பழைய சாதம் சாப்பிடும்போது ஒரு நல்ல சைடு டிஷ் எது ? தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தவிர வேறு எது நல்லா இருக்கும்.......ஆங், மோர் மிளகாய். இதை எங்கிருந்து வாங்குவீர்கள், ஏதோ பக்கத்தில் ஒரு கடையில்தானே ? ஆனால் இதை எங்கு செய்வார்கள் என்று நினைகிறீர்கள், இதுவரை நானும் ஜென்டில்மேன் படத்தில் வருவது போல ஒரு வீட்டில் பாட்டிகள் எல்லாம் சேர்ந்து செய்கிறார்கள் என்றுதான் நினைத்தேன், ஆனால் ஒரு ஊரே இதை ஏக்கர் கணக்கில் செய்கிறது என்று தெரிந்து சென்று பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

போளியம்மனுர் என்பது திண்டுக்கல் டு ஒட்டன்சத்திரம் ரூட்டில் இருக்கும் ஒரு பெயர் பலகை கூட இல்லாத கிராமம். வழி தெரியாமல், இங்க மோர் மிளகாய் போடும் ஊர் என்று சொன்னாலே அட நம்ம
போளியம்மனுர் என்று சொல்லி வழி காட்டுகின்றனர். ஊருக்குள் நுழையும்போதே ஆச்சர்யம் அதிகமாகிறது, எங்கெங்கு காணினும் மிளகாய், வத்தல் என்று காய வைத்து இருக்கின்றனர். நீங்கள் நினைப்பதுபோல சும்மா சிறு இடத்தில அல்ல ஏக்கர் கணக்கில்.
அங்கு முதலில் நாங்கள் சந்தித்தது கனகராஜ் என்னும் ஒரு நல்ல மனிதரை, எங்களுக்கு மோர் மிளகாய் செய்யும் முறை, தொழில் நுணுக்கம் என்று காட்டி அசத்திவிட்டார். இங்கு செய்யப்படும் கொந்தவரங்காய் வத்தல், மோர் மிளகாய், மாங்காய் என்று பல பல வகைகள் காண்பித்தார். எல்லா வகையான வத்தல்களும் இங்கு சீசன் பொறுத்து மாறுபடும். பொதுவாக மிளகாய் என்பது ஆந்திரா பகுதிகளில் இருந்து வருகிறது, தயிர் எல்லாம் திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் வாங்குகிறார்கள். மோர் மிளகாய் செய்ய பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை ஆகும்.
முதல் நாளில் மிளகாய்களை நன்கு காய வைத்து அதில் இருக்கும் கசடுகளையும், அழுகியவற்றையும் எடுத்து விடுகின்றனர். பின்னர் அங்கு இருக்கும் தொட்டிகளில் தயிரையும், உப்பையும் கலந்து வைத்து விடுகின்றனர். மாலை ஆனவுடன் காய வைத்த மிளகாயை அந்த தொட்டியில் போட்டு கற்களை மேலே வைக்கின்றனர், இல்லையென்றால் மிளகாய் மேலே பொங்கி வழிந்து விடுமாம். மறுநாள் வெயிலில் அந்த மிளகாயை காய வைக்கின்றனர், பின்னர் மாலையில் அந்த தயிரில் ஊற வைக்கின்றனர். இது போல ஒரு வாரம் செய்தபின், சுவையும் பதமும் பார்த்து அந்த மிளகாயை நன்கு காய வைத்து, பின்னர் தரம் பார்த்து பிரித்து எடுக்கின்றனர். வெளிநாடுகளுக்கு நல்ல தரமும், உள்ளூருக்கு குறைந்த தரமும் (??!!!) என்று பிரித்து ஒரு மூட்டை கட்டுகின்றனர். ஒரு கிலோ 30 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை சந்தையின் நிலவரம் பொருத்து விற்க்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது மிளகாயை காய வைக்கும்போது அதை பெரிய பிளாஸ்டிக் ஷீட்டில் காய வைக்கின்றனர், மழை வந்தால் அதை அப்படியே சுருட்டி விடுவதற்கு சௌகரியம் இல்லையா ?!
முடிவில் மூட்டை மூட்டையாய் இருந்த இந்த மோர் மிளகாயில் இருந்து ஒரு அரை கிலோ கிடைக்குமா என்று கேட்க எங்களை மேலும் கீழும் பார்த்தனர். ஆனால் நான் அவ்வளவு தூரம் அவர்களது ஊரை கண்டுபிடித்து வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்து இனாமாகவே கொடுத்தனர், எவ்வளவு பணம் கொடுத்தும் வாங்கவில்லை, பாசக்கார மனிதர்கள். அடுத்தமுறை மோர் மிளகாய் வாங்கும்போது அது போளியம்மனுர் மோர் மிளகாயா என்று பார்த்து வாங்கவும்.
Labels : Mor milagai, curd chilly, boliammanur, suresh, kadalpayanangal, oor special, vathal, vaththal

Sir,
ReplyDeleteUnga thedal thorattum...
valthukkal
SP.Raj.
நன்றி ராஜ், உங்களது கருத்து இன்னும் என்னை இது போல தேட உற்சாகபடுத்துகிறது !
Deleteகார சாரமாய் ரசிக்கவைக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி !
Deleteஸ்...ஸ்...ஸ்...
ReplyDeleteபோளியம்மனுரா...? நன்றி...
என்ன சொல்லும்போதே காரமா இருக்கா சார் !! அப்போ பள்ளபாளையம் வெல்லம் சாபிடுரீங்களா....விரைவில் எழுதறேன் !
Deletesuper pathivu anna
ReplyDeleteovvoru pathivukkum romba risk edukurathu
periya visayam
romba nanri anna
நன்றி ஷரிப் ! இது போல் சென்று பார்ப்பது என்பது மனதுக்கு இதம் தருகிறது, நீங்கள் அதை பார்த்து பாராட்டும்போது இன்னும் இன்னும் சந்தோசம் !
DeleteStay Spicy :)
ReplyDeleteநன்றி நண்பரே, சற்று காரமான பதிவிற்கு உங்களது கருத்துக்கள் மூலமாக இனிப்பு சேர்த்துவிட்டீர்கள் !
Deleteஇன்னும் இதுபோன்ற எத்தனையோ ஊர்கள் சுற்றிப்பார்க்கனும், பைக்கில், உங்களுடைய டீமில் என்னையும் சேர்த்துக்கொள்ளவும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅது தயிரா இல்லை மோரா? மோர் பயன்படுத்துவது தானே வழக்கம்
ReplyDeletePlease give me handphone number boliammanur mormilagai seller
ReplyDeleteWe want to buy mor milagsy wholesale
Email: ariff.india001@gmail.com