Monday, February 18, 2013

அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்

சுமார் ஒரு வருடத்திற்க்கு முன்பு, பெங்களுருவில் நல்ல இட்லி எங்கு கிடைக்கும் என்று தேடியபோது எல்லோரும் சொன்னது இந்த பிராமின்ஸ் காபி பார். ஆனால், எனது வீட்டிலிருந்து அது மிக மிக தொலைவு என்பதாலும், அங்கு மட்டும் இட்லி என்பது அப்படி என்ன ஸ்பெஷல் என்று நினைத்தாலும் அங்கு செல்லவில்லை. ஆனால், கடந்த வாரம் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று அங்கு செல்ல, அந்த இட்லியை சாபிட்ட உடன்தான் நான் ஒரு வருடம் வரை வேஸ்ட் செய்துவிட்டேன் என்று தோன்றியது, இது மிகை இல்லை......ஒரு நிச்சயமான உண்மை.1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று பெங்களுருவில் எல்லாராலும் விரும்பப்படும் இந்த உணவகம் மிகவும் சிறியது. கிடைப்பது என்பது இட்லி, வடை, உப்புமா, கேசரி, காபி - டீ. ஆனால், இதை சாப்பிடவும், பார்சல் கட்டி செல்லவும் அந்த ஏரியாவில் பார்கிங் புல் எனப்படும் அளவுக்கு கும்பல் என்றால் நீங்கள் அந்த இட்லிக்கு எவ்வளவு சுவை இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் தரும் இட்லிக்கு சட்னி மட்டும்தான், சாம்பார் எல்லாம் இல்லை !


முதலில் பார்கிங் தேடி அலைந்து அலைந்து நிறுத்திவிட்டு சென்றால், அங்கு எனக்கு முன்னே மிக பெரிய க்யு. சிலர் பாத்திரங்கள் எல்லாம் பார்சலுக்கு கொண்டு வந்திருந்தது கண்டு சற்று மிரண்டுதான் போனேன். முடிவில் என் முறை வந்தபோது இட்லி மற்றும் காபி ஆர்டர் செய்துவிட்டு அடுத்து இட்லி க்யூவில் நின்றேன் (ஐயோ, எத்தனை க்யு ??!), என் முறை வந்தபோது இரண்டு சூடான இட்லிகளை ஒரு சிறிய பிளேட்டில் போட்டு, அதில் சட்னி ஊற்றியபோது நான் கையில் எடுத்தேன், எனக்கு முன்னே சிலர் அதை திருப்பதி தேவஸ்தான பிரசாதம் போல் கொண்டு சென்றது கண்டு எனக்கு காமெடியாக இருந்தது. இருந்தும் ஒரு விள்ளல் எடுத்து அந்த சட்னியில் தொட்டு வாயில் வைத்தபோது அங்கு கும்பல் கும்பலாக நின்று சாப்பிடுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை என்று உணர்ந்தேன். நன்கு பஞ்சு போன்ற இட்லி, மிதமான காரமும், புளிப்பும் நிறைந்த தேங்காய் சட்னி என்று அருமையாக இருந்தது.


சிலர் இரண்டு இட்லிக்கு ஒரு பக்கெட் சட்னி சாபிடுகிறார்கள். இங்கு சட்னி ஊற்றுவதர்க்கென்றெ ஒருவர் உட்கார்ந்திருப்பது மக்கள் இதை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு சான்று ! முடிவில் அந்த இட்லியை சாபிட்டுவிட்டு காபி ஒன்றை குடிக்கும்போது அந்த நாள் மிகவும் இனிமையாக இருந்தது என்று தோன்றியது.


பஞ்ச் லைன் :

சுவை -   அருமையான இட்லி மற்றும் சட்னி  ! எல்லோரும் சொல்லும்போது நானும் அப்படி என்ன சுவை என்றுதான் நினைத்தேன், ஆனால் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் !

அமைப்பு -  சிறிய இடம், பைக்கில் சென்றால் அங்கேயே பார்க் செய்யலாம், கார் என்றால் இடம் கிடைப்பது கடினம். உட்கார இடம் எல்லாம் கிடையாது, நின்று கொண்டேதான் சாப்பிட வேண்டும்.

பணம் - ரொம்பவே விலை கம்மி  !! மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.

சர்வீஸ் - மிக நீண்ட க்யு, எல்லாமே செல்ப் சர்வீஸ் ! சட்னிக்கு என்று ஒரு தனி ஆள், வேண்டும் அளவு கேட்டு வாங்கி சாப்பிடலாம் !

அட்ரஸ் :

மெனு கார்டு :Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Bengaluru, Bangalore, Brahmins coffee bar, best idli, idly

20 comments:

 1. பசிக்கிறதால் உடனே செல்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நீங்கள் இங்கே வரும்போது கூட்டி கொண்டு செல்கிறேன் !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete
 2. Romba arumaiya rasichu sapturikkinka.. Sir ellarum ippadi hotels pathi pathivu eluthina enkala mathiri abroad la irukkavanka romba pavam sir..!!! Poramaiya irukku..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை சொல்கிறேன் அவ்வளவுதான் !! பேசாம நீங்க ஒரு பிரான்சைஸ் அங்கு ஆரம்பித்தால் என்ன ?

   Delete
 3. நல்ல பதிவு சார்... இட்லிக்கு சீக்கிரம் பான்ஸ் கிளப் ஆரம்பிக்கவும் :-)

  ReplyDelete
  Replies
  1. அட....இப்போ சொன்னது கம்மிதான். இன்னும் சில இடங்களில் இது போலவே இட்லி நன்றாக இருக்கிறது, விரைவில் எதிர் பாருங்கள். சரி, நம்ம பான்ஸ் கிளப்பிற்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லுங்கள் !!

   Delete
 4. என்ன சார், ஒரு வழியா சாம்ராஜ்பேட் இட்லி கடைக்கு போய் இட்லியை டேஸ்ட் பண்ணியாச்சு போலருக்கு?? இட்லி மேல ஒரு உருண்டை வெண்னெய் போடுவாங்களே அதை மிஸ் பண்ணிட்டீங்களா??

  அடுத்து லால்பாக் பக்கத்துல இருக்கும் எம் டி ஆர் ஹோட்டல் போய் சனி/ஞாயிறுல மதிய சாப்பாடு முயற்சி பண்ணி பாருங்க! வித்தியாசமான அனுபவமா இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. தக்குடு சார், ஆமாம் ஒரு வழியா சாப்பிட்டு இந்த ஜென்மத்திற்கு புண்ணியம் தேடியாகிவிட்டது !! MTR மசாலா தோசையும் சுவைத்து பார்த்தேன், விரைவில் பதிவு வரும் !!

   Delete
 5. வயத்தெரிச்சல்.. ரங்கா ராவ் ரோடிலேயே குடியிருந்தும் இதை மிஸ் பண்ணிவிட்டேன்! அருகில் இருக்கும் வி பி பேக்கரியில் தம்ரூட் ட்ரை பண்ணிப்பாருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, தம்ரூட் பேரே சுண்டி இழுக்கிறதே, இந்த வாரமே செல்கிறேன் !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 6. இன்னும் என்ன என்ன சாப்பாட்டுக்கடை எங்கே இருக்கு என்று சொல்லுங்கப்பு, பெங்களுரு வந்தால் உபயோகமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக கும்மாச்சி.....இன்னும் நிறைய நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

   Delete
 7. நாக்கில் நீர் ஊறுதே

  ReplyDelete
  Replies
  1. நன்றி குட்டன் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.....   Delete
 8. true one of the best but too costly A plate of idly and vada with a cup of coffee will put you off by Rs57 Sooner or later they will have to accept credit cards!!!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, தற்போது பெங்களுருவில் எல்லாமே விலை ஏறி விட்டது.....என்ன செய்ய, வாழ்க மன் மோகன் சிங் !!

   Delete
 9. ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம் ! உங்களது திகட்டாத பாராட்டுக்கும், வருகைக்கும் !

   Delete
 10. Stay Tasty :)Full address Plz ! am coming to Malleswaram so I can go one time. Tqu for sharing. Stay Inform :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே, இதோ முகவரி......Come to Chamarajpet and ask for Uma Talkies; everyone knows where it is. Once your reach Uma Talkies, come towards Ramakrishna Ashram. Turn left after the Jnanodaya School and proceed for about 200 metres. You will find Brahmin's Coffee Bar at the right side corner of the road.

   Delete