Thursday, March 7, 2013

உயரம் தொடுவோம் - மலேசியா இரட்டை கோபுரம்

மலேசியா என்றாலே நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது இந்த இரட்டை கோபுரம்தான். இந்த 88  மாடி கட்டிடம்தான் உலகத்திலேயே உயரமான கட்டிடம் என்று 1998இல் இருந்து 2004 வரை சொல்லப்பட்டது, பின்னர் இதன் புகழை தைபெய் டவர் கொண்டு சென்றது. பெட்ரோனாஸ் என்பது மலேசியாவின் எண்ணை கம்பெனி, இது 1974இல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது குறைந்த ஊழியர்களே இருந்தனர், அது வளர ஆரம்பித்தபோது கோலாலம்பூர் நகரின் பல பகுதிகளில் பணியாளர்கள் இருந்தனர், அதை ஒரே இடத்திற்கு நிர்வாகம் எளிமையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த இரட்டை கோபுரம். ஒவ்வொரு முறையும் எனக்கு வியப்பை தரும் !




"பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்" என்று அழைக்கப்படும் இது 1992ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1999ம் ஆண்டு திறக்கப்பட்டது. நகரின் மைய பகுதியில் இருந்ததால், இதன் அஸ்திவாரம் தோண்டப்பட்டு மண் கொண்டு செல்லும்போது அந்த தடம் பல பல ஆண்டுகள் இருந்ததாக கூறபடுகிறது. இதை சீராகவும், சரியான நேரத்திலும் கட்டி முடிக்க பட வேண்டும் என்று ஒவ்வொரு டவரும் ஒவ்வொரு கட்டிட கம்பெனியிடம் கொடுக்கப்பட்டது. இந்த டவரின் டிசைன் என்பது இஸ்லாமிய சின்னமான எட்டு முனை கொண்ட நட்சத்திரம் போன்று அடித்தளம் அமைக்கப்பட்டது. பின்னர் அதன் மேலே வட்டமாக கண்ணாடியும், இரும்பும் கொண்டு அழகுபடுத்த பட்டது.

இது மொத்தம் 88 மாடி கொண்டது, அதில் இரண்டு வகையான பார்வை தளங்கள் உள்ளன. ஒன்று 41வது மாடியிலும், இரண்டாவது 86வது தளத்திலும் உள்ளது. உள்ளே செல்வதற்கு டிக்கெட் விலை கம்மிதான் என்றாலும், கிடைப்பது அரிது. அதிகாலையில் இருந்தே மக்கள் கூட்டம் லைனில் நின்று கொண்டிருக்கும், எங்களுக்கு நாங்கள் அதன் அருகிலேயே இருந்த ஒரு ஹோட்டலில் தங்கியதால் அவர்களே டிக்கெட் வாங்கி வைத்திருந்தனர் !



முதலில் நீங்கள் உள்ளே சென்றவுடன் ஒரு ரூமில் உங்களை உட்கார வைக்கின்றனர், அங்கு அந்த கட்டிடம் பற்றிய விவரங்களும், மற்ற உலக கட்டிடங்களிடம் இருந்து இது எப்படி சிறப்பானது என்று காணலாம். ஒரு குழுவாக குழுவாக ஆட்களை அனுப்புகின்றனர், ஆதாலால் நீங்கள் நீண்ட நேரம் நிற்க தேவையில்லை. உங்களது நேரம் வந்தவுடன், நீங்கள் இன்னொரு அறைக்கு அழைத்து செல்லபடுவீர்கள். அங்கு இந்த கட்டிடம் உருவான கதை ஒரு வீடியோ வடிவில் காண்பிக்கப்படும். பின்னர், அங்கிருந்து ஒரு லிப்ட்டில் உங்களை 41வது தளத்திற்கு கூட்டி செல்வார்கள், அதுதான், இந்த இரட்டை கோபுரத்தை இணைக்கும் பாலம் !

இந்த பாலத்தின் டிசைன் ஒரு அதிசயம்தான். வேகமாக காற்று வீசும்போது என்னதான் கட்டிடமாக இருந்தாலும் அது ஆடும், அப்போது பாலம் உடையலாம்....இதில்தான் தங்களது திறமையை காட்டி உள்ளனர். அதை நீங்கள் பலமாக காற்று வீசும்போதுதான் உணர்வீர்கள் ! நீங்கள் அங்கு நின்று கொண்டு கீழே பார்க்கும்போது மனதில் ஒரு கிலியும், மகிழ்ச்சியும் தோன்றும் என்பது நிச்சயம். வெயில் காலத்தின் போது இந்த கட்டிடத்தின் அருகில் வெக்கையாக இருக்கும், கண்களும் கூசும், இது அங்கு உபயோகபடுதபட்ட இரும்பினால் ! கண்டிப்பாக மலேசியா சென்றால் சென்று வாருங்கள்......!




Labels : Petronas tower, twin tower, malaysia, Kulalampur, KL, Suresh, Kadalpayanangal

8 comments:

  1. அட...மலேசியா....நானும் போனேன்..ஆனா மேலே செல்லவில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஜீவா, கோவையில் உங்க கொடி நல்லா பறக்குது போங்க !! அதுவும் உங்களது அம்மணிகள் மற்றும் சரக்கு ரொம்பவே எல்லோரும் விரும்பறாங்க :-)

      Delete
  2. Replies
    1. நன்றி, நீங்கள் உங்களது கருத்துக்கள் மூலம் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள் !

      Delete