Thursday, May 2, 2013

உயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்

பெல்ஜியம் நாடு என்பது ஐரோப்பிய நாட்டின் ஒரு அங்கம், அந்த நாட்டின் தலை நகரம்தான் பிரஸ்ஸல்ஸ். இங்கு மற்ற நாட்டில் உள்ளது போல உயரமான கட்டிடங்கள் எல்லாம் பார்ப்பது அரிது, அங்கு இருக்கும் ஒரே உயரமான கட்டிட கலை என்பது இந்த அடோமியம் என்னும் அணுக்களின் அமைப்பிலான கட்டிடம்தான். முதன் முதலில் பெல்ஜியம் சென்றபோது அங்கு எது உயரமான கட்டிடம் என்று தேட ஆரம்பித்தேன், ஆனால் அப்படி ஒன்று என் கண்ணில் படவேயில்லை. அப்போதுதான் ஒருவர் இதை பற்றி தெரிவிக்க, சென்று பார்த்தபோது மிகுந்த ஆச்சர்யம்தான் !



1958ம் வருடம் அங்கு நடந்த ஒரு எக்ஸ்போவிர்க்காக இது தோற்றுவிக்கப்பட்டது. இது 102 மீட்டர் உயரம் கொண்டதும், ஒன்பது கோளங்களை இணைத்ததாகவும் இருக்கும் ஒரு அருமையான கட்டிட அமைப்பு. இது இரும்பின் அணு அமைப்பு ஆகும், அதை 1650 கோடி முறை பெரிதுபடுத்தி உள்ளனர். இதை ஒரு சிறந்த ஒரு இணைப்பு என்பதால், இது அந்த நாடு அடுத்த நாடுகளுடன் நட்புடன் இருப்பதை காட்டுவதாகவும் சொல்லபடுவதுண்டு !



 
 
1958ம் ஆண்டிற்கு பிறகு இதை கழட்டி விடலாம் என்றுதான் நினைத்தனர், ஆனால் பிரஸ்ஸல்ஸ் மக்கள் இதை மிக விரும்பினர், அது மட்டும் அல்லாமல் இந்த அமைப்பு அவர்களுக்கு ஆச்சர்யம் அளித்தது, அதனால் இதை அப்படியே விட்டு விட்டனர். இன்று வரை அங்கு ஒரு சயின்ஸ் ம்யூசியம் ஒன்று இருந்து வருகிறது. முதலில் நான் இங்கு சென்றபோது ஒவ்வொரு கோளத்தின் உள்ளே செல்லும்போதும் அங்கு இருக்கும் அறிவியல் சாதனங்கள், 1958ம் ஆண்டு இது எப்படி உருவாக்கபட்டது என்ற புகைப்படங்கள் என்று அருமையாக இருக்கும். முடிவில் உயரமான அந்த கோளத்திற்கு சென்று அந்த நகரத்தினை பார்க்கும்போது ஐரோப்பிய நாகரீகத்தை நீங்கள் விரும்புவீர்கள்.


 
Labels : Brussels, Belgium, tall building, Atomium, Suresh, Kadalpayanangal

No comments:

Post a Comment