Friday, March 22, 2013

கடல் பயணங்கள் - சிறிது இளைப்பாறுவோம் !!

நான் கடந்த மூன்று மாதங்களாக தள்ளி போட்டுக்கொண்டே வந்த என்னுடைய அனைத்து அலுவலக பயணங்களும், இப்போது ஆரம்பித்து விட்டது. நேர மாற்றங்களும், அலுவலக வேலைகளும் அடுத்த ஒரு மாதத்திற்கு என்னை வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இதனால், ஏப்ரல் கடைசி வரை கடல் பயணங்கள் சிறிது நங்கூரம் இட்டு ஓய்வெடுக்க போகிறது. எழுதுவதற்கு ஆயிரம், ஆயிரம் பதிவுகள் உள்ளன, ஆனால் நேரம் என்பது இல்லை !!


கடந்த ஆண்டு, நான் விளையாட்டாக ஆரம்பித்தது இந்த வலைப்பூ, அதற்க்கு இவ்வளவு ஆதரவும், நண்பர்களும் கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. மீண்டும் இந்த பயணம் மே மாதத்தில் இருந்து மிகவும் புதிதாக, இளமையாக, தகவல் களஞ்சியமாக மாறி வரும். இப்போது இருப்பதை விட, இன்னும் மெருகேறி வரும் என்பது நிச்சயம். அதுவரை சற்று நீங்களும் ஓய்வெடுங்களேன்......!!மே மாதத்தில் இருந்து.......
 
 • தென் ஆப்ரிக்கா தங்க சுரங்கம் பயணம் 
 • நீர் மூழ்கி கப்பல் பயணம் 
 • பெங்களுரின் 99 வகை பரோட்டா, ஹை-டெக் உணவகம், இன்னும் பல....
 • இதுவரை நீங்கள் கேட்டிராத தொழில் நுட்பங்கள் 
 • ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா, சாத்தூர் காரசேவு, சின்னாளபட்டி சேலை 
 • உயரம் தொடுவோம் - ஜப்பான், பெல்ஜியம், தென் ஆப்ரிகா, ஆஸ்திரேலியாவின் உயரமான கட்டிடங்கள் 
 • நீங்கள் மிகவும் விரும்பிய "எப்படி உருவாகிறது" இன்னும் புதிதாக 
 • சிறு பிள்ளையாவோம் - சேமியா ஐஸ், சக்கர முட்டாய் !!
 • மறக்க முடியா பயணத்தில் மனதை மயக்கும் இடம் !
 • உங்களிடத்தில் புன்னகை வரவைக்கும் குறும்படங்கள் 
இப்படி நிறைய நிறைய பதிவுகளுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன், நன்றி நண்பர்களே ! சில நேரங்களில் காத்திருந்தால் கிடைப்பது இன்னும் அழகாக இருக்குமே.....!!


 Labels : Kadalpayanangal, suresh, will be back soon

12 comments:

 1. காத்திருக்கிறோம்... விரைவில் வாருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் ! உண்மையில் உங்களது பதிவுகளை படிக்க முடியாததால் எனக்குதான் வருத்தம் !

   Delete
  2. நன்றி கிருஷ்ணா !! நீங்கள் எப்போதும் stay உடன் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள் !!

   Delete
 2. ஒரு மாசம் கடை லீவா ...? ஓகே அண்ணா. Come Back Soon

  ReplyDelete
  Replies
  1. என்னது கடை லீவா ?! ஆனந்த் உங்களது நையாண்டிக்கு அளவே இல்லையா...... ஆனாலும் ரசித்தேன் !

   Delete
 3. தங்கள் அலுவலக பயணங்கள் வெற்றிகரமாக முடிந்து தாங்கள் புத்துணர்ச்சியுடன் திரும்பி வர ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜீம் ! எனது அலுவலக பயணம் இனிதே முடிந்தது, இதோ உங்களை சந்திக்க ஓடோடி !! சரி, நீங்கள் நலமா ?

   Delete
 4. This s sad news for us Mr.Sureshkumar :( stay success on ur work :) happy working :)

  ReplyDelete
  Replies
  1. இதோ வந்திட்டேன் ! உங்களது வாழ்த்துக்கள் எனது அலுவலக பயணத்தை திறம்பட செய்ய உதவியது !

   Delete
 5. திரு.சுரேஷ்குமார், திரும்ப எப்போ வருவீங்க...? சீக்கிரம் :) என்று என் சினத்துக்கு சின்னாபின்னமாகப் போகிறீர்கள் என்று தெரியவில்லை :) சும்மா :)) v r waiting :(

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, சிங்கம் கோவபட்டா இந்த உலகம் தாங்குமா, இதோ வந்திட்டேன். எனக்கு இதுவரையும், இதற்க்கு மேலும் ஆதரவளித்து வருவதற்கு நன்றி நண்பரே ! உங்களது போன் நம்பர் குடுங்களேன் !

   Delete