Tuesday, February 12, 2013

உயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர்,, சீனா

இதற்க்கு முன் ஷாங்காய் ஓரியண்டல் டிவி டவர் சென்று இருந்ததை பற்றி எழுதி இருந்தேன், முன்னர் அதுவே உயரமான கட்டிடம். இப்போது சீனா நன்கு பொருளாதாரத்தில் வளர்வதால் பெரிய கட்டிடங்களும் வர ஆரம்பித்து விட்டன, அதில் இப்போது உயரமானது இந்த ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர். இந்த கட்டிடத்தின் சிறப்பம்சம் என்றால் அது 100வது மாடியில் இருக்கும் கண்ணாடி தரைதான்.....யோசித்து பாருங்கள் உங்களது காலடியில் உலகம் தெரிவதை !! இதை பாட்டில் ஓப்பனர் பில்டிங் என்றும் அங்கு செல்லமாக அழைகின்றனர், படத்தினை பார்த்தால் உங்களுக்கே தெரியும் ஒரு பாட்டில் ஓப்பனர் போன்று கடைசியில் ஒரு ஓட்டை இருப்பதை !

 
1997ம் ஆண்டு இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, அப்போது 94 மாடி கட்டிடமாக கட்டுவதுதான் திட்டம், பின்னர் வந்த ஆண்டுகளில் பொருளாதாரம் நசிவடைந்ததால் இது நிறுத்தப்பட்டது. மீண்டும் 2003ம் ஆண்டு இதை எழுப்ப முனைந்தபோது சிறிது டிசைன் மாற்றப்பட்டு 101 மாடியாக அதிகரிகபட்டது. முடிவில் 2008ம் ஆண்டு இது திறக்கப்பட்டபோது சீனாவின் அதிஉயரமான கட்டிடமாக இருந்தது.


 
 
இந்த கட்டிடத்தில் சிறப்பம்சம் என்பது 100வது மாடியில் இருக்கும் பார்வையாளர் இடம்தான். இங்கு உங்களது காலின் கீழே கண்ணாடி தரை, அதில் நீங்கள் நடக்கும்போது கீழே நூறு மாடிக்கு கீழே தெரியும் தரையை பார்க்கும்போது உங்களுக்கு தலை கண்டிப்பாக சுற்றும் ! இந்த கட்டிடத்தின் முனையில் ஒரு சதுரமான ஓட்டை உண்டு, அது அங்கு அடிக்கும் காற்றில் இருந்து இந்த கட்டிடத்தை காப்பாற்றுவதற்காக. முதலில் ஒரு பெரிய வட்டமான ஓட்டையை டிசைன் செய்தனர், இதற்க்கு காரணம் சீனாவின் பாரம்பரியமான மூன் (நிலவு) என்பது வட்டமானது என்பதினால், ஆனால் சீனா எதிரியாக கருதும் ஜப்பானின் கொடியில் சிகப்பு வட்டம் உள்ளதால் அதை தவிர்த்து சதுரமாக மாற்றி விட்டனர்.


 
 
முதன் முதலில் இங்கு 100வது மாடிக்கு செல்லும்போது அடி வயிற்றில் புளி கரைத்தது என்னவோ உண்மை. முக்கியமாக எல்லோரும் கண்ணாடியில் குதிப்பது போல படம் எடுக்கும்போது "ஐயோ, செத்தோம்டா..." என்று தோன்றும். ஆனால் சிறிது நேரம் சென்றவுடன் அங்கிருந்து ஷாங்காய் நகரத்தின் அழகை ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள், அவ்வளவு அழகு. ஒரு நொடி அந்த கண்ணாடியின் மீது நின்று தரையை பார்க்கும்போது நீங்கள் பறப்பது போல உணர்வீர்கள்..... சிறகில்லாமல் பறக்கும் அந்த உணர்விர்க்காகவே அங்கு செல்லலாம் !
 
 

 
Labels : SWFC, Shanghai world financial tower, shanghai, tallest building, tower, Suresh, Kadalpayanangal

4 comments:

  1. ஆஹா... நீங்க தொட்டுடீங்க... (நாங்களும் பதிவின் மூலம்) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார், பதிவுலகில் நீங்கள் தொட்ட உயரம் இதை விட பெரிது !! நானும் தொட முயற்சிக்கிறேன்.....

      Delete
  2. தற்சமயம் - வேறு இடம் - உறவினர் மடிக்கணினி + இணையம் - நேரமில்லை (என் பதிவுகள் எழுத) - தளங்கள் வாசிப்பு மட்டும்...

    விரைவில் இணையம் வர முயல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தந்தி கிடைத்தது !! ஆவலுடன் உங்களது பதிவை எதிர்பார்க்கிறேன் !

      Delete