Tuesday, February 5, 2013

அறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு

எப்போதும் சாப்பாடு பதிவு போட்டு போர் அடிக்குது, அதனால இந்த வாரம் ஒரு மாறுதலுக்கு வாங்க டீ சாப்பிடலாம் ! நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சது என்பது ஸ்ட்ராங், மீடியம், லைட், சுகர் கம்மி, ஜாஸ்தி, ப்ளாக் டீ மட்டும்தான், ஆனா இந்த கடையில அதுக்கும் மேல...... இந்த டீ கடையை நான் நிறைய முறை கடந்து போய் இருக்கிறேன், ஆனா இந்த முறை தலை வலிக்குது அப்படின்னு நின்னு அங்க போய் பார்த்தா தலைவலி போயே போச்சு !




இந்த டீ ஸ்டாலின் ஸ்பெஷல் என்பது வித விதமான அருமையான டீ மற்றும் சூடாக கிடைக்கும் பிஸ்கட். ஜிஞ்சர், பெப்பர், ஏலக்காய், ஜீரா, மசாலா, லெமன், ஹனி, வெண்ணிலா என்று நீண்டு கொண்டே போகும் பட்டியலில் நீங்கள் திக்கு முக்காடி போவீர்கள் என்பது நிஜம். முதலில் டீ ஆர்டர் செய்துவிட்டு என்ன செய்வது என்று திரு திருவென்று முழிக்க, அவர் என்ன பிஸ்கட் சாப்பிடறீங்களா என்று கேட்க அட, நம்ம தமிழ் என்று மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. மற்ற கடைகளில் எல்லாம் ஜில்லென்று எடுத்து தரும்போது, இவர் மட்டும் ஒரு பெட்டியில் இருந்து சூடாக கொடுக்கும்போது நிஜமாகவே அமிர்தம்தான்.




நான் ஆர்டர் செய்தது ப்ளாக் ஹனி டீ, பொதுவாக பால் கலக்கிய டீ குடித்தே பழகிய எனக்கு முதலில் முகம் சுளித்தாலும், குடித்து பார்த்தவுடன் மனம் நிறைந்தது. எப்போதுமே டீ என்றால் ஒரே வகையாக குடித்து குடித்து அலுத்தவர்களுக்கு கண்டிப்பாக போய் பார்க்க வேண்டிய ஒரு கடை. இனிமே டீ சாப்பிட இங்கேதான் வரணும் !



பஞ்ச் லைன் :
சுவை -   அருமையான டீ வகைகள், எல்லாமே அறுபுதமான சுவை !

அமைப்பு -  சிறிய இடம், பைக்கில் சென்றால் அங்கேயே பார்க் செய்யலாம், கார் என்றால் 80பீட் ரோட்டில் பார்கிங் செய்யவும்

பணம் - ரொம்பவே விலை கம்மி  !! மெனு கார்டின் சில பக்கம் கீழே
கொடுத்துள்ளேன் பாருங்கள்.
சர்வீஸ் - நல்ல சர்வீஸ் ! அதுவும் அந்த சூடான பிஸ்கட் மிஸ் செய்ய வேண்டாம் !

அட்ரஸ் :

ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து 80 பீட் ரோட்டில் சென்றால், உங்களுக்கு வலது பக்கத்தில் வரும் இந்த திப்பசந்திரா ரோடு. திரும்பிய உடன் முதல் கடை.


மெனு கார்டு :

Labels : Sharon tea stall, tea, tea stall, varieties of tea, thippasandra, bangalore, Suresh, Kadalpayanangal

8 comments:

  1. பெங்களூருவில் ஓல்ட் மெட்ராஸ் ரோடா.. டீ கடை பற்றிய பகிர்வு புதுமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு ! உங்களது அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் !

      Delete
  2. ஒரு நாள் வரேன்...டீ வாங்கி கொடுங்க...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பல ஊருக்கு செல்கிறீர்கள், ஆனால் பெங்களுரு மட்டும் வர மாட்டேன் என்கிறீர்கள் !! சீக்கிரம் வாருங்கள் நண்பரே !

      Delete
  3. நான் பெங்களூர்ல இருந்தப்ப ட்ரை பண்ணி பார்த்து இருக்கேன் பாஸ்.... என்னோட நண்பன் ஒருத்தன் கூட்டிகிட்டு போனான்.ரொம்ப நல்ல டீ ஸ்டால்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும், உற்சாகம் ஊட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜ் ! இது போல் வேறு எதுவும் கடைகள் இருந்தால் கூறவும், நன்றி !

      Delete
  4. எத்தனை எத்தனை டீ வகைகள்...!!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பெங்களுரு வரும்போது உங்களை இங்கு கூட்டி செல்கிறேன் !! ஆனா.....இங்க வடை கிடையாதே !!

      Delete