Wednesday, March 20, 2013

டெக்னாலஜி - 3டி பிரிண்டர்

யாபகபடுத்தி பாருங்கள், சுமார் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஏதாவது ஒன்றை எழுதி எடுக்க வேண்டும் என்றால் டைப் ரைட்டிங் என்று இருந்தது, பின்னர் பிரிண்ட் எடுக்கலாம் என்று இருந்தது, இதன் அடுத்த தலைமுறை டெக்னாலஜி என்பது 3டி பிரிண்டர். என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா.... இன்னும் சிறிது காலத்தில் வீதிக்கு வீதி, முக்கியமாக தமிழ்நாட்டில் "இங்கு கரண்ட் இல்லாமலேயே 3டி பிரிண்டிங் செய்து தரப்படும் !"என்று எழுதி இருப்பதை விரைவில் பார்க்கலாம் !



ஒரு பொருளை நீங்கள் அப்படியே இன்னொரு பிரதி எடுத்து விட முடியும் என்பது எவ்வளவு ஆச்சர்யம். அதுவும் எப்படிப்பட்ட நுணுக்கமான பொருளாக இருந்தாலும் இதால் செய்ய முடியும். இதை சற்று விரிவு படுத்தினால்..... வீட்டிற்க்கு நீங்கள் முதல் முதலாக வாங்கிய மெடல் அனுப்பலாம், குழந்தைக்கு பொம்மையை அனுப்பலாம், அப்பாவிற்கு வாக்கிங் ஸ்டிக், அம்மாவிற்கு குக்கர் கைப்பிடி என்று எல்லாம் அனுப்பலாம் போல ?! ஆஹா.... என்ன ஒன்னு வாங்கி வைக்கலாமா ?!


No comments:

Post a Comment