Saturday, March 16, 2013

சோலை டாக்கீஸ் - ட்ரம்ஸ் சிவமணி

 ட்ரம்ஸ் சிவமணி - இந்த பெயர் எல்லோருக்கும் தெரியும், அதுவும் அவரது அயராத உழைப்பு, அவர் வெளிபடுத்தும் இசையில் தெரியும் என்றால் அது மிகையில்லை. இளையராஜாவின் பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசை தனியாக தெரியும், அதுவே எனக்கு இதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பியது. ஒரு கட்டத்தில் இவரை பற்றி தெரிந்தபோது ஆச்சர்யம் ஆனது. மனிதர் பட்டையை கிளப்புவார். உதாரணதிற்கு சொல்ல வேண்டும் என்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.... இளையராஜா பாடும்போது அந்த ட்ரம்ஸ் இசை வெளியில் தெரியாது, ஆனால் அவர் சட்டென்று நிறுத்திவிட்டு தாளம் சொல்லும்போது சிவமணி அதற்க்கு ஏற்றார்போல போடும் ட்ரம்ஸ் இசை ஒரு அற்புதம் எனலாம்.





இவரை பற்றியும், இவரது வாழ்கையை பற்றியும் சுமார் 25 நிமிடத்திற்கு இந்த வீடியோவில் பேசி இருக்கிறார், ஆர்வம் உள்ளவர்கள் இதை பார்க்கலாம்....

4 comments:

  1. அவர் மிகவும் எளிமையான மனிதரும் கூட. ஒரு முறை அவரை கலிபோர்னியா திரை அரங்கில் பார்த்தபோது அடையாளம் தெரியாமல் உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே? என்று கேட்டதற்கு தன்னை அறிமுக படுத்தி எந்த ஒரு பந்தாவே இல்லாமல் நிறைய நேரம் பேசி கொண்டிருந்தார். அவர் ஸ்டாண்போர்டு பல்கலை கழகத்தில் ஒரு சிறப்பு இசை நிகழிச்சிக்கு வந்திருந்தாக தெரிவித்து கட்டாயம் வந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே, உலகில் இவரை போல மனிதர்கள் மிகவும் குறைவு, நீங்கள் அவரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி !

      Delete
  2. Replies
    1. கிருஷ்ணா ஜி , தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி !

      Delete