Friday, May 3, 2013

ஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா

மதுரை மரிக்கொழுந்து, மதுரை மல்லிகை பதிவினை அடுத்து மதுரையில் இருக்கும் ஸ்பெஷல் எல்லாவற்றையும் சொல்லியாகிவிட்டது என்றுதான் நினைத்தேன், ஜில் ஜில் ஜிகர்தண்டாவை பார்க்கும் வரை ! எங்கு சென்றாலும் அதை மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா என்று சொல்லும்போது அதை இந்த பகுதியில் சொல்லாமல் விடலாமா ??! சரி, ஜிகர்தண்டா சாப்பிட வேண்டும் என்று முடிவாகிவிட்டது அதை எங்கு சாபிடுவது, எங்கு சென்று அதன் ஆரம்பத்தை கண்டு பிடிப்பது என்று யோசித்து அலைந்ததில் மதுரையில் பேமஸ் ஜிகர்தண்டா கடை என்று மஞ்சனக்கார வீதியில் ஒரு கடை இருக்கிறது, அதுதான் பழைய, ஒரிஜினல் ஜிகர்தண்டா என்று தெரிய..... இதோ அதை தேடிய ஒரு பயணம் !



ஜிகர்தண்டாவின் பெயர் காரணம் தெரியுமா உங்களுக்கு ? ஜிகர் என்றால்
ஹிந்தியில் இதயம் என்று அர்த்தம்,  தண்டா என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம்..... ஆஹ இதன் தமிழ் பெயர் "இதயத்திற்கு குளிர்ச்சி தரும் பானம்" ! முகமதியர்கள் மதுரை நகரை ஆண்டபோதும், நமது முஸ்லிம் சகோதரர்கள் இங்கு வந்து குடியேறியபோதும் நமக்கு கிடைத்தது இந்த பானம். மதுரை நகரில் இன்று எங்கு பார்த்தாலும் இது கிடைத்தாலும், இதன் ஆரம்பத்தை தேடி அலைந்ததில் நான் சந்தித்தது ஷேக் அப்துல் காதர், இவர்தான் மதுரையில் இன்றும் பிரபலமாக விளங்கும் "பேமஸ் ஜிகர்தண்டா" கடையின் முதலாளி. இவரின் கடைக்கு சென்று நான் பெங்களுருவில் இருந்து இதை குடிக்க வந்திருக்கிறேன் என்றதும் மனிதருக்கு முகமெல்லாம் பூரிப்பு !




ஜிகர்தன்டாவில் சேர்க்கபடுவது என்பது  பால், பாதாம் ரெசின், கடல் பாசி / பாலாடை, சர்பத், சீனி, ஐஸ்க்ரீம் மற்றும் ஐஸ்கட்டி. இதில் உங்களுக்கு தெரிந்ததுதான் எல்லாமே..... கடல் பாசியை தவிர. கடல் பாசி என்பது கடலில் இருந்து கிடைக்கும் பாசி அல்ல. அதன் தோற்றத்தை வைத்து அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும். இது ஒரு வித செடியின் தண்டுப் பகுதியில் இருந்து எடுக்கப்படும், நைலான் போன்ற நார்ப்பகுதி. இதை China grass என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஜெல்லி வகை இனிப்புகள் இதில் இருந்துதான் செய்கின்றனர்.





  


தேவையான பொருட்கள்:

பால் - 1 டம்ளர்

பாதாம் ரெசின் - 2 ஸ்பூன்

கடல் பாசி / பாலாடை - தேவையான அளவு

சர்பத் - 4 ஸ்பூன்

சீனி - தேவையான அளவு

ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்

ஐஸ்கட்டி - தேவையான அளவு



செய்முறை :

பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும். பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்துக் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும். பாதாம் ரெசினை எடுத்துக்கொண்டு தண்ணீரில் கழுவி 8 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் குளிரவைத்த பால் கலவையை ஊற்றி, பிறகு, ஊறி இருக்கும் பாதாம் ரெசினை அதில் ஒரு ஸ்பூன் விடவேண்டும். இதில் வேண்டிய அளவு சர்பத் ஊற்றி, நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம் போட வேண்டும். அதற்கு மேல் கொஞ்சம் பாலாடையினை மிதக்க விட்டால், ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!


ஜிகர்தண்டாவின் செய்முறை என்பது மிகவும் சுலபமாக இருக்கிறது, ஆனால் இந்த தொழிலில் பல காலம் இருப்பதால் இவர்கள் இதில் வித்தகர் ஆகி விட்டார். இவரிடம் ஜிகர்தண்டா 20, 30 மற்றும் 40 ரூபாய்க்கு அளவு மற்றும் சுவைகளில் கிடைக்கிறது. இவர் கட கடவென்று அதை மிக்ஸ் செய்யும் முறையிலேயே இதை அவர் எவ்வளவு காலம் செய்கிறார் என்று புரியும். முடிவில் உங்கள் கையில் வந்து நீங்கள் ஒரு வாய் வைத்ததும் உணர்வீர்கள்...... இவ்வளவு தூரம் வந்தது வீண் போகவில்லை என்று !!



Labels : Oor special, kadalpayanangal, suresh, madurai special, jil jil jigarthanda

5 comments:

  1. good work..keep going........

    ReplyDelete
    Replies
    1. முகம் தெரியாத நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி நண்பரே...... சுவைத்து பாருங்கள் விரைவில் !

      Delete
  3. ஜிகிர்தண்டாவின் சுலப செய்முறையை சொன்னீர்கள்...
    நன்றி!

    இந்த செய்முறையையும் படித்துப் பாருங்கள் சார்!!!

    . ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

    ReplyDelete