Monday, March 4, 2013

அறுசுவை - பெங்களுரு Infinitea

கடந்த முறை ஷரோன் டீ ஸ்டால் பற்றி எழுதியதற்கு நிறைய வரவேற்ப்பு, நிறைய பேர் கால் செய்து இது போன்று வித்யாசமான உணவகம் பற்றி எழுதுங்கள், பல நேரங்களில் ஒரே வகை உணவகத்தை, உணவுகளை சாப்பிட்டு போர் அடிக்கிறது என்று சொன்னது மனதுக்கு நிறைவாக இருந்தது. இதனால் நிறைய, நிறைய தேடி இது போன்ற வித்தியாசமான உணவகங்களை உங்களுக்காக அறிமுகபடுத்த உற்சாகம் பிறக்கின்றது. அந்த வரிசையில் இந்த முறை "Infinitea (இன்பினிட்டி)".



இது சற்று விலை அதிகமான கடைதான் என்றாலும் சில நேரம் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும், வித்யாசமான சுவையை உண்ணவும் இங்கு செல்லலாம். இவர்களது ஸ்பெஷல் என்பது உலக டீ வகைகள் !! வித விதமாக இதுவரை நீங்கள் கேள்வி பட்டிராத பல வகை டீ !! அதை மட்டும் சாப்பிடாமல்,  சில உணவு வகைகளும் இங்கு உண்டு. பெங்களுருவில் பப்பிற்கு செல்ல மனம் இல்லாதவர்கள் இங்கு டீ சாப்பிட வருகிறார்கள் எனலாம் !




முதலில் நான் இதை ஒரு டீ கடை போல கற்பனை செய்து வைத்திருந்தேன், அங்கு சென்றவுடன் அவர்கள் கொடுத்த மெனு கார்டை படிக்கும்போது ஒரு பக்கம் ஆஹா இத்தனை வகை டீயா என்று ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் வந்தாலும் ஒரு மசால் டீ நூற்றி முப்பது ரூபாய் என்னும் போது சரக்கு அடிக்காமலே எனக்கு கிர்ரடிதது !! காலையில் அதுவும் சாப்பிட வேண்டும் என்று சென்றதால் டீ மட்டும் இல்லாமல் வேறு ஏதாவது ஒன்று ஆர்டர் செய்ய வேண்டும் என்று ஒரு சீஸ் சான்ட்விச் கேட்டேன். டீ  என்று கேட்ட போது காஷ்மீரி டீ சாப்பிட்டு பார்க்கலாம் என்று ஆர்டர் செய்தேன்.



முடிவில் எனது முன் அந்த காஷ்மீரி டீ வந்தபோது ஆர்வம் அதிகமானது. நீங்கள் நினைப்பது போல பால் எல்லாம் கலந்து இல்லாமல், வெறும் வெந்நீரில் டீ தூள் போட்டு ஆவி பறக்க வந்தது. எப்போதும் டஸ்ட் டீ என்று சாப்பிட்டு சாப்பிட்டு அதுதான் நல்ல டீ என்று நினைத்தவர்கள் கண்டிப்பாக இதை ட்ரை செய்ய வேண்டும். ஆச்சர்யமான வகையில் இவ்வளவு வகை டீ உள்ளது என்று இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சீஸ் சான்ட்விச் வழக்கம் போல் இருந்தது.




பஞ்ச் லைன் :


சுவை -   பல வகையான உண்மையான டீ வகைகள். இதுவரை நாம் பால் கலந்து எல்லாம் டீ குடித்து பழக்கப்பட்டு இருந்தால், இங்கு சென்று உண்மையான டீ வகைகள் ட்ரை செய்யலாம், நல்ல சுவை !!

அமைப்பு -  சிறிய இடம், கூட்டம் என்பது அதிகம் இல்லை. ஒரு ஹய் - பை (Hi-Fi)  இடம் போன்று இருக்கிறது. பார்கிங் வசதி என்பது சற்று குறைவுதான்.

பணம் - ரொம்பவே விலை ஜாஸ்தி  !! மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.

சர்வீஸ் - நல்ல சர்வீஸ்.பொறுமையாக கேட்பது எல்லாம் கிடைக்கிறது !

அட்ரஸ் :
2, Shah Sultan Complex,
17/1, Ali Asker Road, ent. Cunningham Road,
Bangalore – 560052.
Tel:- 080 – 4114 8810/8428
Email:- gauravs@infinitea.in



மெனு கார்டு :
























Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Infinitea, Tea, good tea, original tea

4 comments:

  1. பப்பிற்கு செல்ல மனம் இல்லாதவர்கள் இங்கு டீ சாப்பிட வருகிறார்கள் என்றால் பாராட்டப்பட வேண்டியது தான்...

    இத்தனை வகைகளா...?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார், நிறைய நிறைய டீ வகைகள், சுவைத்து பாருங்களேன் !!

      Delete
  2. பணம் - ரொம்பவே விலை ஜாஸ்தி...! Keep n mind !!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா முதல் முறையாக சுருக்கமாக இல்லாமல், நிறைய எழுத்துக்களில் பாராட்டி உள்ளீர்கள் கிருஷ்ணா......மிக்க நன்றி, மிகவும் ரசித்தேன் ! உங்களை அந்த ரெண்டு வார்த்தைகளில் இருந்து வெளியே இழுத்து வந்ததிற்கு இந்த பதிவு மிகவும் ஸ்பெஷல் ஆகி விட்டது ! நன்றி !

      Delete