Friday, January 18, 2013

உலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா

 பட்டம் விடுவது என்பது நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று, அதுவும் நீங்கள் இந்த வயதில் உங்கள் ஊரில் பட்டம் விட்டால் உங்களை மேலும் கீழும் பார்பார்கள். அப்படி நீங்கள் பட்டம் விட ஆசைபட்டால் நீங்கள் போக வேண்டியது "ஜெய்பூர் பட்டம் விடும் திருவிழா". ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த விழாவிற்கு உலக மக்கள் அனைவரும் இங்கு வருவார்கள்.



உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் பட்டம் விடுவதற்கு (??!) வருவார்கள். தங்கள் திறமைகளை, வித விதமான பட்டம் செய்வதில் காண்பிப்பார்கள். வானமெங்கும் வண்ண மயமாக இருக்கும் அந்த நாள். இது என்று தொடங்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் அன்று மகர சங்கராந்தி.... அன்று சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், அதனால் பனி விலகி மக்கள் மகிழ்ச்சி அடைவதால் அதற்க்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இந்த பட்டம் விடும் திருவிழா நடப்பதாக தெரிவிக்கிறார்கள்.









வாருங்களேன்.... நாமும் ஒரு முறை சென்று பட்டம் விடுவோம் !

6 comments:

  1. தரவிறக்கம் செய்திடும் கோப்பின் அளவு என்ன? -

    http://mytamilpeople.blogspot.in/2013/01/get-file-size.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ்மகன் ! தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  2. விதம் விதமான பட்டங்கள் நல்லாயிருக்கு, இதெல்லாம் நாம எங்கே வாங்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயதேவ் தாஸ் ! இந்த பட்டங்கள் எல்லாம் இன்று வெகு சில கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன...... இந்த தலைமுறை இதை எல்லாம் மிஸ் செய்கிறது ! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. பட்டம் விடும் போது மாஞ்சா கயிறு இல்லாத சாதா நூலில் விடுங்க

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக பிறை நேசன் ! நீங்களும் வருகிறீர்களா ?? தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete