Monday, February 4, 2013

மறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி

பயணம் என்பது எப்போதுமே சுகமானது, அதிலும் இந்த அருவி குளியல் என்பது எல்லாம் நம்மை இயற்க்கைக்கு மிக அருகில் அழைத்து செல்லும் ஒன்று. வயநாடு என்பது மலைகள் சூழ்ந்த ஒரு பகுதி, கடந்த மாதம் நண்பர்களோடு அங்கு சென்றிருந்தோம். பொதுவாக நாம் எல்லோரும் அருவி குளியல் என்றால் அது குற்றாலம்தான் இல்லையா ? மெல்ல மெல்ல நமது உடல் அந்த குளிர் நீரில் நடுங்க நடுங்க சிறிது சிறிதாக நனைந்து ஒரு நொடியில் ஓவென்று விழும் அந்த அருவியின் இரைச்சலிலும், பொங்கி ஓடும் அந்த தண்ணீரிலும் குளிப்பது என்பது ஒரு சுகம். அந்த சுகத்தினை இன்று நினைத்தாலும் அங்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.




வயநாட்டில் மேப்படி என்னும் ஊரில் உள்ளது இந்த சூச்சிபாரா அருவி. அங்கு செல்லும் வழி எங்கும் பசுமையான தேயிலை தோட்டங்கள், அந்த இடத்தை அடைந்தவுடன் உங்களுக்கு மேலே வண்டியை நிறுத்துவதற்கு இடம் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி, இல்லையென்றால் ஒரு கிலோமீட்டர் முன்பே வண்டியை நிறுத்திவிட்டு செல்ல வேண்டியதிருக்கும். ஒரு வழியாக மேலே சென்றால், அங்கு கீழே இருக்கும் கட்டணத்தை கொடுத்துவிட்டு ஒரு டிக்கெட் வாங்கி கொள்ளவும். பின்னர் வழியெங்கும் உள்ள கடைகளில் சூடாக இருக்கும் ஒன்றை கொஞ்சமே கொஞ்சம் தின்றுவிட்டு மலை இறங்க ரெடி ஆகவும் !!

ஒரு இடத்தில் உங்களது டிக்கெட்டை கிழித்துவிட்டு, வாட்டர் பாட்டில் இருக்கிறதா என்று கேட்பார்கள், மறைக்காமல் இருக்கிறது என்று சொல்லவும். இருபது ரூபாய் கட்டி விட்டால், பாட்டிலின் மீது ஸ்டிக்கர் ஒன்று ஒட்டுகிறார்கள், நீங்கள் திரும்ப வரும்போது அந்த பாட்டில் (காலியாக
இருந்தாலும்) காண்பித்தால் அந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும், அந்த மலை பகுதிகளில் பிளாஸ்டிக் குறைப்பதற்கு இப்படி ஒரு நடவடிக்கை !கேமரா நிறைய  இருந்தால் நீங்கள் இன்னொரு டிக்கெட் எடுக்க வேண்டி இருக்கும்..... நாங்கள் எல்லாம் "அந்த கமெராதான் இது.." என்று ஒரு
டிக்கெட்டை வைத்து சமாளித்தோம்.

இப்போது நீங்கள் நடக்க ஆரம்பிக்கும்போது இதோ வந்து விடும் என்று தோன்றும் அளவுக்கு ஒவ்வொரு திருப்பத்திலும் தெரியும், ஆனால் நீங்கள் நிறைய நேரம் நடக்க வேண்டும். ஆனால், மனம் தளராதீர்கள் முடிவில் நீங்கள் கண்டிப்பாக ஒரு ஆச்சர்யம் கிடைக்கும். ஒரு இருபது நிமிடம் நடந்தால், ஒரு திருப்பத்தில் இருந்து பாதை வெறும் மணலும், மரங்களின் வேர்களும் கொண்டு சிறிது செங்குத்தாக இருக்கும், அதை மட்டுமே நீங்கள் கவனமாக கடக்க வேண்டும். ஒரு இடத்தில வெறும் கயிறு கொண்டு இறங்க வேண்டி இருக்கும், ஆதலால் வயதானவர்கள் இருப்பின்
ஜாக்கிரதை. முடிவில் அந்த அருவி சில மரங்களின் பின்னே ஆர்பரிக்கும் ஓசையுடன் தெரியும்போது உங்களது மனம் குதுகளிப்பது நிச்சயம்......................... ஆனால் !!

நீங்கள் பாறையில் இறங்கி நடக்க ஆரம்பிக்கும்போது, அது வழுக்கு பாறை என்பது தெரியும்போது, ஒரு பயம் மனதில் வரும். அருவியில் விழும் தண்ணீரில் நனைவதிற்கு ஒரு சரியான பாதை இல்லை, எல்லோரும் வழுக்கு பாறையில் இடையில் இருக்கும் இடத்தில் கால் வைத்துதான் அங்கு செல்ல வேண்டும், ஆகையால் ஒரு மிக பெரிய யோகாசனமே செய்ய வேண்டியது இருக்கும். நான் பார்க்கும்போதே கர்வத்துடனும், இளமை திமிருடனும் சென்றவர்கள் வழுக்கி விழுந்து இடுப்பிலும், மண்டையிலும் அடி பட்டார்கள் !! ஆனால், அதை எல்லாம் கடந்து சென்ற பிறகு அந்த அருவியில் நீங்கள் நனைய ஆரம்பிக்கும் அந்த தருணம் நிச்சயம் ஒரு சொர்க்கம்தான். வெளியே வரவே தோன்றாது !!


முடிவில் மனம் இல்லாமல் வெளியே வந்தால் உங்களுக்கு நிறைய பசிக்க ஆரம்பித்து இருக்கும். நீங்கள் இப்போது மலை ஏற வேண்டி இருப்பதால் வெளியில் செல்வதற்குள் அங்கு ஒரு சிங்கமே வந்தாலும் அடித்து சாப்பிடுவீர்கள் !! வெளியே வரும்போது சோடாக மாகி நூடுல்ஸ், பிரட் ஆம்ப்லேட், ஜூஸ் என்று கிடைக்க அந்த பசியில் சாப்பிடும்போது அருமையோ அருமை.



Labels : Soochipara water falls, Wayanad, Suresh, Kadalpayanangal, fun trip, kerala, falls

7 comments:

  1. இனிய அனுபவத்தை ரசித்தேன்...

    அதை விட அந்த வாட்டர் பாட்டில் தகவல்... எல்லா மலைப்பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தினால் மிகவும் நல்லது என்று மனம் ஏங்குகிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார், உங்களது அடுத்த பதிவுக்கும் தினமும் உங்களின் வலைபூ பக்கத்திற்கு செல்கிறேன், என்ன ஆச்சு ?

      Delete
    2. வேறு இடத்திலிருந்து-உறவினர் கணணி மூலம்-விரைவில் பதிவுகள் இட முயற்சி செய்கிறேன்...

      Delete
    3. மிக்க நன்றி சார், விரைவில் உங்களின் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் ! அப்படியே தங்கள் மொபைல் நம்பரையும் பகிர்ந்து கொண்டால் நன்று !

      Delete
  2. Good to share ur experience :) This year vacation Vayanadu :)

    ReplyDelete
    Replies
    1. Yes, dont hesitate to contact me for any guidance !! Advance wishes for your vacation !

      Delete