Thursday, February 7, 2013

போட்டோவுக்கு போஸ் குடுங்க....!!

சமீபத்தில் எனது மகனை கூட்டி கொண்டு பெங்களுருவில் இருந்த கப்பன் பார்க் சென்றிருந்தேன், அன்று ஞாயிறு ஆனதால் நிறைய சுற்றுலா பயணிகள் கூட்டம். எல்லோரும் தாங்கள்   அங்கு வந்து சென்றதை பதிவு செய்யும் பொருட்டு கேமரா மூலம் படங்கள் எடுத்து கொண்டிருந்தனர். அப்போது எங்கள் அருகில் இருந்து ஒரு சிறுவனது குரல் கேட்டது "அப்பா, கையை கொஞ்சம் உள்ள கொண்டு வாங்க, அம்மா கொஞ்சம் சிரிங்க, ஐய......நீங்க வேற எங்கயோ பார்க்கிறீங்க" என்று அவர்களது பெற்றோரை பலவாறு ஒரு போட்டோவுக்கு சொல்லிகொண்டிருந்தான். அப்போதுதான் கவனிக்க ஆரம்பித்தேன், இந்த புகைபடத்திற்கு எப்படி போஸ் கொடுக்கிறார்கள் என்பது. புகைப்படம் என்பது நாம் அந்த நேரத்தில் அங்கு இருந்தோம் என்பதை காட்டவா, அல்லது அந்த இடத்தில் நீங்கள் இருந்தபோது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்றா ? ஒரு புகைபடத்தில் பதிவாவது நீங்கள் அங்கு வந்து சென்றதற்கான தடம் அவ்வளவுதான், ஆனால் அதை எப்போதும் உங்களால் மறக்க முடியாது, ஆனால் ஒரு ஐந்து வருடம் கழித்து பார்த்தால் அந்த புகைபடத்தில் உம்மென்று இருக்கும் உங்கள் முகத்திலிருந்து அந்த பயணத்தின் மகிழ்ச்சியை உணர முடிகிறதா என்ன ?



ஒரு பயணம் செல்ல வேண்டும் என்று ஆரம்பித்தால் - இடம் முடிவு செய்ய வேண்டும், பஸ் அல்லது ரயில் என்று முடிவெடுக்க வேண்டும், அதை முன்பதிவு செய்ய வேண்டும், தங்கும் இடம், சாப்பிடும் சாப்பாடு, எடுத்து போகும் பொருட்கள், வீட்டை பார்த்துக்கொள்ள ஆள், அங்கு சுற்றும் இடங்கள் பற்றி ஒரு பார்வை, அங்கு நிலவும் சீதோசனம், மருந்துகள், குழந்தைகளுக்கு பால் பவுடர், கேமரா, மொபைல், சார்ஜர் என்று பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும் இல்லையா. இத்தனை திட்டமிடலுடன் உங்களது பயணம் இருக்கும்போது, அந்த பயணத்தை வெற்றிகரமாக செய்வதை, அந்த பயணம் சரியான திட்டமிடலுடன் சந்தோசமாக இருந்ததை உங்களது புகைப்படங்களில் பார்க்க முடிகிறதா என்ன ?



"போட்டோவுக்கு போஸ் குடுங்க" என்பது நாம் எல்லோரும் கேட்கும் ஒரு வார்த்தைதான், அதை சொன்னவுடன், உங்களது உடம்பு ஒரு நிமிடம் செயல் இழந்து, முகத்தில் அதுவும் வாயில் உள்ள தசைகள் மட்டும் சிறிது அசைந்து, நாம் சந்தோசமாக இருக்கிறோம் என்பதற்கு ஒரு ஆதாரமாக ஒரு புன்னகை வருகிறதே, அதுதான் நாம் அந்த இடத்தில் நாம் சந்தோசமாக வந்து சென்றோம் என்பதற்கு ஆதாரமா ?


போடோவிர்க்கு போஸ் கொடுப்பது என்பதில் இந்தியாவில்தான் ஒரு விதமான செயற்கைதனம் தெரியும், அதுவும் நாம் போஸ் கொடுக்கும்போது
எந்திரன் சிட்டி ரோபோ வந்தாலும் தோற்றுபோகும் அளவிற்கு  முகத்தை இறுக்கமாக வைக்க வேண்டுமா. இன்னும் சிலர் இந்த கைகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் தவிப்பு ஒரு மிக பெரிய காமெடியாக தெரியும். மிலிட்டரியில் ஆள் எடுப்பது போல அட்டென்ஷன் போஸ் கொடுப்பது, இடுப்பில் கை வைப்பது, கூலிங் கிளாஸ் போடுவது, பின்னால் கை கட்டுவது, மற்றவர் மேல் தோளில் கை போடுவது, பேன்ட் பாக்கெட்டில் கை விடுவது, புடைவை தலைப்பை பிடித்து கொண்டு என்று அந்த கைகளை கட்டுக்குள் வைக்க பாடு படுவார்கள்.



இந்த குழந்தைகளை போடோவிர்க்கு போஸ் கொடுங்கள் என்று சொல்லி காமெராவை அவர்கள் முன் காட்டி இருக்கிறீர்களா..... அவர்கள் கொடுக்கும் போஸ் அந்த புகைபடதிர்க்கே ஒரு உற்சாகம் வர வைக்கும். ஓடுவதும், குதிப்பதும், மூஞ்சியை அஷ்டகோணல் ஆக்குவதும், இடுப்பை வளர்த்து ஆடுவதும் என்று தெரியும் புகைப்படங்கள் இன்றும் உங்களுக்கு ஒரு உற்சாகத்தை, அந்த தருணத்தின் சந்தோசத்தை உங்களுக்கு உணர்த்தவில்லை ? நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா..... இந்தியாவில் வரும் விளம்பரங்களில், ஏதாவது ஒரு வெளிநாட்டு ஆள் இருந்தால் கையை, காலை ஆட்டிக்கொண்டு முகத்தில் ஒரு கோணல் உருவாக்கி கொண்டு இருப்பதையும், அதுவே ஒரு இந்தியனாக இருந்தால் மிலிட்டரி ஆள் போல விறைப்பாக சிரித்து கொண்டிருப்பதையும் ?





நமது கலாசாரத்தில் போடோவிர்க்கு போஸ் கொடுப்பது என்பது சும்மா நிற்ப்பது என்பது, அதை நமது குழந்தைகள் மேல் திணித்து திணித்து அவர்களும் ஆடாமல் அசையாமல் இருப்பதை கவனித்தீர்களா ? ஒரு தருணத்தின் மகிழ்ச்சியை தக்க வைப்பதே புகைப்படம், ஆகவே அந்த நிமிடத்தில் உங்கள் மனதில் தோன்றும் குழந்தைத்தனமான செய்கைகளை, உங்களது கற்பனைகளை, ஆசைகளை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஒரு புகைப்படத்தில் நீங்கள் அசையாமல் இருப்பதை விட, அசைய முயன்று கொண்டிருப்பது உங்களது இருப்பை காட்டும்....... எங்கே இந்த போட்டோவுக்கு போஸ் குடுங்க....!!




Labels : How to pose for a photo, photo, Suresh, Kadalpayanangal, Pose, Posing


6 comments:

  1. ஹா ஹா ஹா மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும் போது போஸ் கொடுத்தா கூட சிரிப்பாங்க போல... செயற்கைத் தனம் இயற்கையாக வந்து விடுகிறது என்ன செய்ய.. அற்புதமான பதிவு....

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சீனு, மிலிட்டரி ஆட்கள் கூட விரைப்பாக இருந்தாலும் புன்னகை சிந்துவதுண்டு. தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி !

      Delete
  2. நமது குழந்தைகள் மேல் திணித்து திணித்து அவர்களும் ஆடாமல் அசையாமல் இருப்பதை கவனித்தீர்களா ?

    குழந்தைகள் மீது எதையும் திணிக்காமல் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது பயன்ளிக்கும் ...

    புன்னக அளித்து மென்னகை புரிய வைக்கும் அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பக்கத்தில் யாராவது இருந்தால், சட்டென்று உங்களது மொபைல் எடுத்து அவரை போட்டோ எடுக்க போகிறேன் என்று சொல்லுங்கள், சிறிது நேரம் உங்களது மொபைல் போனை அசையாமல் வைதிருங்களேன்....... அவரும் ஆடாமல் அசையாமல் இருப்பார், இயல்பு மறந்திருக்கும் !! முயன்று பாருங்கள்.... நீங்களும் இதுபோல்தான் செய்வீர்கள் !!

      Delete
  3. சிறு வயதிலே இது போல் பழக்கப்படுத்துவதால்... சிறிது சரி இல்லையென்றாலும் கூட-கிண்டல், கேலி, திட்டு,...,..., குழந்தைகள் மேல் தவறில்லை...

    குரூப் போட்டோ எடுக்கும் போது, "எங்கே கடைசியா ஒரு முறை சிரிங்க..." என்று சொல்லும் போட்டோகிராபரை மாற்ற வேண்டும்... பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது, சில சமயம் அவர் சொல்வது நடந்து விடுகிறது... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..... சரியாக சொன்னீர்கள் சார் !! சில போட்டோ பிடிப்பவர்கள் இதை சொல்ல கேட்டிருக்கிறேன் !! தங்கள் வருகைக்கும், உற்சாகமான கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete