பார்பிக்யூ வகை உணவு வகைகள் என்பது நமது முன்னே இருக்கும் அடுப்பில் அதை வாட்டி தின்பது ஆகும். நமது கிராமத்தில் எல்லாம் மீன் பிடித்து ஆற்று கரைகளில் தீ மூட்டி சுட்டு தின்பதை இப்போது பார்பிக்யூ என்று எல்லா விதமான கறி வகைகளையும் வைத்து சொல்கிறார்கள். நன்றாக வேக வைத்த சிக்கன், மட்டன் உணவு வகைகளை ஒரு கம்பியில் குத்தி உங்கள் முன் கொண்டு வரும்போதே உங்களுக்கு நாக்கு ஊற ஆரம்பிக்கும் ! இந்த பார்பிக்யூ வேர்ல்ட் என்னும் உணவகம் இந்திரா நகரில் உள்ளது. பார்பிக்யூ நேஷன் என்னும் உணவகம் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன், அந்த உணவகம் போலவே இதுவும் !
இந்த உணவகத்தினை அந்த பார்பிக்யூ நேஷன் உணவகத்துடன் ஒப்பிட்டால் இதை நான் ஒரு ஸ்டார் ரேட்டிங் கம்மியாகவே கொடுப்பேன், அது அங்கு இருக்கும் உணவு வகைகளினால். பார்பிக்யூ நேஷன் உணவகத்தில் விலை நிறைய என்பதால், நீங்கள் ஒரு மாறுதலுக்காகவோ இல்லை குறைவாக சாப்பிடுபவராக இருந்தால் மட்டும் இங்கு செல்லலாம். முதலில் நுழைந்தவுடன் நீங்கள் சைவமா அல்லது அசைவமா என்பதை தெளிவு படுத்தி விடுங்கள். பின்னர் உங்களது முன் கனல் அடுப்பு ஒன்றை வைக்கும்போது பெங்களுரு குளிருக்கு இதமாக இருக்கும் ! பின்னர் ஒவ்வொன்றாய் வரும்போது அதில் உங்கள் முன் இருக்கும் சில்லி, லெமன் என்று சாஸை கறியினில் தடவி அடுப்பின் மேல் வைத்தால் சிறிது நேரத்தில் நன்கு வெந்த கறி தயார் !
சுவை - நன்றாக உள்ளது, ஆனால் பார்பிக்யூ நேஷன் சென்றவர்கள் இதை விரும்ப மாட்டார்கள். ஆனால், முதன் முதலில் இதை முயல முயற்சிப்பவர்கள் இங்கே செல்லலாம்.
அமைப்பு - சற்றே பெரிய இடம், பார்கிங் வசதி உள்ளது, லைட் வெளிச்சம்தான் கம்மி.
பணம் - ரொம்பவே விலை ஜாஸ்திதான் !! மெனு கார்டின் சில பக்கங்கள் கீழே
அமைப்பு - சற்றே பெரிய இடம், பார்கிங் வசதி உள்ளது, லைட் வெளிச்சம்தான் கம்மி.
பணம் - ரொம்பவே விலை ஜாஸ்திதான் !! மெனு கார்டின் சில பக்கங்கள் கீழே
கொடுத்துள்ளேன் பாருங்கள்.
சர்வீஸ் - நல்ல சர்வீஸ் ! அப்புறம் இவ்வளவு விலைக்கு இது கூட வேண்டாமா ?
அட்ரஸ் :
BBQ WORLD
#2726,off 80 ft.ROAD
NEXT TO SAPNA BOOK HOUSE
INDRANAGAR,BANGALORE.
+91-80-25287777/25298888
அட்ரஸ் :
BBQ WORLD
#2726,off 80 ft.ROAD
NEXT TO SAPNA BOOK HOUSE
INDRANAGAR,BANGALORE.
+91-80-25287777/25298888
மெனு கார்டு :
இவர்களது மெனு பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.....பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்
Labels : Barbeque world, indra nagar, bangalore, suresh, kadalpayanangal, food, barbeque
No comments:
Post a Comment