Thursday, January 24, 2013

காணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

வீட்டில் எனது மகனுடன் டிவி பார்த்து கொண்டிருந்தேன், அப்போது அவன் பட்டாம்பூச்சி என்று கத்தினான். நானும் அவனை ஆமோதித்தேன், அதை அவன் யாபகம் வைத்து கொண்டு சென்ற வார சனிக்கிழமை அன்று ஒரு பட்டாம்பூச்சி ஒன்று காண்பித்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அட இது என்ன பெரிய விஷயமா என்று தேட ஆரம்பித்த போதுதான் சில நிஜங்கள் முகத்தில் அறைந்தன. அப்போதெல்லாம் வீடு என்று இருந்தால் அங்கு சில செடிகள் இருக்கும், அதை நாடி பூச்சிகள் வரும், அதனிடம் கடி வாங்கி, உடம்புக்கு வந்து இந்த வாழ்க்கை முறையை கற்றுகொண்டோம். இன்று பூச்சிகள் என்றாலே மருந்து அடித்து கொல்ல  வேண்டும் என்ற நமது வாழ்க்கை முறையில், ஒரு சக மனிதனிடம் அன்பை எதிர்பார்ப்பது என்பது கடினம்தானே. ஒரு பட்டாம்பூச்சி இல்லா வாழ்க்கை என்பது குறை ஒன்றும் இல்லை...... ஆனால் ஒரு இனம் சிறுக சிறுக அழிகிறதே என்ற கவலை இல்லாமல் இல்லை என்பது மட்டும் உண்மைதானே.



யோசித்து பாருங்கள்.... கடைசியாக நீங்கள் எப்போது மின்மினி பூச்சியை பார்த்தீர்கள் ? நாம் சிறு வயதில் பார்த்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, வெட்டுக்கிளி, குச்சி பூச்சி, தட்டான், பொன்வண்டு, அணில், சிட்டு குருவி, கரையான், கம்பளி பூச்சி, மண்புழு, நத்தை, தவளை, தண்ணி பாம்பு போன்ற நாம் தொட்டு உணர்ந்த அந்த உயிரினங்கள் எல்லாம் இப்போது எங்கே ? ஒரு பட்டாம்பூச்சியின் இறகில் இருக்கும் அந்த ஓவியத்தை வரைந்தது யார் என்று அதிசயித்த அந்த தருணங்கள் எல்லாம் இப்போது எங்கே ?






அன்று வீடுகளில் பறவை கூடு கட்டுவதும், அணில் சமையலறை வந்து அரிசி பொறுக்குவதும், அம்மா போட்ட கோலத்தை திங்க பிள்ளையார் எறும்பு வருவதும், மழை பெய்தால் தவளை கத்துவதும், அம்மா வீட்டின் முன் வைத்த பூச்செடியில் இருக்கும் தேனை சுவைக்க வரும் பட்டாம்பூச்சியும், முருங்கை மரத்தில் ஊரும் கம்பளிபூச்சியும், செடி வைக்க குழி தோண்டும்போது தோன்றும் மண்புழுவும், மழை பெய்து ஊரும் சாலை ஓரங்களில் தெரியும் நத்தைகளும், காலி பிளாட்களில்  ஓடி ஓடி பிடித்த தட்டான் பூச்சி, ஊருக்கு வெளியே இருக்கும் கரையான் புற்று என்று இயற்கையோடு சேர்த்திருந்தது அந்த கால வாழ்க்கை.



ஆனால் இன்று மாடுகள் என்பது பால் கொடுப்பது, கரப்பான் பூச்சிகள் என்றால் அருவருக்கதக்கது, கொசு என்றால் பட்டென்று அடித்து கொல்லு, பூச்சிகளில் எந்த வகை இருந்தாலும் காலி பண்ணு, தவளை என்பது ஒரு அசிங்கமான அமேசான் காட்டு விஷ பிராணி, பட்டாம்பூச்சி என்றால் துரத்து, கோழி என்றாலே தின்பதற்கு, ஆடு என்றாலே அது தோல் அறுத்து தொங்க விடப்பட்டிருக்கும், எறும்பு என்றால் கடிக்கும் என்று மிருகங்களிடம் நாம் இரக்கம் இல்லாமல் அல்லவா நடந்து கொள்கிறோம். இன்று மிருங்கங்கள் என்றாலே ஜூ சென்றுதான் காட்ட வேண்டி இருக்கிறது, எந்த மிருகத்தையும் அது கொடியது என்று சொல்லி தள்ளி வைத்துதானே பார்க்கிறோம். கம்பிகளின் பின் இருப்பதால் பாதுகாப்பு மிருகத்துக்கா இல்லை நமக்கா என்பதே புரியாத வாழ்க்கைதான் நமது குழந்தைகள் வாழ்வது !!


இன்று வீடு என்பது நகரத்தில் இருக்கும் பலருக்கு பிளாட் என்று ஆகிவிட்டது. இந்த வீட்டுக்குள் என்ன செடி வளர்க்க முடியும் ? நாகரிகம் என்ற பெயரில் நாம் அடைந்ததை விட இழந்ததே மேல் என்று இன்று புரிகிறது. எனது மகன் இன்று மிருகங்களை நேசிப்பது எல்லாம் டிவியில் எனும்போது மனதில் வருத்தம்தான் வருகிறது. பாட்டி வடை சுட்டதும், மரத்தின் மீது இருந்த காக்கா வடை தூக்கி சென்றதும் இன்று வெறும் கதைகள்தான்...... ஒரு நாள் அவன் ஒரு காக்காவை நேரில் பார்க்கும்போது வியப்புடன் பார்ப்பான், அந்த வியப்பு நாம் குழந்தைகளுக்கு இயற்கையை கற்று கொடுக்க மறந்ததற்கு கிடைக்கும் சவுக்கடி இல்லாமல் வேறண்ண ??!!




Labels : Suresh, Kadalpayanangal, Thoughts, ennangal, lost nature

6 comments:

  1. சிறுவயதில் மின்மினி பூச்சிகளை வைத்து விளையாடி இருக்கிறேன்..இப்போது நகரத்தில் எங்கும் காண முடிவதில்லை...எனது கிராமத்திற்கு செல்லும் போது கண்டு இருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜீவா, எனது ஆதங்கமே நமது குழந்தைகள் இந்த இயற்கையுடன் இணைந்த வாழ்வை மிஸ் செய்கின்றனர் என்பதுதான் !!

      Delete
  2. சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது நண்பரே! நாளுக்குநாள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக்கொண்டே வருகிறது. இப்போது கிராமங்களில்கூட பூச்சிகளை கண்டால் மருந்து அடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். என்ன கொடுமை சார் இது. பெரிய பெரிய மிருகங்களை மிருக காட்சி சாலைகளில் பார்த்துவிடலாம், ஆனால் இந்த சிறு சிறு பூச்சிகளை எங்கு சென்று பார்ப்பது???

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர்கள் ஆகாஷ் !! மிருக காட்சி சாலை போல பூச்சி காட்சி சாலை என்று ஒன்று கட்ட வேண்டியதுதான் !

      Delete
  3. Replies
    1. Thanks friend !! I believe you too lose these things in your life.....

      Delete