பொதுவாக பெங்களுருவில் இருக்கும் நல்ல உணவகங்கள் எல்லாம் அசைவமும் தருவதால் சில நேரங்களில் சைவம் சாப்பிட நிறையவே மெனகெட வேண்டி உள்ளது. தேடி தேடி எனது குடும்பத்தை ஒரு நல்ல சைவ சாப்பாடு சாப்பிட என்று இந்த கிரீம் சென்ட்டர் அழைத்து சென்றது கண்டிப்பாக நல்ல முடிவுதான் என்று உணவும், இடமும் சொல்லியது எனலாம். கிரீம் சென்ட்டர் என்னும் இந்த உணவகம் முழுவதும் நார்த் இந்தியன் சைவ உணவு வகைகள் உடையது, ஒரு அருமையான உள்ளமைப்பும், நல்ல செர்விசும் கூட என்றால் வேறென்ன வேண்டும் !

உள்ளே நுழைந்தவுடன் சில உணவகங்கள் போல இருட்டில் தடவி தடவித்தான் செல்ல வேண்டும் என்று இல்லாமல் நல்ல வெளிச்சத்துடன் இருப்பதால் குழந்தைகள் ஓடி விளையாடுகின்றனர். இவர்களது ஸ்பெஷல் என்பது சன்னா பட்டுரா, மற்றும் ஒனியன் ரிங்க்ஸ் என்கின்றனர், அதில் பாதி உண்மை ! நாங்கள் அதை ஆர்டர் செய்தோம், பின்னர் மெனு கார்டில் கண்களை மேய விட்டபோது எல்லா உணவு வகைகளும் சிறிது காஸ்ட்லி என்றே தோன்றியது. ஆனால், சில நேரங்களில் உணவு உண்பது மட்டும் இல்லாமல் பேசவும், ரிலாக்ஸ் செய்யவும் இது போன்ற இடங்கள் மட்டுமே உள்ளன, ஆகையால் சில நேரங்களில் இதற்க்கு செல்வதில் தவறில்லை என்றே தோன்றியது !

பஞ்ச் லைன் :
Restaurant Timings: 12:00PM - 11:30PM
Labels : Cream Center, Bangalore, food, Suresh, Kadalpayanangal, Best food, Best restaurant

முதலில் பொன்னிறமாக பொறிக்கப்பட்ட ஆனியன் ரிங்க்ஸ் வந்தபோது எல்லோரும் எங்களையே பார்க்கிறார்களோ என்று தோன்றியது. அது பரிமாறப்பட்ட முறையும், அதன் பின் வந்த நன்கு உப்பிய சன்னா
பட்டுராவும் பசியை நன்கு தூண்டியது. அதன் பின்னர் வந்த சிஸ்லிங் பன்னீர் சில்லி டிஷ் ஒன்று சிறிது சரியில்லை என்று தோன்றினாலும் அடுத்து
வந்த ஐஸ் கிரீம் அதை ஈடு செய்தது. முடிவில் ஒரு அசைவ உணவு சாப்பிட்ட பின் தெரியும் உடல் அலுப்பு இங்கு தெரியவில்லை.
சுவை - அருமையான சைவ நார்த் இந்தியன் உணவு வகைகள், எல்லாமே நல்ல சுத்தமான, நல்ல சுவை !
அமைப்பு - சற்றே பெரிய இடம், வேலட் பார்கிங் வசதி உண்டு.
பணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனால் குடும்பத்துடன் நிம்மதியாக
உண்ணலாம் !! மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன்
அமைப்பு - சற்றே பெரிய இடம், வேலட் பார்கிங் வசதி உண்டு.
பணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனால் குடும்பத்துடன் நிம்மதியாக
உண்ணலாம் !! மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன்
பாருங்கள்.
சர்வீஸ் - நல்ல சர்வீஸ் ! அதுவும் அந்த ஆனியன் ரிங்க்ஸ் மிஸ் செய்ய வேண்டாம் !
அட்ரஸ் :
ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து 100 பீட் ரோட்டில் சென்றால், உங்களுக்கு வலது பக்கத்தில் வரும் இந்த உணவகம்.
அட்ரஸ் :
ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து 100 பீட் ரோட்டில் சென்றால், உங்களுக்கு வலது பக்கத்தில் வரும் இந்த உணவகம்.
762, 100 Ft Road Indira Nagar, H.A.L.Second Stage, Bengaluru 560 038
Tel:+91(80) 41161153 / 41161154 / 9686189948Restaurant Timings: 12:00PM - 11:30PM
மெனு கார்டு :
முழு மெனு கார்டு படிக்க இங்கே சொடுக்கவும்.......கிரீம் சென்ட்டர் மெனு.
Labels : Cream Center, Bangalore, food, Suresh, Kadalpayanangal, Best food, Best restaurant
No comments:
Post a Comment