Thursday, March 14, 2013

உயரம் தொடுவோம் - மவுண்ட் பியூஜி, ஜப்பான்

மவுண்ட் பியூஜி என்பது ஜப்பானில் இருக்கும் ஒரு உறங்கும் எரிமலை எனலாம். நான் ஜப்பான் சென்று இருந்தபோது இந்த மலையை எனது ஹோட்டல் ரூமிலிருந்து தினமும் பார்ப்பேன். குளிர் காலங்களில் மட்டும் தொப்பி போட்டது போல ஐஸ் அந்த மலையின் மீது இருக்கும், மற்ற காலங்களில் அது வெறும் மலை போன்றே இருக்கும். இரு முறை செல்லும்போதும் எனக்கு அங்கு செல்ல முடியவில்லை, ஆதலால் மூன்றாவது முறை அங்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். மறக்க முடியாத பயணம் அது என்றால் மிகையாகது !





உறங்கும் எரிமலையான இந்த மவுண்ட் பியூஜி, கடைசியாக 1707 - 08ம் ஆண்டில் வெடித்தது, ஆனால் இன்றும் இதை ஒரு பயத்துடனே பார்கின்றனர் ஜப்பானிய மக்கள். இது 3776 மீட்டர் உயரம் உடைய எரிமலை. ஜப்பானில் மூன்று புண்ணிய மலைகளான டேட், ஹகு மற்றும் பியூஜி மலைகளில் ஒன்று. நாங்கள் ஒரு காரில் டோக்கியோவில் இருந்து பயணித்து இங்கு சென்றடைந்தோம். காரில் மலை மீது ஏறும்போதே நீங்கள் அங்கு மரங்கள் எல்லாம் குறைவாக இருப்பதை காணலாம், இது எரிமலை பகுதியாதலால் இயற்க்கை மிக குறைவு.


2020 மீட்டர் தொலைவில் ஒரு இடத்தில நீங்கள் நிறுத்தி அங்கு இருக்கும் இயற்க்கை அழகை பார்க்கலாம். அங்கு இருக்கும் கடைகளில் ஜப்பானிய உணவுகளையும், டீயும் சாப்பிடலாம். இதன் பின் மேலே செல்ல செல்ல குளிரை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். நான் இங்கே சென்றிருந்தபோது உறைநிலையில் இருந்து ஏழு டிகிரி குளிர் இருந்தது ! ஒரு மணி கூண்டு போல அங்கு குளிரை காண்பிக்கும் கடிகாரம் இருந்தது வித்யாசமாக இருந்தது.




மேலே பார்பதற்கு என்று ஒரு கோவிலும், ஒரு கடையும் உள்ளது மற்றபடி அந்த மலையை பார்ப்பது என்பது ஒரு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஜப்பான் என்றாலே இந்த மலையை காண்பிக்கும்போது, அதை பார்க்கும் திருப்தி கொடுக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒரு உயரமான இடத்தில இருந்து ஜப்பான் நகரை பார்க்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான் !



Labels : japan, Mount Fuji, Mt. Fuji, Suresh, Kadalpayanangal, Tallest, Mountain, Fuji

4 comments:

  1. இனிய பயணம்... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் ! தங்களது வருகையும், கருத்தும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது !

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி கிருஷ்ணா ! தங்களது வருகையும் கருத்தும் என்னை உற்சாகமூட்டுகிறது !

      Delete