வழக்கமாக எந்த உணவகம் சென்றாலும் ரோட்டி, நான், மசாலா என்று ஒரே வகையான உணவுகள் என்று சலித்திருந்த சமயம் கண்ணில் பட்டது இந்த "தி எக் பாக்டரி". முட்டையை வைத்து இதுவரை நான் ஆம்பலேட், முட்டை மசாலா என்று மட்டுமே உண்டு இருந்த எனக்கு முட்டையில் இதை விட நிறைய செய்ய முடியும் என்று அவர்களின் மெனு கார்டு பார்த்தபோது தெரிந்தது ! ஏக்கமாக எனது மனைவியை பார்க்க, அவரின் முகத்திலோ திகில் அதிகம் பரவியது.....அய்யய்யோ இந்த மனுஷன் இனிமேல் முட்டையை வைத்து இதை பண்ணு, அதை பண்ணுன்னு உயிரை வாங்குவானே என்று மனதில் நினைத்தது தெரிந்தது.

முதலில் உள்ளே நுழைந்தவுடன் முகத்தில் அறைவது வெளிநாட்டு பப் கலாச்சாரம் போல இருக்கும் அமைப்பு. அங்கு உட்கார்ந்திருந்த எல்லோருமே இளைய தலைமுறை ! அது சரி நாமும்தானே !! :-) மெனு கார்டு என்பது கலராக இருக்கும் என்று நினைத்து தேடி கொண்டிருந்தபோது எங்களை பக்கத்து டேபிளில் இருந்து மேலும் கீழும் பார்த்தது ஏன் என்பது எங்களது முன்னால் இருந்த "Instruction Manual" போன்ற மெனு கார்டு கிடைத்ததும்தான் தெரிந்தது. முதலில் படித்த போது ஒன்றுமே புரியவில்லை, நிறைய படித்து படித்து புரிந்து கொண்டு நாங்கள் எக் விண்டாலூ, பாஸ்தா ப்ரிமாவேரா என்ற இரண்டையும் ஆர்டர் செய்தோம்.

பஞ்ச் லைன் :
Labels : Kadalpayanangal, Suresh, the egg factory, Arusuvai, Food made of egg, delicious egg

வெகு நேரம் காத்திருந்த பிறகு எங்களது முன்னே வைக்கப்பட்ட உணவை கண்டதும் ஏதோ வெளிநாட்டு ஸ்டைலில் இருந்தது, ஆனால் ஒரு வாய் உள்ளே வைத்ததும்தான் அது பக்கா இந்தியன் என்று தெரிந்தது. வெகுவாக சமைத்த பாஸ்தாவுடன் முட்டையை சிறு சிறு பொடிகளாக்கி உப்பும் காரமும் கலந்து வந்தது, எக் விண்டாலூ என்பது வெறும் முட்டை மசாலாவாகி போனது, ஆனாலும் சுவை மிகவும் அருமை ! வெளியில் இருந்து பார்க்கும்போது பகட்டாக தெரிந்தாலும், உள்ளே நல்ல சுவையுடனும், நேர்த்தியுடனும் சமைக்கப்பட்டு, மிகவும் வித்யாசமாக எல்லாம் முட்டையை செய்ய முடியும் என்று காட்டியது இந்த உணவகம்.

பஞ்ச் லைன் :
சுவை - அருமையான சுவை. நீங்கள் இங்கு சென்று சாப்பிடும்போது முட்டையில் இத்தனை சுவையான டிஷ் செய்ய முடியுமா என்று ஆச்சர்ய படபோவது உறுதி.
அமைப்பு - சிறிய இடம், பகட்டான உணவகம் போல இருக்கிறது, பார்கிங் வசதி கிடைப்பது சிரமம்.
பணம் - சராசரியான விலை! சுவைக்கு கொடுக்கலாம் பாஸ் !
அமைப்பு - சிறிய இடம், பகட்டான உணவகம் போல இருக்கிறது, பார்கிங் வசதி கிடைப்பது சிரமம்.
பணம் - சராசரியான விலை! சுவைக்கு கொடுக்கலாம் பாஸ் !
சர்வீஸ் - நல்ல சர்விஸ்.
அட்ரஸ் :
J.P. Nagar
Ground Floor, No 288, 15th Cross,
18th Main, 5th Phase, J.P.Nagar, Bangalore-560078
Opp: H.P.Petrol Pump/Wine Baron
Ph : 40124848
மெனு கார்டு :
அட்ரஸ் :
St.Marks road
Ground Floor, Whitehouse,
In the lane besides Dewar's wine store,
St.Marks Road, Bangalore-560001
In the lane besides Dewar's wine store,
St.Marks Road, Bangalore-560001
Phone: 42110041
Shift timing: 8.00 am- 10.30 pmJ.P. Nagar
Ground Floor, No 288, 15th Cross,
18th Main, 5th Phase, J.P.Nagar, Bangalore-560078
Opp: H.P.Petrol Pump/Wine Baron
Ph : 40124848
மெனு கார்டு :
Labels : Kadalpayanangal, Suresh, the egg factory, Arusuvai, Food made of egg, delicious egg
வித்தியாசமாக சுவைத்தேன்... ரசித்தேன்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார் ! முட்டையில் இத்தனை வகையா என்று ஆச்சர்யபட்டீர்களா, அடுத்து ஒரு கலக்கி பார்சல் !
Deleteநான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை
ReplyDeleteபெங்களூர் வருவேன்,உங்கள் அறிமுகம்
பயனுள்ளதாக உள்ளது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், பெங்களுரு வந்தால் கண்டிப்பாக அழைக்கவும்.....
DeleteNext :))))
ReplyDeleteஎப்போ சந்திக்க போகிறோம் கிருஷ்ணா ?! தங்களது கருத்திற்கு நன்றிகள் பல.....
Deleteமிக்க நன்றி நண்பரே.....தங்களது வருகையும், கருத்தும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது !
ReplyDelete