட் ட்ரைன் இன்னும் இந்தியா வரவில்லை !! ) இந்த புல்லெட் ரயில், இன்று 2837 கிலோமீட்டர் நீண்ட பயணம் உடையதாய் இருக்கிறது. சுமார் 240 - 300 கிலோமீட்டர் வரை ஒரு மணிக்கு பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரயில், ஆண்டுக்கு சுமார் 15 கோடி பயணிகளுக்கு இந்த சேவையை வழங்குகிறது. இந்த ரயில் திட்டத்தை துவக்கியவர்கள் என்று ஹிடெஒ ஷிமா மற்றும் ஷிஞ்சி ஷோகோ ஆகியோரை குறிப்பிடுகின்றனர்.





அந்த ரயிலை பார்க்கும்போதே உங்களுக்கு உற்சாகம் தொற்றி கொள்ளும் என்பது நிச்சயம். நான் டோக்கியோவில் இருந்து செண்டாய் சென்று வந்த அந்த பயணம், ஒரு அற்புத அனுபவம் என்றால் அது மிகையில்லை. டிக்கெட் விலை சுமார் 11000 யென் (சுமார் ஏழாயிரம் ரூபாய் ஒரு ஆளுக்கு) ஆனது. அந்த டிக்கெட் வாங்கும்போதே வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. ஸ்டேஷன் சென்று அந்த ரயிலை பார்த்தவுடன், இதில் நாம் பயணம் செல்ல போகிறோம் என்பதே ஒரு கனவா என்று தோன்றியது. உள்ளே சென்று எனது சீட்டில் உட்கார்ந்தவுடன் சிறிது நேரத்தில் ரயில் நகர ஆரம்பித்தது, அப்போதிலிருந்து எனக்கு முன் தெரியும் தகவல் தெரிவிக்கும் சாதனத்தில் ஒளிரும் எழுத்துக்களையே பார்த்து கொண்டிருந்தேன் !! அதில் இந்த ரயில் செல்லும் வேகம் தெரியும், அது சிறிது சிறிதாக ஏறும்போது எனக்கு இங்கே டென்ஷன் ஏறியது !! முடிவாக அது 300 கிலோமீட்டர் வேகம் தொட்டபோது வெளியில் பார்த்தால் எல்லாம் வெகு வேகமாக பின்னோக்கி ஓடியது கண்டு ஒரு ஆனந்தம். உள்ளே சிறிது அதிர்வுடன் மட்டும் அது அந்த வேகம் செல்லும்போது, அது ஒரு அதிசயம் என்றே உங்களுக்கு தோன்றும்.


ஜப்பானில் நீங்கள் எதை பார்க்க மறந்தாலும் இந்த புல்லெட் ட்ரைன் மட்டும் பார்க்க மறவாதீர்கள். அதில் பயணம் செய்தால் இன்னும் சந்தோசம்தான் !!

Labels : Japan, kadalpayangal, Shinkansen, bullet train, 300 km/hour, tokyo, saagasa payanam

8 comments:

  1. Replies
    1. நன்றி ஜெய தேவ் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  2. Hello,
    I have travelled so many times by these trains between Tokyo, OSaka and Tokoy Nagoya.
    There are three kinds of Shinkansen trains: Hikori, Kodama and Nozumi and I think Nozumi is the fastest You could feel a sudden lateral shift by few millimetres when two bullet trains cross each others. Have you experieced it? Best regards. K.Ganapathi Subramanian/ Chennai

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! ஆம், நீங்கள் சொல்லியது போல இன்னொரு ரயில் பக்கத்தில் போனபோது அடி வயிற்றில் புளி கரைத்தது உண்மை !! ஆனாலும் இன்றும் நினைவில் நிற்கிறது அந்த பயணம் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. நல்ல பகிர்வு, தேவையான அளவிற்கு கச்சிதமான விளக்கம்.
    படத்த்தில் பார்க்கும் போது இந்த ட்ரைன் க்கும் தண்டவாளம் நம்ம நார்மல் ட்ரைன் தண்டவாளம் மாதிரிதான் இருக்கு. அப்படித்தானா? அல்லது ஏதும் வித்தியாசமான அமைப்போடு கொண்டதா?

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே.... இந்த தண்டவாளம் பார்பதற்கு ஒன்று போல இருந்தாலும், இது மக்னெடிக் முறை கொண்டது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  4. Replies
    1. நன்றி ஷரிப் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete