Saturday, February 9, 2013

மீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் !

நமக்கு எவ்வளவு வயதானாலும் மனதினுள் ஒரு குழந்தை ஒளிந்திருக்கிறது இல்லையா ? என்னதான் குழந்தைகளை சறுக்கு மரம் ஏறி விளையாடாதே என்று நாம் அதட்டினாலும் நமது மனது அங்கே சென்று சறுக்கி விளையாடுகிறது இல்லையா ? நமக்குள் ஒரு குழந்தை மனது ஒளிந்திருக்கிறது, ஆனால் வயதின் காரணமாய் அதை நாம் வெளியிட முடியவில்லை.




கோவை ஜீவா தனது பதிவுகளில் ஒரு முறை சவ்வு மிட்டாய், மட்டை ஊறுகாய் பற்றி பதிவு எழுதி இருந்தார், அதை படித்தபோது நானும் எனது சிறு வயதிற்கு சென்று வந்தது போல இருந்தது. இந்த முறை நான் ஊரில் திருவிழா என்று சென்று இருந்தபோது அங்கு விற்கும் பொருட்கள் நிறைய மாறி இருந்தன, உணவும் எல்லாம் பாஸ்ட் புட் வகைகள், மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அங்கு நிறைய ஆட்டோக்களின் பின்னால் ஐஸ் பிரீஜரை செட் செய்து விட்டு ஐஸ் விற்று கொண்டிருந்தனர், எல்லா பிள்ளைகளும் அதை சுற்றியே நின்று கொண்டிருந்தனர். அப்போதுதான் கவனித்தேன், ஒரு ஓரத்தில் சைக்கிளில் ஒரு ஐஸ் பெட்டி வைத்துகொண்டு ஒருவர் கத்தி கொண்டிருந்தார். அவரிடம் அவ்வளவாக கூட்டம் இல்லை, என்னவென்று விசாரித்தபோது அது சேமியா ஐஸ். சட்டென்று எனக்கு மனதினுள் மகிழ்ச்சி பொங்கியது. ஒன்றை வாங்கி சுவைத்தபோது சிறு வயது நினைவுகள்......



இந்த மாறும் உலகில் நாம் சிறு வயதில் அனுபவித்த கில்லி, லயன் காமிக்ஸ், பாட்டு புத்தகங்கள், பம்பரம், கவட்டா பில்ட், சீனி மிட்டாய், சக்கர மிட்டாய், மரத்தில் கட்டி ஆடும் ஊஞ்சல், புளியங்காய், கொடுக்காபுளி, சில்லாங்கல், குரங்கு பெடல் போட்டு ஒட்டிய சைக்கிள், பஞ்சு மிட்டாய், பீபீ, கூட்டாஞ்சோறு, நீள அப்பளம், குல்பி ஐஸ், ஸ்பைடர்மேன் கார்ட்டூன், காகித கப்பல், புளிப்பு மாங்காய், சுக்கு மல்லி காபி, பெரிய நெல்லிக்காய், பட்டம் விடுவது, கோலிகுண்டு என்று பல பலவற்றை மீண்டும் தேடி சென்று அனுபவித்து, அதை பற்றிய பொதுவான நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது, அதன் வடிவமே இந்த தொடர். இதனால் உங்களின் அலுவல்கள், குடும்ப வேலைகள் இடையில் சிறிது நேரம் கடந்த காலம் சென்று வந்தால் அதுவே இந்த தொடருக்கு வெற்றிதான். வாருங்கள் அடுத்த பகுதியில் நாம் சேமியா ஐஸ் பற்றியும், அதன் நினைவுகளை பற்றியும் பார்ப்போம் !!









Lables : Suresh, Kadalpayanangal, childhood, pillaiyaavom, memories, fun, child, enjoying childhood

4 comments:

  1. வாங்க...வாங்க...சேமியா ஐஸ் பத்தியும் நான் போட்டு இருக்கேன்...மலரும் நினைவுகள் எப்போதும் அருமை...சிறுவயதில் பம்பரம் விட்டது, பட்டம் விட்டது, ஓடக்கான் (ஓணான் ) வாயில் எருக்கம்பால் விட்டு கொடுமைபடுத்தினது, ராக்கெட்டில் தவளை அனுப்பியது, பனம் நுங்கில் வண்டி ஓட்டினது, சைக்கிள் ரிம்மில் வண்டி ஓட்டினது, என ஏகப்பட்டது இருக்கிறது..தூண்டியமைக்கு நன்றி...எதிர்பார்க்கிறேன் விரைவில்..

    ReplyDelete
    Replies
    1. ஜீவா, உங்களது பதிவுகள்தான் தொடரை எழுத தூண்டியது. வாருங்கள் மீண்டும் குழந்தையாவோம் !!

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் !

      Delete