Monday, February 25, 2013

அறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு

இதுவரை தமிழ்நாடு மற்றும் நார்த் இந்தியன் உணவு வகைகளை மட்டுமே தேடி சென்று கொண்டிருந்த எனக்கு அதை தவிர உணவு வகைகள் எதுவும் இல்லையா என்று தோன்றியதன் விளைவே இந்த உணவகம் ! கேரளா உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் அவர்களின் மீன் கறி மற்றும் வறுவல் இன்று நினைத்தாலும் எச்சில் ஊரும் உணவு வகைகள். ஒரு நல்ல கேரளா உணவகத்தை தேடியபோது எல்லோரும் எனக்கு சிபாரிசு செய்தது இந்த என்டே கேரளம். இவர்களின் உணவுகள் பாரம்பரிய கேரள உணவு வகைகளை சேர்த்தது, அது மட்டும் அல்ல நிறைய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கின்றனர் !
 
 
 
இது பெங்களுரு MG ரோடு பக்கத்தில் உள்ளதால் சென்று சேருவதற்குள் டிராபிக்கில் மாட்ட வேண்டி உள்ளது. ஒரு வீட்டை எடுத்து அதை உணவகமாக மாற்றி இருப்பதால் ஒரு வீட்டிற்க்கு சென்று சாப்பிட்டது போன்றே இருந்தது.....அதுவும் பில் கொண்டு வந்து கொடுக்கும் வரைதான் !! ராஜகீயம் என்று ஒரு உணவு வகை உண்டு, அது மட்டுமே 795 ரூபாய் (அதுவும் சைவம்தான் இந்த விலை !!), எனக்கு இந்த உணவகத்தை சிபாரிசு செய்தவர்களுக்கு என்ன நன்றி கடன் (#@$%^&*####) என்றே தெரியவில்லை !!! :-( சரி, உண்ண வந்தாகிவிட்டது, சரி என்று விலையை பார்க்காமல் ஆர்டர் செய்ய ஆரம்பித்தோம்.
 
 
 
 
இங்கு இவர்கள் புட்டு, இடியாப்பம், ஆப்பம் என்று சூடாக சுட்டு தருவதால், அதை தொட்டு கொள்ள நாங்கள் திருவனந்தபுரம் கோழி பொரிச்சது, தலைச்சேரி மீன் குழம்பு என்று தொட்டு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும் என்று கூறியதால் ஆர்டர் செய்தோம். நல்ல பசியில் இருந்தபோது வந்த அந்த மீன் வறுவல் நன்கு பொன்னிறமாக வறுக்கப்பட்டு இருந்தது, அதன் பிறகு வந்த எல்லாம் மிக அருமையாக செய்யப்பட்டு இருந்தது. முக்கியமாக இந்த கோழி பொரிச்சது என்ற அந்த டிஷ் நல்ல பதத்துடன் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் கொடுத்த அத்தனை பதார்த்தங்களும் கேரளா முறைப்படி செய்யப்பட்டு அவர்களின் உணவு வகைகளின் மேல் காதல் கொள்ள வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
 
 
 
முடிவில் பில் கொண்டு வந்து கொடுத்தபோதுதான் "ஆமாம், நாம இவ்வளவு சாப்பிட்டு இருக்க கூடாது" என்று தோன்றியது. ஒருவருக்கு 800 ரூபாய் வரை ஆனது, இருந்தாலும் அங்கு கிடைத்த உணவுகளின் சுவைக்கு  கொடுக்கலாம் என்றே தோன்றியது (நிஜமாவா, சொல்லவே இல்லை )!!
 
 
பஞ்ச் லைன் :
சுவை -   நல்ல சுவை, பாரம்பரிய கேரளா முறையில் சமைக்கிறார்கள் !

அமைப்பு - சிறிய இடம்தான், பைக்கில் சென்றால் அங்கேயே பார்க் செய்யலாம், வேலட் கார் பார்கிங் வசதி இருக்கிறது. 

பணம் -      விலை ஜாஸ்தி !! மெனு கார்டின் சில பக்கம் கீழே
கொடுத்துள்ளேன் பாருங்கள்.
 
சர்வீஸ் - நல்ல சர்வீஸ் ! கொடுக்கும் பணத்திற்கு நல்ல சர்விஸ் !

அட்ரஸ் :

MG ரோடில் இருந்து ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் திரும்பும்போது உங்களது இடது பக்கத்தின் ரோட்டில் சென்றால் இதை காணலாம். சுருக்கமாக சொல்வதென்றால், மணிபால் செனட்டர் பக்கத்து ரோட்டில் இருக்கிறது.
 
 
மெனு கார்டு :


 







Labels : Arusuvai, Ente Keralam, Bengaluru kerala food, suresh, kadalpayanangal, kerala

13 comments:

  1. எந்தா...எவிட...இப்பொ...கேரளா விசேசம் போல...
    நல்லா இருக்கு...பொரிச்ச மீன் தான் கேரளாவுக்கு ஃபேமஸ்...
    அப்புறம்..கேரளாவில் பாரம்பரிய உணவு சாப்பிடணும்னா எங்காவது ஒரு சின்ன ஊரில் பொட்டி கடை போன்று இருக்கும் ஹோட்டலில் சாப்பிடனும்..அது தான் டேஸ்ட்...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க ஜீவா..... ஆனா பெங்களுருவில் சில சமயம் இப்படிப்பட்ட ருசி தேவை படுகிறதே !!

      Delete
  2. கண்ணாடி ஷோகேஸ்களில் புட்டு, புரோட்டா, இலை அடை, எல்லாம் வைத்து இருப்பார்கள்...கேரளாவில் பீப்கறி ரொம்ப ஃபேமஸே..அது சாப்பிட வில்லையே..

    ReplyDelete
    Replies
    1. பீப் கறி ஒன்னு பார்சேல் ...........பில் மட்டும் ஜீவாவுக்கு அனுப்பிடுங்க !

      Delete
  3. கேரளா போயே சாப்டுக்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வார்த்தை சொன்னாலும், திரு வார்த்தை சொன்னீங்க சீனு.......

      Delete
  4. உங்களுக்கு சரியான் போட்டி - கோவை நேரம் தான்...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ என்ன சார், அவர் எங்கே நான் எங்கே.........நானெல்லாம் சின்ன பையன் சார் ! :-)

      Delete
  5. ராஜகீயம் ஒரு தாலி மீல்ஸ் போல வெரைய்ட்டியா இருக்கே. அதனால் 795 ஓக்கேன்னுதான் தோணுது.

    ReplyDelete
    Replies
    1. மேடம் உங்க ஊர் கரன்சிக்கு ஓகே, பட் நம்ம ஊரில இந்த காசுக்கு ஒரு வாரம் கையேந்தி பவனில் சாப்பிடலாம்.......நானே அங்கே போய் தெரியாமல் மாட்டிகிட்டேன் !! :-(

      Delete
  6. Replies
    1. தேங்க்ஸ் நண்பரே !!

      Delete

  7. தேங்க்ஸ் நண்பரே !! No No... Just call "thambi" bcoz naan romba chinna Paiyan :)

    ReplyDelete