Wednesday, May 8, 2013

சாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)

இதுவரை நான் பஸ், கார், லாரி, கப்பல் மற்றும் ப்ளைனில் கூட சென்றிருக்கிறேன், எனது கல்லூரி காலத்தில் ஆவடி டேன்க் தொழிற்சாலையில் பதினைந்து நாள் பயிற்சியில் அந்த யுத்தம் செய்யும் டேன்க் உள்ளே இறங்கி அவர்களோடு சிறிது தூரம் பயணித்திருக்கிறேன், ஆனால் இந்த நீர் மூழ்கி கப்பல் பயணம் என்பது நான் நினைத்து கூட பார்த்தது கிடையாது. இந்த முறை குடும்பத்துடன் மாலத்தீவு சென்றிருந்தேன், அங்கு நீர் மூழ்கி கப்பல் பயணம் இருக்கிறது என்றதில் இருந்து நான் மிகவும் எதிர் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். முதலில் ஒரு ஆளுக்கு 85 அமெரிக்க டாலர் எனும்போது திடுக்கென்றது, ஆனாலும் வாழ்க்கையில் ஒரு முறை என்ற போது சரி என்றேன்.



இந்த நீர்மூழ்கி கப்பல் கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. அங்கு செல்ல இவர்களே கரையிலிருந்து படகு வசதி செய்து தருகின்றனர். இந்த நீர்மூழ்கியை இரண்டு மிதவைகளுக்கு நடுவில் நிறுத்தி இருக்கின்றனர். ஒன்றிலிருந்து பிராண வாயுவும், இந்த நீர்மூழ்கிக்கு பாட்டரி சார்ஜ் செய்யும் எந்திரமும் இருக்கிறது. இன்னொன்றில் பயணிகள் காத்திருக்கும் இடமும், தண்ணீர் சேமிப்பு இடமும் உள்ளது. இதன் நடுவில் நான் பயணம் செய்ய போகும் அந்த நீர்மூழ்கி கப்பல் இருந்தது கண்டு மனம் துள்ள ஆரம்பித்தது.


 
முதலில் நீர்மூழ்கி கப்பலை தயார் செய்யும் பணி ஆரம்பமானது. ஏதேதோ வார்த்தைகளில் மேலிருந்து இவர்கள் பேசுவதும், கீழே வாக்கி டாக்கியில் அவர்கள் பதில் சொல்வதும் ஆரம்பம் ஆனது. இவர்களுடன் பேச்சு கொடுத்ததில், இந்த நீர்மூழ்கி சுமார் 120 அடி வரை கீழே செல்லும் என்றும், சுமார் 45 நிமிடம் வரை கீழே சென்று பவள பாறைகள், வண்ண மீன்களை பார்க்க முடியும் என்றனர். அத்துடன் சிறிது விளக்கமாக இந்த நீர்மூழ்கி செயல்படும் விதத்தையும் விளக்கி கூறினார். அதை அறிந்து கொள்ள நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட காணொளியை காணுங்கள்.
 

 
முடிவில் அந்த நீர்மூழ்கி கப்பல் ரெடி என்று அறிவித்தவுடன் சீட்டு பிடிப்பதற்கு நான் நீ என்று முண்டி அடித்து எல்லா நாட்டினரும் தயார் ஆகினர். நான் அங்கிருந்த வேலை பார்க்கும் பெண்ணிடம் 5 டாலர் நீட்டி, கொஞ்சம் எங்களுக்காக நல்ல இடமாக பிடித்து வைக்க முடியுமா என்று தனியாக கேட்டவுடன் (நாங்க யாரு....தமிழன்டா  !!), அவர் எல்லோரையும் முந்தி கொண்டு சென்றார். நாங்கள்தான் கடைசியாக சென்றோம், ஆனால் எங்களுக்கு நல்ல இடத்தில இடம் பிடித்து எங்களுக்கு கொடுத்தார் ! அங்கிருந்த அலைகளுக்கு ஏற்ப அந்த நீர்மூழ்கி ஆட சிறிது சிரமத்துடன்தான் கீழே செல்ல முடிந்தது.

 
 
கீழே இருக்கும் படத்தில் பார்த்தால் இந்த நீர்மூழ்கியின் இயங்குதள அறை 
தெரியும். சிறிதும் பெரிதுமாக அங்கிருந்த பல பொத்தான்கள்,முன்னே தெரிந்த 
நீல கடல் என்று அருமையாக இருந்தது. நாங்கள் மெதுவாக மூழ்க 
தொடங்கினோம், கலங்கலாக இருந்த தண்ணீர் சிறிது சிறிதாக தெளிவாக 
ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன்கள் தெரிய ஆரம்பித்தன. எங்களுக்கு முன்பிருந்த வட்ட கண்ணாடியில் கண்கள் இமைக்க மறந்து நாங்கள் 
பார்த்து கொண்டிருந்தோம். திடீரென்று எங்களது முன்னே சிறிதும் பெரிதுமாக 
வண்ண மீன்கள் சென்றபோது ஆச்சர்யத்தில் மூழ்கினோம்.


 
அடுத்து வந்த நாற்பது நிமிடமும், பவள பாறைகளும், வண்ண மீன்களும், டைவர் எனப்படும் நீரில் மூழ்குபவர்களும் என்று மிகவும் அருமையாக இருந்தது. நாளை வரை காத்திருங்கள், அந்த காட்சிகளை பார்பதற்கும், படிப்பதற்கும் !!
 
Labels : Kadalpayanangal, Suresh, Maldives, Submarine, neermoolgi, kappal, coral reef
 

6 comments:

 1. குளிர்ச்சியான அனுபவம்... வாழ்த்துக்கள்...

  அப்பாடா... கருத்துரைப் பெட்டி மாற்றி விட்டீர்களா...? நன்றி...

  சிந்திக்க சிரிக்க : அன்புடன் அழைக்கிறேன்... நன்றி...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Students-Ability-Part-8.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் ! உங்களது கருத்துக்களை ஏற்று கருத்துரை பெட்டி மாற்றிவிட்டேன், மிக்க நன்றி ! உங்களது பதிவுகளை படிக்காமல் முடியவில்லை போங்கள் !

   Delete
 2. இன்னும் நிறைய மாலத்தீவு பற்றி...அடுத்த முறை அங்கு செல்லலாம் என்றிருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய நாடு ஜீவா ! ஆனால் தலைதீவில் (நகரமே தீவுதானே :-) ) ட்ரிங்க்ஸ் கிடைக்காது ஜாக்கிரதை !

   Delete
 3. தங்கள் பதிவு எங்களுக்கும்
  அந்த அனுபவத்தைத் தருகிறது
  படங்களுடன் பகிர்ந்து செல்லும் விதம் அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார், உங்களது கவிதைகளும் இந்த புதுமையான, குளிர்ச்சியான அனுபவத்தை தருகின்றன. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete