கடலைமிட்டாய் என்பது நமது பெட்டி கடைகளிலும், மற்ற கடைகளிலும் வெகு சாதாரணமாக கிடைக்கும் ஒரு சுவையான ஒன்று. இன்று வரை நாக்கில் பட்டவுடன் தெரியும் அந்த ருசிக்கு மீண்டும் மீண்டும் இன்னும் ஒன்னு என்று எடுத்து தின்போம் இல்லையா. நமது தமிழ்நாட்டில் கடலைமிட்டாய்க்கு பெயர் பெற்ற ஊர் என்றால் அது கோவில்பட்டி. விருதுநகரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டரில் இருக்கும் இந்த ஊருக்கு சென்றால் எல்லோரும் பெருமையாக சொல்வது அவர்கள் ஊரின் கடலைமிட்டாய், அதை தேடி சென்று அதை செய்யும் இடத்தில் இருந்து பார்த்து, சுட சுட கையில் வாங்கி தின்ற அந்த தருணம் இனிமையானது, வாருங்கள் கடலைமிட்டாய் சாப்பிடலாம் !

ஊருக்குள் நுழைவதற்கு முன்னரே ஒரு கடையில் சென்று நன்கு விசாரித்தேன், பின்னர் அங்கிருந்து அவர்கள் சொன்ன மார்க்கெட் ரோடு சென்றேன், அங்கிருந்து கடலைமிட்டாய் கடை என்பது தடுக்கி எங்கு விழுந்தாலும் இருந்தது ! அங்கு மிகவும் புகழ் பெற்றது என்பது VVR மற்றும் MNR கடலை மிட்டாய்கள் என்பது நான் விசாரித்து தெரிந்து கொண்டது. முதலில் VVR கடையில் சென்று என்னை அறிமுகபடுதிகொண்டேன், ஆனால் அவர்கள் அந்த செய்முறையை ரகசியமாக பாதுகாப்பதால் முடியாது என்றனர். எவ்வளவோ கேட்டும் பார்க்க முடியவில்லை. பின்னர் இதன் அருகில் இருந்த MNR கடைக்கு கடைக்கு சென்று சொன்னவுடன், மிகவும் மகிழ்ந்தார்கள். உள்ளே கூட்டி சென்று அங்கு செய்யும் முறை, பக்குவம் என்று மிகுந்த அன்புடன் நடத்தினர் !

இந்த கடலைமிட்டாய் செய்வது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை, ஆனால் சரியான பக்குவம் இல்லை என்றால் நன்றாக இருக்காது. முதலில் நன்றாக வறுத்த கடலைகளை ஒரு மெசினில் போட்டு சரியான சைசில் நறுக்குகிரார்கள், அடுத்து ஒருவர் வெல்லம் (இரண்டு அல்லது
மூன்று வகையான வெல்லம் உபயோக்கின்றனர்)போட்டு காய்சுகிறார், அதன் பதம் சரியாக இருக்கிறதா என்று அவர் அடிக்கடி தொட்டு பார்கிறார். அது சூடாக இருக்கும்போது சிறிது கையில் கொடுத்து சாப்பிட சொன்னார்கள், ஆகா என்ன சுவை !! அது நன்கு பதம் வந்தவுடம் ஒருவர் சட்டென்று அந்த உடைத்த கடலைகளை அந்த வெள்ளத்தில் போட்டு நன்கு கலக்குகிறார்.
அந்த கடலைகள் வெகு சீக்கிரத்தில் அந்த வெல்லத்தில் கலந்திட வேண்டும் என்று வேக வேகமாக கலக்குகின்றனர், இல்லையென்றால் அவ்வளவும் வீண் ! அது நன்கு கலந்தவுடன், ஒரு செவ்வக வடிவான ஒரு பலகையில் அந்த பாகை சரியாக ஊற்றுகின்றனர். ஒரு கட்டையை கொண்டு அதை சமன் செய்து சிறிது நேரம் விட்டு விடுகின்றனர். பின்னர் அதில் அழுத்தமாக கோடு கிழித்து சரியான சைசில் கொண்டு வருகின்றனர். சிறிது நேரத்தில் அதை கவிழ்க்கும்போது ஒரு சட்டி நிறைய கடலைமிட்டாய் தயார் !!
இந்த கடலைமிட்டாய் சுவை என்பது தேனி மாவட்டத்தின் வெல்லம், அருப்புகோட்டை கடலை மற்றும் அவர்களின் பக்குவத்தில் வருகிறது என்று சொல்லும்போது அவ்வளவு ஆனந்தம். இவர்கள் தயாரிக்கும் கடலைமிட்டாய் இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளுக்கும் செல்கிறது. முடிவில் சூடாக ஒரு கடலைமிட்டாய் ஒன்றை எனது கையில் எடுத்து கொடுக்கும்போது அது வாயினில் கரையும்போது மனமும் மெல்ல கரைய ஆரம்பிக்கிறது !!
இந்த பதிவை நீங்கள் விரும்பினால் திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை, மதுரை மரிக்கொழுந்து போன்றவைகளை படிக்க ஊர் ஸ்பெஷல் என்னும் தலைப்பில் உங்களின் வலது புறம் இருக்கும் தலைப்பினை ச்டுக்கவும், நன்றி !
Labels : Oor special, Suresh, Kadalpayanangal, kadalaimittai, kovilpatti, chikki

ஊருக்குள் நுழைவதற்கு முன்னரே ஒரு கடையில் சென்று நன்கு விசாரித்தேன், பின்னர் அங்கிருந்து அவர்கள் சொன்ன மார்க்கெட் ரோடு சென்றேன், அங்கிருந்து கடலைமிட்டாய் கடை என்பது தடுக்கி எங்கு விழுந்தாலும் இருந்தது ! அங்கு மிகவும் புகழ் பெற்றது என்பது VVR மற்றும் MNR கடலை மிட்டாய்கள் என்பது நான் விசாரித்து தெரிந்து கொண்டது. முதலில் VVR கடையில் சென்று என்னை அறிமுகபடுதிகொண்டேன், ஆனால் அவர்கள் அந்த செய்முறையை ரகசியமாக பாதுகாப்பதால் முடியாது என்றனர். எவ்வளவோ கேட்டும் பார்க்க முடியவில்லை. பின்னர் இதன் அருகில் இருந்த MNR கடைக்கு கடைக்கு சென்று சொன்னவுடன், மிகவும் மகிழ்ந்தார்கள். உள்ளே கூட்டி சென்று அங்கு செய்யும் முறை, பக்குவம் என்று மிகுந்த அன்புடன் நடத்தினர் !

இந்த கடலைமிட்டாய் செய்வது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை, ஆனால் சரியான பக்குவம் இல்லை என்றால் நன்றாக இருக்காது. முதலில் நன்றாக வறுத்த கடலைகளை ஒரு மெசினில் போட்டு சரியான சைசில் நறுக்குகிரார்கள், அடுத்து ஒருவர் வெல்லம் (இரண்டு அல்லது
மூன்று வகையான வெல்லம் உபயோக்கின்றனர்)போட்டு காய்சுகிறார், அதன் பதம் சரியாக இருக்கிறதா என்று அவர் அடிக்கடி தொட்டு பார்கிறார். அது சூடாக இருக்கும்போது சிறிது கையில் கொடுத்து சாப்பிட சொன்னார்கள், ஆகா என்ன சுவை !! அது நன்கு பதம் வந்தவுடம் ஒருவர் சட்டென்று அந்த உடைத்த கடலைகளை அந்த வெள்ளத்தில் போட்டு நன்கு கலக்குகிறார்.
அந்த கடலைகள் வெகு சீக்கிரத்தில் அந்த வெல்லத்தில் கலந்திட வேண்டும் என்று வேக வேகமாக கலக்குகின்றனர், இல்லையென்றால் அவ்வளவும் வீண் ! அது நன்கு கலந்தவுடன், ஒரு செவ்வக வடிவான ஒரு பலகையில் அந்த பாகை சரியாக ஊற்றுகின்றனர். ஒரு கட்டையை கொண்டு அதை சமன் செய்து சிறிது நேரம் விட்டு விடுகின்றனர். பின்னர் அதில் அழுத்தமாக கோடு கிழித்து சரியான சைசில் கொண்டு வருகின்றனர். சிறிது நேரத்தில் அதை கவிழ்க்கும்போது ஒரு சட்டி நிறைய கடலைமிட்டாய் தயார் !!
இந்த பதிவை நீங்கள் விரும்பினால் திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை, மதுரை மரிக்கொழுந்து போன்றவைகளை படிக்க ஊர் ஸ்பெஷல் என்னும் தலைப்பில் உங்களின் வலது புறம் இருக்கும் தலைப்பினை ச்டுக்கவும், நன்றி !
Labels : Oor special, Suresh, Kadalpayanangal, kadalaimittai, kovilpatti, chikki
This comment has been removed by the author.
ReplyDeleteஎன்ன ஒரு ரசனை... ரசித்தேன்... சுவைத்தேன்...
Deleteதிண்டுக்கல் என்றால் பூட்டு மட்டும் தானா...? தமிழ்நாட்டின் ஹாலந்து (மலர் உற்பத்தி), சிறுமலை வாழைப்பழம், பிரியாணி..... இப்படி பலப்பல.....
அவ்வப்போது மாமனார் வீட்டிற்கு வரலாம்... தப்பில்லை... வரும் போது எனக்கு ஃபோன் செய்யலாம்... செய்யவில்லை தான் கோபம் வரும்... ஹா... ஹா.... நன்றி... சந்திப்போம்...
correct place u went, I know bit about Kovipatti, "Thangapandiyan sweets" kadalaimittai also good. It's locate Kovilpatti - thoothukodi high way
ReplyDeleteநன்றி நண்பரே, ஆம் இதையும் கேள்விபட்டேன், ஆனால் ஒரு ஊரே கடலைமிட்டாய் தயாரிக்கும்போது எதை சுவைப்பது, எதை விடுவது !
Delete