Wednesday, May 29, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 2/4)

சென்ற வாரம் இந்த சின்னாளபட்டி புடவைகள் எப்படி சாயம் இடபடுகிறது என்று பார்த்தீர்கள், பலர் கமெண்ட் எழுதியும், sms செய்தும் பாராட்டியது என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  அந்த பகுதியை மிஸ் செய்தவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்......சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 1/4). இந்த வாரம் இந்த புடவைகளுக்கு எப்படி டிசைன் செய்யபடுகிறது என்று பார்க்கலாம். பொதுவாக நீங்கள் புடவை கடைக்கு சென்றால் கலர் எல்லாம் ஒன்றாக இருந்தாலும் இந்த டிசைன் மட்டும் நிறைய இருக்கும். புடவை கடையில் அவ்வளவு டிசைன் இருந்தால், அப்போ டிசைன் செய்யும் இடத்தில அந்த கருவிகள் எவ்வளவு இருக்கும் ??
 
 
 
முதலில் இவர்களுக்கு டிசைன் என்பது கடை முதலாளிகள் அல்லது இவர்களே இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து உருவாக்குகின்றனர். இதில் ஒரு சௌகரியம் என்னவென்றால் ஒரு கடைக்கு அந்த டிசைன் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு கடை எடுத்துக்கொள்ளும் !! அதனால் எதுவும் தங்காது !! முதலில் இந்த டிசைன் கிடைத்த பிறகு ஒரு செவ்வக வடிவ இரும்பு பிரேமில் ஒரு விதமான பிளாஸ்டிக் துணியை நன்கு மெசின் கொண்டு இழுத்து கட்டுகின்றனர். பின்னர் ஒரு இருட்டு ரூமினில் அந்த பிரேமை கவிழ்த்து அந்த டிசைனை சரியாக அதன் மேல் வைக்கின்றனர். பின்னர் அதன் மேல் கூழாங்கல் போன்ற ஒன்றை வைத்து பரப்புகின்றனர்.
 
 
 
கீழே ஒரு லைட் வைத்து வெளிச்சம் கொடுக்க, அந்த வெளிச்சம் சூட்டை இந்த பிளாஸ்டிக் மீது பரப்புகின்றது. அறிவியல் விதிப்படி எங்கு கருப்பு இருக்கிறதோ அங்கு அதிகம் சூடு பரவுகிறது, இதனால் அங்கு அந்த டிசைன் உருவாகிறது. இப்படி டிசைன் உருவான பிறகு சில நேரங்களில் சரியாக இல்லையென்றால் அங்கு இருக்கும் டிசைன் செய்பவர் ஒருவர் சில கெமிக்கல் மற்றும் சில கருவிகளை கொண்டு அதை சரி செய்கிறார்.
 
 
 
 
 
 
பின்னர் அவர்களின் சௌகரியத்திற்கு அந்த பிரேம் மீது ஒரு நம்பர் எழுதி விடுகின்றனர். இது எதற்கு என்கிறீர்களா?? கீழே உள்ள படத்தை பாருங்கள்......இவ்வளவு பிரேம் இருந்தால் எப்படி பின்னர் கண்டு பிடிப்பது ?
 
 
 
 
பின்னர் இன்னோர் இடத்தில் அந்த டிசைன் எந்த கலரில் வர வேண்டும் என்று முடிவு செய்து அதற்க்கு கலர் ரெடி செய்கின்றனர். அந்த கலர் செய்யும் இடத்தில்தான் உங்கள் அன்பு சுரேஷ் நின்றிருக்கிறேன் (அண்ணே.....ஒரு விளம்பரம் !!?!).
 
 
அது ரெடி செய்தவுடன் அவர்கள் அந்த புடவையை ஒரு பெரிய டேபிள் மீது வைத்து பின் செய்கின்றனர். யோசித்து பாருங்கள்...... அங்கு இதுபோல நிறைய டேபிள் மற்றும் ஆட்கள். வேலை நேரத்தில் அவர்கள் செயல்படும் வேகத்தை பார்த்து அசந்து போனேன். முதலில் அந்த பிரேமை சரியாக வைத்து பார்க்கிறார்கள். முன்னரே சொன்னது போல, அந்த கருப்பு இருந்த இடத்தில் இருந்து அந்த பிளாஸ்டிக் போய் விட்டது, இதனால் அங்கு வெறும் நூல்கள்தான், இதனால் இவர்கள் போடும் கலர் எங்கெங்கு இப்படி நூல் இருக்கிறதோ அங்கு மட்டும் வரும், மற்ற இடத்தில் போகாது. அவர்கள் இதன் மேலே ஒரு கட்டையை வைத்து இந்த கலர் கொடுக்கும்போது டிசைன் உருவாவதை பாருங்கள் !
 
 
 
 
 
இப்படி டிசைன் வந்து கொண்டே இருக்கும், சில நேரங்களில் சில புடவைகளுக்கு ஸ்பெஷல் டிசைன் தேவைப்படும், அதாவது ஒரு சின்ன டிசைன் மட்டும் என்று. அதற்க்கு என்று தனி பிரேம் உண்டு. கீழே இருக்கும் படத்தை பாருங்கள், இது ஒரே ஒரு டிசைன் மட்டுமே, இதை தேவை படும்போது மட்டும் உபயோகபடுத்துவார்கள்.
 


ஓகே, இப்போது புடவை டிசைன் செய்தாகிவிட்டது.....அடுத்தது என்ன ?? புடவைக்கு கஞ்சி போட்டு அயன் செய்ய வேண்டும். என்ன ஆர்வம் இன்னும் அதிகமாகுதா, அடுத்த வாரம் வரை பொறுங்களேன் !

Labels : Oor special, District special, chinnalapatti sarees, Suresh, kadalpayanangal, Part 2

 

10 comments:

 1. படங்களுடன் விளக்கம் மிகவும் அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் !

   Delete
 2. kalakkkunga boss. satthiyama ungala paaka poraaamaya irukku, sutthi podunga

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, உங்களது கண் பட்டு நன்மைதான் விளையும்.....மனம் திறந்த பாராட்டுக்கு திருஷ்டி ஏன் விழ போகிறது ?

   Delete
 3. thanks Suresh

  Hari Rajagopalan

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஹரி, உங்களது கருத்திற்கு நன்றி !

   Delete
 4. ஷர்ட்,பேண்ட் எல்லாம் கலர் அப்பிக்காமா சுத்தமா இருக்கீங்க..

  ReplyDelete
  Replies
  1. நானே கலராத்தான் இருக்கேன், சும்மா MGR மாதிரி சும்மா தக தகன்னு மின்னலையா நான் ? :-(

   Delete
 5. Replies
  1. நன்றி கிருஷ்ணா.....ஒவ்வொரு பாகத்திற்கும் புன்னகை அதிகரிக்கிகுமோ ?!

   Delete