Friday, May 31, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 3/5)

என்ன இடையில் வேற ஒரு பதிவு போட்டதும் அடுத்த பதிவு எப்ப அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிடீங்களா ?? திண்டுக்கல் தனபாலன் சார் உரிமையோட திட்டியதால் அடுத்த வாரம் போடனுமின்னு நினைச்சி இருந்ததை இன்னைக்கு போடறேன் !! சென்ற பதிவில் சுங்குடி சேலையில் டிசைன் செய்வதை பார்த்தீர்கள், அது ஒரு வகை, இன்னொரு வகை மெழுகு பிரிண்டிங். அதாவது புடவையில் இருக்கும் டிசைன் நீங்கள் துவைக்க, துவைக்க சீக்கிரத்தில் அழிந்து விடும், அதனால் இந்த மெழுகு பிரிண்டிங் செய்யும்போது புடவை பிரிண்டிங் சீக்கிரம் அழியாது, புடவையும் பள பளவென்று இருக்கும். அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போமே !!





மேலே உள்ள படத்தில் பார்த்தால் உங்களுக்கு புரியும், நான் காட்டி கொண்டிருப்பதுதான் அந்த மெழுகு, இது நாம் வீட்டில் உபயோகிப்பது இல்லை, சிறிது அடர்த்தியானது. மூட்டை மூட்டையாய் இருக்கும் அந்த அறையை காட்டினால் நீங்கள் மயங்கி விடுவீர்கள் !! இந்த மெழுகு டிசைன் செய்ய கீழே மெலிதான, சல்லிசான மணல் இருக்கும், இந்த மணல் மெழுகு பதிப்பை வைத்து அழுத்தும்போது அது ஒட்டாமல் தடுக்கும், மேலே உள்ள படத்தில் இடது புறத்தில் பாருங்கள் தெரியும். படத்தில் டிசைன் செய்பவருக்கு இடது பக்கத்தில் ஒரு சதுர வடிவமாய் தெரிவதுதான் உருக்கிய மெழுகு, உங்களுக்கு இந்த படத்தில் தெரியாதது அந்த மெழுகை அந்த நிலையில் வைத்திருக்கும் அடுப்பு. மெழுகு என்பது சீக்கிரமே இறுகிவிடும், அதனால் எப்போதும் அடுப்பு வைத்து அதை உருக்கி கொண்டே இருக்க வேண்டும். அந்த அடுப்பின் பக்கத்தில் நான் உட்க்கார்ந்து பார்த்தபோது தெரிந்தது, ஒரு ஐந்து நிமிடத்தில் எனது வலது புறத்தில் இடுப்பு கன்றிவிட்டது, அவ்வளவு சூடு !!  இந்த மெழுகு டிசைன் இரண்டு வகையாக செய்கிறார்கள், ஒன்று டிசைன் செய்த புடவைக்கு மெழுகு மேலே பிரிண்ட் செய்வது, இன்னொன்று மெழுகில் கலர் சேர்த்து வெள்ளை துணியில் பிரிண்ட் செய்வது. கீழே நீங்கள் பார்ப்பது இரண்டாவது வகை...... அந்த வெள்ளை துணியில் டிசைன் உருவாவதை கவனியுங்கள் !!



 
அடுத்த கேள்வி உங்களது மனதில் வருவது என்ன என்று எனக்கு தெரியும், அது எப்படி அந்த டிசைன் போடுகிறார்கள், அந்த கட்டை எப்படி இருக்கும் என்பதுதானே. இதோ கீழே உள்ள படத்தினை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சிறிய ஆணிகளை கொண்டு இப்படி வேண்டிய டிசைன் செய்து வைத்து கொள்கிறார்கள். மெழுகை இதை வைத்து தொடும்போது வெகு சிறிய அளவே அதன் முனையில் எடுப்பதால் அது துணியில் பரவுவது தடுக்கபடுகிறது.

 
சரி, இது போல எத்தனை டிசைன் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். அங்கு நிறைய அறைகள் இருந்தன, அப்படி ஒரு அறையின் உள்ளே நுழைந்தபோது அங்கு கண்ட டிசைன் கண்டு மலைப்பாய் இருந்தது. நான் இங்கே காண்பிப்பது கொஞ்சம்தான், தரையில், மேலே, கீழே என்று ஆயிரம் ஆயிரம் டிசைன் !! பாருங்கள் ஒரு பூக்களோடு உங்களை பார்ப்பது வேறு யார் நானேதான் ! நன்றாக இருக்கிறதா...... நான் கேட்பது பூக்களை அல்ல !!

 

 
இந்த மெழுகு பிரிண்டிங்கில் இன்னொரு வகை என்பது மெழுகு பெயிண்டிங் ! அதாவது சில புடவைகளுக்கு தலைப்பு அல்லது பார்டரில் சில சமயங்களில் டிசைன் வேறு மாதிரியாக இருக்கும், அல்லது பார்டர் பெரிதாக இருக்கும். இந்த சமயங்களில் இது போல அச்சு வைத்து செய்வது முடியாது என்பதால் பிரஷ் கொண்டு மெழுகு கோட்டிங் கொடுப்பதுண்டு. கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது அந்த வகை.
 
 
சரி இப்படி எவ்வளவு புடவைகள் இவர்கள் தினமும் செய்வார்கள் என்ற கேள்விக்கு பதில்தான் கீழே உள்ள படம். மூட்டை மூட்டையாய் துணிகள் குவிந்து கிடக்க தினமும் அந்த உருகும் மெழுகில் உங்களின் புடவைகளுக்கு பளபளப்பு ஏற்றுவது இவர்களின் வேலை.


அடுத்த முறை உங்களின் காட்டன் புடவை மெழுகு கொண்டு செய்யபட்டிருந்தால், அந்த மெழுகு சூட்டில் அவர்களின் வலது புறம் வெந்து இருந்ததை நினைத்து கொள்ளுங்கள், அதுவே இவர்கள் செய்யும் இந்த வேலைக்கு சன்மானமாய் அமையும்.
 
அடுத்தது என்ன ??.......கஞ்சி போட்டு அயன் செய்ய வேண்டும் !
 
Labels : Kadalpayanangal, Suresh, oor special, chinnalapatti sarees, Sungudi sarees
 

6 comments:

  1. அவர்கள் படும் சிரமத்தை நன்றாக உணர்ந்து விட்டீர்கள்... இவ்வளவு கஷ்டப்படும் அவர்களுக்கு கூலி...? இருந்தாலும் வேலையை திருப்தியாக செய்வார்கள்... முடிவில் சரியாக சொன்னீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

    அப்புறம் திட்டவில்லை... அன்பாக கேட்டுக் கொண்டேன்... ஹிஹி... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.....பொதுவாகவே அவர்கள் வாங்கும் கூலி பற்றி நான் அதிகம் கேட்பதில்லை, இதில் சிலர் சங்கடபடுகிரார்கள் என்று நன்கு தெரிந்தது.

      ஐயோ, நீங்கள் திட்டுவதாக சொல்லவில்லை......உங்களது அன்புக்காக மட்டுமே இந்த பதிவு. செல்ல திட்டுக்கள் வலிப்பதில்லை !

      Delete
  2. அட... நம்மூரு சிறப்பை மிக அழகாக விளக்கமா சொல்லியிருக்கிங்க,,,
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ்......நீங்கள் இந்த தளத்திற்கு வந்து படித்து கருத்து சொன்னதில் மிக்க மகிழ்ச்சி !

      Delete
  3. Replies
    1. உங்களின் புன்னகை அளவு பெரிதாவதில் மிக்க மகிழ்ச்சி கிருஷ்ணா !

      Delete