Thursday, February 21, 2013

ஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா

திருநெல்வேலி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அல்வா இல்லையா ? இங்கு நெல்லையப்பர் கோவில் இருப்பது எல்லாம் இங்கு நினைவுக்கு வராமல் அல்வா மட்டும் அதுவும் இருட்டுக்கடை அல்வா மட்டும் நினைவுக்கு வருகிறது என்றால் அவ்வளவு சிறப்புடையதாக இருக்க வேண்டும் அல்லவா ? அதை தேடி சென்று இந்த பதிவுகளில் இட வேண்டும் என்று கிளம்பினேன். பயணம் மிக இனிதாக இருந்தது, அல்வா எனது மனது முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தது எனலாம். மதியம் இரண்டு மணிக்கு அந்த ஊருக்கு சென்று இருட்டு கடையை தேடி அலைந்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

முதல் அதிர்ச்சி என்பது அந்த கடைக்கு பெயர் பலகை என்று எதுவும் இல்லை, ஆதலால் சுற்றி சுற்றி வந்து இடம் தேடி தேடி அலுத்து போனேன். கடைசியில்தான் தெரிந்தது இருட்டு கடைக்கு பெயர் பலகை என்று எதுவும் இல்லை என்பது. இரண்டாவது அதிர்ச்சி என்பது அந்த கடை மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை மட்டுமே என்று. இந்த கடை அல்வாவிற்கு அவ்வளவு கூட்டம் இருந்தும் பாரம்பரியம் காக்க இரண்டு மணி நேரம் மட்டுமே, அதற்கே க்யூவில் நின்று வாங்கி செல்கின்றனர். மதியம் இரண்டு மணிதான் ஆகிறது என்ன செய்வது என்று அங்கு இருந்த மக்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர். கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது. நெல்லுக்கு பெயர் போன திருநெல்வேலியில், ராஜஸ்தான் நாட்டு கோதுமையை புகழ் பெற செய்தது என்பது வியக்கத்தக்க சாதனைதான். ஒரு வழியாக ஐந்தரை மணி ஆனபோது அன்று கடை திறந்தது, கூட்டம் முண்டி அடித்தது, சிலர் வரிசை ஏற்படுத்தினர். ஒரு வழியாக வேர்வை வழிய நான் அரை கிலோ அல்வா வாங்கினேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறிது நேரம் விட்டு அவர்களிடம் சென்று அல்வா செய்முறையை பார்க்க ஆர்வம் என்றேன், அவர் என்னை முறைத்து பார்த்தார். பக்கத்தில் இருந்த ஒருவர், அது அவர்களது பரம்பரை தொழில் ரகசியம் என்றார். என்ன முயன்றும் அதை பார்க்க அனுபவிக்கவில்லை. இந்த பயணத்தில் அல்வாவின் சுவையை மட்டும் உணர முடிந்தது !
டூர் போகும் சிலர் இந்த அல்வாவை வாங்க முடியாமல் திரும்புவார்கள், அவர்களுக்காக இந்த செய்தி. இந்த இருட்டு கடையின் மருமகன் தனியே பிரிந்து "விசாகம் ஸ்வீட்ஸ்"என்று கடை நடத்துகின்றார். அவரது கடையில் பிஜிலி சிங் படம் இருக்கும் ! இங்கு இருட்டு கடையின் சீக்ரெட் அறிந்து அல்வா தயார் செய்வதால், அந்த சுவை இங்கும் இருக்கும் என்கிறார்கள். சிலர்.....இருட்டு கடையை அதிக நேரம் திறக்க முடியாது, அது பாரம்பரிய பழக்கம், ஆதலால் அவர்களே இது போல் ஒரு தனி கடை திறந்து இருக்கின்றனர், எதுவாக இருந்தாலும் சுவையான அல்வா தயார் !ஒவ்வொரு முறை இந்த ஊர் ஸ்பெஷல் அறிய பயணம் மேற்கொள்ளும்போதும் அதீத முயற்சி செய்து செய்முறை கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்வேன், அதற்காக பலரை பார்க்க வேண்டி வரும். ஆனால், இந்த முறை என்ன முயன்றும் இந்த திருநெல்வேலி அல்வா செய்முறையை அவர்கள் பார்க்க விடவில்லை !! சரி விடுங்கள்...... சில விஷயங்கள் ரகசியம் காக்க படவேண்டும் என்று இருக்கும்போது, அது ரகசியமாகவே இருக்கட்டும் !
 
Labels : Oor special, special, tirunelveli, alwa, iruttu kadai, suresh, kadalpayanangal

21 comments:

 1. ஸ்பெஷலான சுவையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி !! திருநெல்வேலி அல்வா வாசம் உங்களை இங்கே வரவழைத்து கண்டு மகிழ்ச்சி !

   Delete
 2. ஒரு மாசம் வரை கெட்டுப் போகாமலும் இருக்காம்!!!

  இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் போர்டு போட்டு ஒரு 'போலி' கடையும் இருப்பதைப் பார்த்தீங்களா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை துளசி மேடம்..... நீங்க சொன்னதுக்கப்புறம் கேட்டு பார்த்தேன், இது போல நிறைய இருக்கு அப்படின்னு சொன்னாங்க. இருந்தாலும் அந்த அல்வா சுவை, அருமை !!

   Delete
 3. அவ்வாவைப் பற்றிக் கேட்டால் அல்வா தான்...!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா......அல்வாவை பற்றி கேட்டால் பூட்டுதான் என்றல்லவா இருக்க வேண்டும் ! நன்றி தனபாலன் சார், தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் !

   Delete
 4. Replies
  1. நன்றி அண்ணாமலையான் !!

   Delete
 5. நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்பு அங்கிருக்கும் போது இருட்டுக் கடை அல்வா எங்களுக்கு பிடிக்காது. அது கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.லாலா சத்திர முக்கில் அப்போது இருந்த லஷ்மி விலாஸ் இன்னும் சில சின்ன கடைகளில் மாலை நேரத்தில் சுட சுட வரும் அல்வா தான் பிடிக்கும். கொஞ்சம் தளர்வாக இருக்கும்.கலரும் சூப்பரா இருக்கும். அங்கிருந்த போது சூடாக,வெது வெதுப்பாக சாப்பிட்டு பழகி இப்பவும் அலவா என்றால சூடாக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் போங்கள் !! இப்போதெல்லாம் ஒரு சிகப்பு நிறத்தில் அங்கங்கே தெரியும் முந்திரியுடன் வரும் அல்வா கிடைபதில்லை, அல்வா என்றாலே சூடாக கிடைக்கும் திருநெல்வேலி அல்வாதான் !

   Delete
 6. mudindhal shanti sweets (original kadai) near tirunelveli bus stand halwa is also good try seidhu parkavum. there are lot of duplicate shanti sweets kadai at tirunelveli. but nearby medicals/hotel asoka is the original one

  ReplyDelete
  Replies
  1. Yes sir, you are right ! When I was asking for alwa, many said shanthi sweets only, but this blog is for search of famous things of tamilnadu, so went ahead with Iruttu kadai.
   Thanks for visiting my blog and the comments !

   Delete
 7. Replies
  1. Thank you so much Mr.Bawa shariff !! Thanks for visiting my blog and your comments !

   Delete
 8. ஆகா ! திருநெல்வெலி அல்வா எனும் போது வாய் ஊறுகின்றது, அதிலும் இருட்டுக் கடை அல்வா அடிச்சுக்கவே முடியாது

  ReplyDelete
  Replies
  1. நன்றி இக்பால் நண்பரே ! கண்டிப்பாக அல்வா அல்வாதான் !

   Delete
 9. http://viyaasan.blogspot.in/2013/02/27.html
  dear tamils please visit this site

  ReplyDelete
 10. Replies
  1. நன்றி நண்பரே, உங்களது கருத்து சுருக்கமாக இருந்தாலும் சுவையாக உள்ளது......அல்வா போல !

   Delete
 11. பாரம்பரியத்திற்க்கென தனிச்சிறப்பு எப்போதும் உண்டு. அது காப்பாற்ற படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  ReplyDelete