Wednesday, January 23, 2013

சோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா

புல்லாங்குழல் இசை, இன்று பல பேருக்கு இதை பற்றி தெரியுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு. இதை நாம் தனியாக கேட்கும்போது நமது மனது உள்ளே ஒரு அமைதி உண்டாவது தெரியும், அப்படிப்பட்ட புல்லாங்குழல் இசை உலகின் மன்னன் "ஹரிப்ரசாத் சௌரசியா" (Hariprasad Chaurasia) அவர்களின் இசையை நீங்கள் கேட்டு இருக்கிறீர்களா ? அதுவும் ஒரு
ஆற்றின் முன்னே தனியாக உட்கார்ந்து கொண்டு இந்த இசையை கேட்டால்
அதை விட  சொர்க்கம் வேறு இல்லை இந்த உலகில். காலத்தை கடந்தது இவரின் இசை, பல சமயங்களில் இவரது இசை தியானத்திற்கு பயன்படும். ஒரு மூங்கில் குச்சியில் இருக்கும் துளையினை கொண்டு ஒரு அற்புதமான இசையை தரும் இவரை அறிந்திராமல் இருந்தால் இன்றே இந்த இசையை கேளுங்கள், நீங்கள் சில பல வருடங்களை வீணாக்கி விட்டோமோ என்று வருத்தபடுவீர்கள்.



4 comments:

  1. நான் தான் முதல :) உங்களோட எல்லா பதிவுகளும் மிக அருமை :) தொடருங்கள் தொடர்கிறேன், இப்படிக்கு stay Smile :)

    ReplyDelete
    Replies
    1. சஞ்சய்.... நீங்கள் போட்ட குழந்தையின் எழுதும் திறன் பற்றிய பதிவு அருமை. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  2. இதில் உள்ள சுகமே தனிதாங்க... என்னமா இனிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆகாஷ், தங்களின் சமையல் குறிப்பு அருமை ! தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete