நிறைய பேர் இந்த பதிவை படித்துவிட்டு என்னிடம் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு - "MTR இல் மசாலா தோசை சாப்பிட்டு இருகிறீர்களா, அது என்ன பெங்களுருவில் இருந்துக்கொண்டு இன்னும் அதை சாப்பிடலை ?" என்பது. அது மிகவும் தூரத்தில் இருந்ததால் செல்ல முடியாமல் இருந்தது. முதல் முறை அவ்வளவு தூரம் சென்ற பிறகு, அங்கு மசாலா தோசை காலியாகி விட்டது. இதற்காகவேயும், நமது வாசகர்களுக்காகவும் இரண்டாவது முறை அங்கு சென்றிருந்தேன். இந்த எட்டு வருடத்தில் நான் பெங்களுருவில் நிறைய இடத்தில மசாலா தோசை சாப்பிட்டு இருந்தாலும், இந்த MTR மசாலா தோசைக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது புரிந்தது. எல்லோரும் சொல்லும்போது அந்த சுவை அவ்வளவு நன்றாக இருக்கும் என்பதும் புரிந்தது.
முதலில் இந்த இடத்திற்கு சென்ற போது இதை கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்பட்டேன், ஏனென்றால் நாம் நினைப்பது போல ஒரு பெரிய நுழைவாயிலுடன், கண்ணை பறிக்கும் போர்டு எல்லாம் இல்லாமல் ஒரு வீடு போல இருந்தது. இதனால் அந்த ஏரியாவை சுற்றி வர நேர்ந்தது, இருந்தும் கடைசியில் கண்டுபிடித்து உள்ளே சென்றவுடனே எல்லா டேபிளிலும் மசாலா தோசை என்றால் என்ன சொல்வது ?! உட்கார்ந்தவுடன் மசாலா தோசை ஒன்று சொல்லிவிட்டு அங்கு இருந்த சர்வரிடம் கதைக்கையில் தெரிந்தது
இவர்களின் கதை.
1924 இல் உடுப்பியில் இருந்து வந்து யஜ்ன நாராயண மையா மற்றும் கனப்பையா மையா சகோதரர்கள் ஆரம்பித்தது இந்த மாவல்லி டிபன் ரூம் எனப்படும் MTR !முதலில் ஆரம்பித்தபோது இதன் பெயர் பிராமன்ஸ் காபி பார், ஆனால் 1960இல் இது இன்றைய பெயருக்கு வந்தது. இவர்களது உணவுகள் இங்கு மிகவும் பிரபலம். பல பல அமைச்சர்களும், நடிகர்களும் இதற்க்கு அடிமை !

முடிவில் நான் மிகவும் எதிர் பார்த்திருந்த மசாலா தோசையும் வந்தது, சின்ன தட்டில் மிகவும் முறுகலாக, கொஞ்சம் சாம்பார் மற்றும் மிகவும் சிறிய கப் ஒன்றில் நெய் என்று சுண்டி இழுத்தது. ஒரு வாய் பிட்டு வாயில் வைக்கும்போதே உங்களுக்கு தெரிந்துவிடும் நீங்கள் மற்ற இடங்களில் சாப்பிடும் மசாலா தோசை எல்லாம் வேஸ்ட் என்று !! முடிவில் ஒரு நல்ல காபி ஒன்று குடித்து முடித்தபோது "இந்த நாள் இனிய நாள்" என்று தோன்றியது !!
பஞ்ச் லைன் :
பெங்களுருவில் இவர்களின் இடங்கள் பற்றி அறிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... MTR அட்ரஸ்.
மெனு கார்டு :

சுவை - அருமையான மசாலா தோசை மற்றும் காபி ! இவர்களிடம் ரவா இட்லியும் மிகவும் அருமை ! எல்லோரும் சொல்லும்போது நானும் அப்படி என்ன சுவை என்றுதான் நினைத்தேன், ஆனால் நீங்கள் கண்டிப்பாக சாப்பிட்டால்தான் புரியும் !
அமைப்பு - பெரிய இடம் ஆனால் கும்பல் ஜாஸ்தி, பார்கிங் என்பது இங்கு குதிரை கொம்பு ! கொஞ்சம் தள்ளி சென்றால் உங்களது இடத்தும், வலதும் ஒரு இடத்தில் பெய்டு பார்கிங் உள்ளது. கார், பைக் எல்லாம் அங்கு பார்க் செய்யலாம்.
பணம் - நல்ல உணவிற்கு கொடுக்கலாம் சார் !! மெனு கார்டின் சில பக்கம் கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்.

சர்வீஸ் - கூட்டம் அதிகம் இருந்தால் சர்வீஸ் தாமதம் ஆகிறது. உட்காரவே இடம் கிடைக்க டைம் ஆகிறது.
அட்ரஸ் :
அட்ரஸ் :
பெங்களுருவில் இவர்களின் இடங்கள் பற்றி அறிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... MTR அட்ரஸ்.
Labels : Arusuvai, Suresh, Kadalpayanangal, Bengaluru, Bangalore, MTR, best masala dosa, rava idli, Mavalli Tiffin Rooms
up to 1970 they sere water & coffee in silver tumblr in family rooms sridhar_kri@dataone.in
ReplyDeleteWow, nice to hear this ! Now also they serve but in Ever Silver tumbler !! Thanks for visiting my blog and commenting !!
Deletelavkeview icecream parlor in mg road serves bangalores finest icecreams morethan 75 years sridhar_kri@dataone.in
ReplyDeleteThanks for the info friend !! Next time you can see the blog for this ice cream parlour soon !
DeleteWhen are you partying us?
ReplyDeleteஆஹா பெருமாள் !! இது என்ன கோலம் ! கோவாவில் எடுத்ததா ?! கண்டிப்பாக அடுத்த வாரம் போகலாம் வாங்க !
Deleteதங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார் !
ReplyDeleteநல்ல சிறப்பான நடை மற்றும் குறிப்புகள்.
ReplyDeleteவிலை பார்த்தால் நம்ம ஊர் 'பவன்'களை விட பரவாயில்லை என்பது போன்றுதான் உள்ளது.
மேலும் சில சுவாரசியமான / உபயோகமான MTR தொடர்புடைய செய்திகள் :
1> அங்கு ஐஸ்க்ரீமும் நன்றாக இருக்கும் காஃபியும் கூட.
2> MTR மசாலா மற்றும் ரெடி டு ஈட் (ready to eat) வகை உணவுகள் பல ரகங்களில் உள்ளன.
இவற்றில் உபயோகப்படும் தொழில்நுட்பத்தில் பல CFTRI எனப்படும் மத்திய உணவு ஆராய்ச்சி நுட்பபயிலகம் / ஆய்வகம் - மைசூர் ல் உள்ளது - ஆல் (இவற்றில் பல இராணுவ பயன்பாட்டிற்கு உதவும் நோக்கில் ஆராயப்பட்டவை மற்றும் முக்கியமாக கார்கில் போர் நேரத்தில் பயன்பட்டவை) கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டதாகும். இதனைப்பற்றிய குறிப்பினை அந்த பாக்கெட்டுக்களில் பார்க்கலாம். இந்த உணவு வகைகள் நம்மூரிலிருந்து ஒரு வாரம் பத்து நாள் வகையில் இந்திய உணவு வகை என்றால் என்ன எப்படி இருக்கும் என்று கேட்கக்கூடிய வெளிநாடுகளுக்கு செல்லும் பலருக்கும் கண் கண்ட தெய்வமாகும்!!!(:-)
3> அப்புறம் அந்த சாம்பாரின் சுவை வகையினை குறிப்பிடுங்கள். நம்ம ஊர் சாம்பார் போல உறைப்பாக இருந்ததா? இல்லை வழக்கம் போல சிறிது இனிப்புடன் இருந்ததா?
4> மேலும் நான் கேள்விப்பட்டது ஒரு 5-6 வருடங்களுக்கு முன்பு, அவர்களுடைய வியாபார விற்று முதல் வரவு செலவுகள் ஏறக்குறைய இந்திய ரூபாய் மதிப்பில் 500 கோடிகளுக்கும் மேல் மற்றும் தற்போது வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு (MNC) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள் என்பதும் (உறுதியாக தெரியாது).
http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/
மிக்க நன்றி நண்பரே......இதோ எனது பதில்கள் !
Delete1.) அடுத்த முறை அங்கு செல்லும்போது ஐஸ் கிரீம் ட்ரை செய்கிறேன், காபி குடித்தேன்.....எழுத மறந்துவிட்டேன், அருமையான சுவை !
2.) பயனுள்ள செய்தி, நான் சீனா செல்லும்போது எல்லாம் இதுதான் எனக்கு உயிர் காக்கும் உணவுகள் !
3.) சாம்பார் சற்று ருசியோடு இருந்தது. கர்நாடகாவில் சர்க்கரை கலந்த சாம்பார் !
4.) இதுவும் கேள்விபடாத செய்தி, ஆனால் நான் உணவினை மட்டுமே பார்த்தேன், நீங்கள் கொடுத்த செய்தி அதை ஜீரணிக்க உதவியது !
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !