Sunday, March 3, 2013

சோலை டாக்கீஸ் - நாதஸ்வரம்

பொதுவாக நாதஸ்வரம் என்றாலே கல்யாண வீடுகளும், பூம் பூம் மாடுகாரரும்தான் யாபகம் வருகிறார்கள். அதுவும் கல்யாண வீடுகளில் அவர்கள் சினிமா பாடல்களை எல்லாம் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள், இதனால் அது ஒரு அருமையான வாத்தியம் என்பது போய் அதுவும் ஒரு வாத்தியம் என்றாகிவிட்டதோ என்று ஒரு சந்தேகம். நான் சிறு வயதில் இந்த தில்லான மோகனாம்பாள் படம் பார்த்தபோதுதான் அதன் வீச்சு என்ன என்று தெரிந்துகொண்டேன், அது வரை கல்யாண வீடுகளில் கெட்டி மேளம் என்றவுடன் அவர்கள் வாசிப்பதுதான் என் யாபகத்தில். அந்த படத்தில் சிவாஜி இந்த நாதஸ்வரத்தில் வெஸ்டேர்ன் மியூசிக் வாசிக்கலாம் என்று காட்டும்போது இவ்வளவு அறுபுதமா இந்த நாதஸ்வர இசை என்று தோன்றும்.






நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது. தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால். பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.


காரைக்குறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மௌலானா, நாமகிரிபேட்டை கிருஷ்ணன், பொன்னுசாமி, சேதுராமன், ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்கள் எல்லாம் இந்த நாதஸ்வரத்தை ஒரு அறுபுதமான இசை கருவி என்று காட்டியவர்கள். அஅவர்கள் இசைக்கும் ஒவ்வொரு பாடலும், ஏன் நாம் இன்று எலக்ட்ரோனிக் இசை கருவியின் பின்னே ஓடுகிறோம் என்று கேள்வி எழுப்பும்.


இன்று இதை வாசிக்கும் மனிதர்களை மேடையில் பார்க்க முடிவதில்லை, வெறும் கல்யாண மேடைகளிலும், திருவிலாகளிலும் மட்டுமே பார்க்க முடிவது இந்த அற்புதமான இசை அதன் தனித்துவத்தை இழந்து வருகிறது என்பதையே காட்டுகிறது. இன்று   கோவில்களில் எல்லாம் கூட ஒரு மெசின் வாங்கி அதில் தாளம், லயம் என்று எதுவும் இல்லாமல் டம் டம் என்று வந்து விட்ட பிறகுதான் இதை நாம் மிஸ் செய்கிறோம் என்று எனக்கு தோன்றுகிறது.

4 comments:

  1. உண்மை... அந்த இனிமையே தனி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார் !

      Delete
  2. Replies
    1. ரசித்து பாரட்டியதற்கு மிக்க நன்றி !

      Delete