Tuesday, January 8, 2013

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?

சமீபத்தில் எனது நண்பர்கள் சிலர் வீட்டிற்க்கு வந்திருந்தனர், மைசூர் வரை ஒரு ட்ரிப் என்று போட்டு அதில் திடீரென்று என் யாபகம் வந்து போன் செய்தனர். அவர்களுடன் பேசி விட்டு, ரயில் ஏற்றி விட சென்றிருந்தேன். முன்னால் அவர்கள் டாக்ஸியில் செல்ல பின்னே நான் அவர்களை எனது பைக்கில் தொடர்ந்தேன். ட்ரைன் சென்று விட்ட பிறகு, அன்று நாள் முழுவதும் இருந்த களைப்பினால் உடனே சென்று தூங்க வேண்டும் என்று முற்படும்போதுதான் பார்த்தேன் எனது பைக் பஞ்சர், அன்று பார்த்து பர்சில் நூறு ரூபாய் மட்டுமே, ATM கார்டு வேறு எடுத்து வரவில்லை, போன் வேறு சார்ஜ் இறங்கி இப்போதோ அப்போதோ என்று உயிர் உசலாடியது ! சனியன், அடுத்த நாட்கள் எல்லாம் பண்டிகை என்பதால் தொடர் விடுமுறைகள், கண்டிப்பாக பஞ்சர் போடுபவர் இன்று இருக்க மாட்டார், அதுவும் இந்த 11 மணிக்கு, வேர்த்து விறு விறுத்து இயலாமையுடன் இருந்தபோது தோன்றியது "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?", மற்றவர்கள் எல்லாம் சந்தோசமாக சென்று கொண்டிருக்க நான் மட்டும் எதற்கு இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்று யோசித்து பாருங்கள், இந்த கேள்வி உங்களில் அநேகம் பேருக்கு இருக்கும், ஆனால் அதில் ஒளிந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் புரிகிறதா உங்களுக்கு ?





வெகு நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த ப்ரோமோசன் ஆபீசில் யாருக்காவது கிடைக்கும், தட்கல் டிக்கெட் அவசரமாக வேண்டும் எனும்போதுதான் இந்த கரண்ட் கட் ஆகி இருக்கும், வீட்டுக்கு முக்கிய விருந்தாளி வரும்போதுதான் அன்று அரிசி குழைந்திருக்கும், நாளை பெட்ரோல் போடலாம் எனும்போதுதான் வண்டி வழியில் நிற்கும், பஸ்சில் போகலாம் என்று முடிவு செய்யும்போதுதான் அந்த பஸ் நிற்க்காமல் போகும், ஹெல்மெட் எடுத்து போகாமல் இருக்கும்போதுதான் போலீஸ் எதிர்படுவார், பணம் எடுக்க ATM செல்லும்போதுதான் அவுட் ஒப் சர்வீஸ் போர்டு தொங்கும், அந்த மாதம் மிச்சம் விழுந்த பணத்தில் எங்கேயாவது வெளியில் போகலாமா என யோசிக்கும்போதுதான் குழந்தைக்கு உடம்புக்கு முடியாமல் போகும், அடுத்த மாதம் ஊட்டி ட்ரிப் என்று முடிவு செய்தால் நியூஸ் பெண் அங்கு நிலசரிவு என்று சொல்லி கொண்டிருப்பார், இப்படி ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள், இந்த எல்லா சம்பவத்திலும் நாம் நமக்குள் கேட்கும் கேள்வி "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?".




இந்த கேள்வி கேட்கும்போது பக்கத்தில் யாராவது இருந்தால் பத்தாயிரம் காரணங்கள் சொல்வார், உதாரணமாக அதெல்லாம் டைம் சார், ஜாதகம் அப்படி, நம்ம மூஞ்சியில அப்படி எழுதி ஒட்டி இருக்கு சார், ரெண்டுல ராகு ஸ்ட்ராங்கா உட்கார்ந்திருக்கான் சார், பத்து நிமிஷம் முன்னாடி பொறந்திருக்கணும் சார்,  ராசிகல்லு போட்டு இருக்கணும், நீங்க ஒரு தடவை திருப்பதி போய்ட்டு வாங்களேன், சுழி வேலை செய்யுது, தலைவிதி வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு, முக ராசி, கை ராசி என்று நாம் கேட்கும் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?".




இந்த கேள்விகள் நமக்கு ஏதாவது நடக்காமல் போனால் மட்டுமே கேட்கிறோம் என்பது நமக்கு தெரிகிறதா என்பதுதான் விஷயம் இங்கே. நீங்கள் சந்தோசமாக இருப்பவர்களை மட்டுமே பார்க்கிறீர்கள், அதனால் ஒரு ஆதங்கம் உருவாகிறது இல்லையா ? புரியவில்லை என்றால் விளக்கமாக சொல்கிறேன்..... எனது ஆபீசில் ஒருவருக்கு ஸ்ட்ரோக் வந்தது, இன்னொருவரின் அப்பாவுக்கு கிட்னி பழுதடைந்து இருந்தது, என்னுடன் படித்த நண்பன் இன்னமும் ஒரு வெளிநாடு கூட போகவில்லை, எனது சொந்தக்காரர் கார் நன்றாக ஓட்டுவார் அவருக்கு சென்ற வாரம் ஆக்சிடெண்ட், எனது நண்பன் ஒருவனுக்கு மண்டையில் முடி இல்லை, ரோடில் வசித்து வருபவர்கள், அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்று இருப்பவர்கள், நோய் வந்து மருத்துவமனையில் பணம் இல்லாமல் இருப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அலைபவர்கள்..... இப்படி நிறைய பேரை நீங்கள் அனுதினமும் சந்திக்கிறீர்கள், அப்போது உங்களுக்கு இந்த கேள்வி தோன்றியதா "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?" என்று. உங்களுக்கு மட்டும் ஏன்  இந்த ஆண்டவன் இப்படி நல்ல வேலை, பணம், மனைவி, மக்கள், பெற்றோர், வசதி என்று கொடுத்திருக்கிறான் ? மற்றவர்களை ஏழையாக விட்ட ஆண்டவன் உங்களுக்கு மட்டும் பணம் கொடுத்து வசதியும் கொடுத்திருக்கிறாரே..... அப்போ நாம் கேட்டோமா "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?". சொகுசும், வசதியும், சந்தோசமும் கிடைக்கவில்லை எனும்போது மட்டும் இந்த கேள்வியை நாம் உபயோகிக்கிறோம் என்பது உங்களுக்கு தெரிகிறதா ? இந்த கேள்வியை நீங்கள் அது கிடைகாதபோதும் கேட்டு இருக்கிறீர்களா, சட்டென்று மனதில் ஒரு விஷயம் புரிவது போல தோன்றும் !!




சிறு வயதில் என் பெற்றோர் எனக்கு ஒரு சூ வாங்கி தரவில்லை என்று அழுது
புலம்பி நண்பனிடம்  சொல்லி கொண்டிருந்தேன், எல்லோரும் சூ போட்டு இருக்காங்க ஆனா நான் கேட்டா மட்டும் கிடைக்கலையே "எனக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது ?" என்று புலம்பினேன், இன்று யோசித்து பார்த்தால் மின்னல் கீற்று போல அப்போது என்னை கடந்து போன அந்த நொண்டி பிச்சைக்காரன் கண்களுக்கு தெரியவில்லை என்பது இப்போது உரைக்கிறது. இப்போ சொல்லுங்க நீங்க..... இந்த உலகத்தில் நிறைய பேர் ப்ளாக் வாசிக்காதபோது நீங்க மட்டும் இங்க வந்து இதை வாசிக்கிறீர்களே, "உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?!!!!!!!"

16 comments:

  1. சொல்ல எடுத்துக் கொண்ட கருவும்
    சொல்லிச் சென்ற விதமும்
    முடித்த விதமும் மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் ! உங்களது புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருந்தது, அதையும் உங்களின் கவிதைகளில் காண காத்திருக்கிறேன். தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி !

      Delete
  2. ஆமாமாம். என் கண்ணில் மட்டும் இதெல்லாம் ஏன் படுது?????

    ReplyDelete
    Replies
    1. விடுங்க மேடம்.... நாலு பேருக்கு நல்லது நடந்தால், எதுவுமே தப்பில்லை (நாயகன் ஸ்டைலில் படிக்கவும்) ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

      Delete
  3. எல்லாம் உங்களை follow பண்ணிய கொடுமை தான்..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.....பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு !

      Delete
  4. Life is not fair most of the time

    ReplyDelete
    Replies
    1. நன்றி நர்மி ! உங்களது கருத்துக்களை படிக்கும்போது பல பல கேள்விகள் மனதில் எழுகிறது ! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete
  5. நீங்க புலம்பிட்டீங்க...என்னால சொல்லமுடியலை...எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ???

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.... சிவா, நான் புலம்பிடேனா !! பதிவ நல்லா வாசிங்க, நான் புலம்புவதை போட்டு வாழ்க்கையின் கேள்வியை உங்களுக்கு உணர்த்துகிறேன் ! பட்..... உங்க அப்ப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு !

      Delete
  6. துளசி கோபால்
    /ஆமாமாம். என் கண்ணில் மட்டும் இதெல்லாம் ஏன் படுது?????/
    ரிப்பீட்ட்ட்டு!

    ReplyDelete
    Replies
    1. அஹா....இன்னொரு ரிபீட்டா, தாங்காது மேடம் !

      Delete
  7. Nicely said!. Food for thought.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இந்தியன் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல !

      Delete
  8. நல்ல சுட்டல்!.
    'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு' !!!


    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே !

      Delete