வாழ்கையில் நான் மீண்டும் மீண்டும் செல்ல நினைக்கும் ஒரு நகரம் என்றால் அது பாரிஸ் நகரம்தான். அந்த நகரத்தின் சின்னமாய் விளங்குவது இந்த ஈபில் டவர் (எய்ப்பில் டவர் என்றும் சொல்கிறார்கள்). 1889ம் வருடம் அங்கு நடந்த ஒரு எக்ஸ்போவிற்கு அங்கு உருவாக்கப்பட்ட இதை காண்பதற்கு காத்து கிடந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். பாரிஸ் நகரின் நோர்ட் ரயில் நிலையத்தில் இறங்கிய உடனே இங்கு எப்படி செல்ல வேண்டும் என்றுதான் முதலில் கேட்டேன், அவ்வளவு ஆர்வம். முழுவதும் இரும்பினால் ஆன இதை பார்ப்பது என்பது ஒரு பரவசமான அனுபவம்.
1887ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஈபில் டவர் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது எல்லாம் எகிப்து பிரமிடு மட்டுமே இருந்தது, அதை விட உயரமாக இந்த டவர் இருக்கும் என்று கஸ்டாவ் ஈபில் என்னும் என்ஜினியர் சொன்னது கண்டு எள்ளி நகைத்தனர் அந்த ஊரின் பிரபலமான ஓவியர்களும், கட்டிட வல்லுனர்களும். ஓவியம் என்பதும் கட்டிட கலை என்பதும் வேறு வேறு, அதனால் இது முடியாது என்றனர், அதை சவாலாக ஏற்றார் கஸ்டாவ் ஈபில். 324 மீட்டர் உயரம் கொண்ட இது இன்று 81 மாடி கொண்ட கட்டிடத்திற்கு சமானம்.
இங்கு நீங்கள் சென்றவுடன் முதலில் எந்த பகுதி வரை செல்ல விரும்புகிறீர்கள் என்பதை கொண்டே டிக்கெட் கட்டணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த டவரின் படங்களை பார்க்கும்போது தெரியும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இடங்கள், படத்தை பார்த்தால் நன்கு புரியும். மூன்றாவது தளம்தான் மிக உயரமானது, இங்கு செல்ல ஒரே ஒரு லிப்ட் மட்டும் இருப்பதால் கூட்டம் அதிகம். நான் சென்று இருந்தபோது நிறைய நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. முதல் தளத்திலும், இரண்டாவது தளத்திலும் உணவகங்கள், கலை பொருட்கள் என்று விற்கும் கடை உண்டு. நான் அங்கு இருந்த வெளிநாட்டுக்கு போன் வசதி இருக்கும் போனில் எனது வீட்டிற்க்கு கூப்பிட்டு நான் இப்போது பாரிஸ் நகரின் ஈபில் டவரில் இருந்து பேசுகிறேன் என்று மட்டும் சொல்லி எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு 800 ரூபாய் ஆனது !
மூன்றாவது தளம் என்பது மிகுந்த உயரத்தில் இருந்தது, மிக சிறிய இடமும் கூட. காற்று மிக வேகமாக வீசும்போது பயமாய்தான்
இருக்கிறது, ஆனால் அங்கிருந்து பாரிஸ் நகரம் முழுவதும் தெரியும் போது மனதில் பட்டாம்பூச்சி பறக்கும் ! நான் எனது காமெராவை வெளியில் வைத்து இந்த டவரின் அடிவாரம் பார்த்து எடுத்த போட்டோ கீழே உள்ளது, இதில் இந்த டவரின் உயரத்தில் இருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்று தெரியும். முகத்தில் அறையும் காற்றில் முடி பறக்க 120 ஆண்டுக்கும் பழமையான ஒரு மனிதன் உருவாக்கிய ஒன்றின் மீது நிற்கிறோம் என்பது மனதில் மகிழ்ச்சி கொள்ள செய்யும். கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம் இது !

Labels : Eiffel Tower, Paris, Suresh, Kadalpayanangal, uyaram thoduvom, tallest tower, tallest
முகத்தில் அறையும் காற்றில் முடி பறக்க 120 ஆண்டுக்கும் பழமையான ஒரு மனிதன் உருவாக்கிய ஒன்றின் மீது நிற்கிறோம் என்பது மனதில் மகிழ்ச்சி கொள்ள செய்யும். கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம் இது !
ReplyDeleteஉயரம் தொட்ட பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
நன்றி, தங்களது வருகைக்கும், கருத்திற்கும்.....
Deleteangeyellaam poga yengalukku kudupinai illai, azhaiththuch chendratharkku nandri..............
ReplyDeleteநன்றி ஜெயதேவ், உங்களுடன் விரைவில் பயணம் செய்ய ஆசைபடுகிறேன், அதை ஒரு பதிவாகவும் ஆக்கலாம் !
Deleteஇத்தனை தெளிவான தகவல்களுடன்
ReplyDeleteஅருமையான படங்களுடன் இன்றுதான் ஈபில் டவரைப்
பார்க்கிறேன்,பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ரமணி சார் ! உங்களை விரைவில் சந்திக்க ஆசைபடுகிறேன்.
Deleteபிரமிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
ReplyDeleteநன்றி தனபாலன் சார் ! உங்களது கருத்துக்கள் மீண்டும் என்னை உயரம் தொட வைத்தது !
Delete