Saturday, March 2, 2013

சாகச பயணம் - ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ், ஜப்பான்

சில அனுபவங்கள் உங்களது வாழ்வில் மறக்காது, இன்னும் ஒரு முறை இங்கு செல்ல வேண்டும் என்று நினைக்க வைக்கும். ஜப்பானில் இருக்கும் ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் (வெந்நீர் ஊற்றுக்கள்) இந்த வகைதான். இங்கு எரிமலைகள் அதிகம் இருப்பதால், அதிலிருந்து வரும் தண்ணீர் கொதிக்கும், அந்த தண்ணீரில் நீங்கள் இருந்து எழுந்தால் கிடைக்கும் அனுபவம் என்பது கண்டிப்பாக உங்களது வாழ்வில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பேன். நமது ஊரில் எல்லாம் ஊற்று தண்ணீர் என்று வருமே, அதே இந்த எரிமலை பகுதிகளில் அதன் கீழ் இருக்கும் குழம்புகளால் வெந்நீராக வருவதே இந்த ஹாட் ஸ்ப்ரிங்க்ஸ் ! ஆனால், எரிமலை இருக்கும் இடங்களில் எல்லாம் அமில தன்மை உடைய தண்ணீர் அதிகம் என்பதால், எல்லா தண்ணீரும் வெந்நீர் ஊற்று அல்ல.


நான் ஜப்பான் சென்றிருந்தபோது அங்கு ஹகோனே என்னும் ஒரு அடங்கி இருந்த எரிமலை காண சென்றிருந்தேன் (அதை பற்றிய சுவாரசிய பதிவு விரைவில்). அங்கு இருந்த மிகவும் புகழ் பெற்ற டார்செம் என்னும் வெந்நீர் ஊற்று இடம் நன்றாக இருக்கும் என்று சொன்னதால் என்னை கூட்டி சென்றார் எனதருமை நண்பர் யகவா சான். உள்ளே நுழையும் முன் ஒரு மெசின் இருக்கும், அதில் 2000 யென் (சுமார் 1200 ரூபாய் வரை) செலுத்தி ஒரு சீட்டு பெற்று கொள்ள வேண்டும். பின்னர் உள்ளே செல்வதற்கு முன் உங்களது காலணிகளை கழற்றி விட்டு அங்கே இருக்கும் ரிசப்ஷன் சென்றால் உங்களுக்கு ஒரு லாக்கர் கீயும், இரண்டு துண்டும் கிடைக்கும்.




இங்கு கேமரா உபயோகிக்க கூடாது என்பதால் என்னின் எந்த புகைப்படமும் இங்கு காணப்படாது, ஆனால் அனுபவம் உண்மை ! நீங்கள் உள்ளே சென்றவுடன் உங்களை தாக்குவது..... ஆண்கள் எல்லோரும் பிறந்த மேனியுடன் அலைவதை (இப்போது புரியுமே ஏன் கேமரா உபயோகிக்க கூடாது என்று) !! இந்த வெந்நீர் ஊற்றுக்களில் மருத்துவ குணம் இருக்கிறதாக சொல்லப்படுவதால், நீங்கள் பிறந்த மேனியுடந்தான் இங்கே குளிக்க வேண்டும். ஒரு வழியாக உங்களின் மனதை சமாதானபடுத்தி, பிறந்த மேனியுடன் சென்று முதலில் பக்கத்திலிருக்கும் குழாயிலிருந்து உங்களின் மேல் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும், இதனால் உங்களின் வேர்வை அல்லது அழுக்கு அந்த ஊற்றில் கலக்காமல் காக்கிறார்கள். பின்னர் மெதுவாக அந்த வெந்நீர் ஊற்றில் இறங்கி நீங்கள் நிற்கும்போது...... கண்டிப்பாக அது சொர்க்கம்தான் !



முதலில் இந்த வெந்நீரிலா என்று தோன்றும், ஆனால் அதன் உள்ளே இறங்கியவுடன் எழுந்து வர மனம் இருக்காது. ஆண்கள், பெண்கள் என்று தனி தனியே இடம் இருப்பதால் குடும்பமாக வருபவர்களுக்கு சிரமம். நாங்கள் அங்கு இருந்தபோது ஒரு இந்திய குடும்பம் வெளியில் இருக்கும் மெசினில் இருந்து டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே வந்து பாமிலி ரூம் என்று கேட்டனர், அது போல் இல்லை என்றவுடன் அவர்கள் திரு திரு என விழித்தது ஒரு தமாஷ் ! ஆனால் சில ஸ்டார் ஹோடேல்களில் பாமிலி ரூம் இருக்கும் என்று சொல்ல கேள்விபட்டேன்.





சிலர் நமது ஊரில் வெந்நீர் குளம் ஒன்று வெட்டி விட்டால் போதும் என்று நினைப்பார்கள், ஆனால் இந்த வெந்நீர் ஊற்று வித்தியாசமானது என்பதை நீங்கள் இங்கு குளித்தால் மட்டுமே உணர முடியும். ஜப்பான் சென்றால் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஒரு இடம் இந்த வெந்நீர் ஊற்றுக்கள் !


10 comments:

  1. டிக்கெட் போடுங்க... போவோம் இன்னொரு முறை...

    ReplyDelete
    Replies
    1. போட்டா போச்சு...... சார் நீங்க சொன்னது பஸ்லதானே ??!

      Delete
  2. நானும் ஒருமுறை வெண்ணீர் ஊற்றில் குளித்திருக்கேன் ஆனால் அது இந்தோனேஷியாவில்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார் ! அந்த அனுபவத்தை சற்று பகிருங்களேன்.......

      Delete
  3. Replies
    1. நன்றி கிருஷ்ணா, நீங்க எப்போ போக போறீங்க !

      Delete
  4. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_25.html

    ReplyDelete
    Replies
    1. எனது தளத்தை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி சகோதரி...... உங்களது மூலம் நான் நிறைய புதிய பதிவர்களை வாசிக்க தொடங்கி உள்ளேன்.
      மிக்க நன்றி !

      Delete
  5. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்...... உங்களது இந்த செய்தியை பார்த்துதான் அறிந்துக்கொண்டேன். உற்சாகம் கொடுக்கும் தகவல் கொடுத்த உங்களுக்கு நன்றி !

      Delete