Friday, February 8, 2013

நான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்

என்ன அருமையான கதை, வசனங்கள் !! இந்த படத்தை நீங்கள் பார்க்கும்போது மனதினுள் ஒரு பூ பூப்பதை கண்டிப்பாக தவிர்க்க முடியாது எனலாம். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று சிம்பு சுற்றி திரிந்தது போல ஒரு வயதான சிம்பு !! :-)

வாலிப வயதில் காதலித்து அதை சொல்ல முடியாமல் இன்று வயதாகிவிட்ட பிறகு, தேடி அலைந்து அவளை கண்டுபிடித்து, கடைசியில் அவனது மோதிரத்தை நினைவாக இன்றும் அவள் போட்டு இருக்கும்போது மனதினுள் அலையடிக்கும் ஒரு ரசனையான ஒரு குறும்படம் ! காதலுக்கு என்றும் வயதில்லை என்று சொல்லும் அருமையான திரைகதை.



6 comments:

  1. அருமையான படம் சார்... பார்த்து முடிக்கும் பொழுது தான் தெரிந்தது இசை என் நண்பனின் நண்பன் ஜஸ்டின் என்று...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு !! எனது பாராட்டை மறக்காமல் உங்களது நண்பருக்கு தெருவியுங்கள் !

      Delete
  2. வாவ்! ரொம்ப அருமையா இருக்கு, இதன் ஒளிப்பதிவும் மிக மிக அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆகாஷ் ! தங்கள் வருகையும், உற்சாகமான கருத்துக்களும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

      Delete
  3. நான் பார்த்த குறும் படங்களில் இது 3 இடம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெற்றி திருமகன் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete