Wednesday, January 9, 2013

சோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை

ஜாகிர் ஹுசைன் - தப்லா இசை மன்னன், எனலாம் இவரை. இப்போதெல்லாம் இசை என்பது சினிமா இசை என்றாகிவிட்ட பிறகு இப்படிப்பட்ட அசகாய சூரரை எல்லாம் பார்க்கவே முடிவதில்லை. எனக்கு இசை என்பது எதுவும் தெரியாது, ஆனால் ஒரு நல்ல இசை நம்மை கட்டி போடும் என்பது இப்படிப்பட்ட இசையை கேட்கும்போது மட்டும் புரியும். இன்று யூடியூபில் ஒரு இசை பார்க்கும்போது அது மொழி தெரியாத மனிதர்களிடமும் தாக்கத்தை
ஏற்படுத்துவதை  பார்க்க முடிகிறது, அது போலவே இந்த தப்லா இசையும். இவரது கைகள் தப்லாவில் நாட்டியம் ஆடுவதை பார்க்கும்போது வியப்பும், மகிழ்ச்சியும் அடைவீர்கள் ! எனக்கு இவர் "வாஹ்....தாஜ்" என்று தாஜ்மஹால் விளம்பரத்தில் வரும்போதுதான் தெரியும், அதில் அவர் விரல்கள் இசையை உருவாகுவதை வியப்புடன் பார்த்தது இன்றும் யாபகம் இருக்கிறது !


இந்த வீடியோவை பாருங்கள், ஒரு சிறு ஓடையாக துவங்கி அருவியாக முடிவதை. கைகள் அப்படியே இசையை பொழிவதை....


இவரை பற்றி ஒரு சிறு டாகுமெண்டரி பற்பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தது, அது இவரை பற்றியும், இவரது தப்லா வாழ்கையை பற்றியும் சொல்லும்.

6 comments:

  1. இவரின் தபேலா இசை ரொம்ப பிடிக்கும்...

    இந்தியன் படத்தில் ஜாகிர் உசேன் தபேலா இவள்தானா..என்று ஒரு பாடல் கூட ஞாபகம் வருகிறது

    ReplyDelete
    Replies
    1. உங்க குசும்புக்கு அளவே இல்லை ஜீவா.... தபலா இசையை கேட்க்க சொன்னால், மனிஷா பின்னே சுற்றுகிறீர்கள் ?! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  2. உலகில் எத்துனை பேர் இருந்தாலும் நம்மவருக்கு இணை யாரும் இல்லை என்பதை நிலை நிறுத்தியவர்களில் இவரும் ஒருவர்.

    ஒத்துக்கொள்கிறீர்களா அண்ணா ?

    ReplyDelete
    Replies
    1. ஆம் தம்பி, இந்தியர்கள் வல்லவர்கள் என்று உரக்க சொல்வது இவரும் ஒருவர் ! நன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  3. உலகில் எத்துனை பேர் இருந்தாலும் நம்மவருக்கு இணை யாரும் இல்லை என்பதை நிலை நிறுத்தியவர்களில் இவரும் ஒருவர்.

    ஒத்துக்கொள்கிறீர்களா அண்ணா ?

    ரெங்கநாதன் ராமநாதன்

    ReplyDelete
    Replies
    1. ரெங்கநாதன், நீங்கள் சொல்லி நான் மறுத்து இருக்கிறேனா ?! :-)

      Delete