Sunday, May 5, 2013

சோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்

 வளையபட்டி தவில் - இதை கேட்கும்போதே அவரது உருவம் உங்களுக்கு யாபகம் வரும், ஆனால் அவரது பெயர் தெரியுமா ? அவரது பெயர் A.R . சுப்பிரமணியம். புதுக்கோட்டை பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம்தான் வளையபட்டி, இவர் ஆரம்பத்தில் அவரது தந்தை ஆறுமுகதிடமிருந்து நாதஸ்வரம் கற்றாலும், பின்னர் இந்த தவிலால் ஈர்க்கப்பட்டு இதை மன்னார்குடி  ராஜகோபால பிள்ளையிடமிருந்து இந்த கலையை கற்றுள்ளார். இன்று சங்கீத கலாநிதி விருது பெற்று அவரது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.




அவரது வாசிக்கும் தவில் வீடியோவை நிறைய பார்த்துள்ளேன், அதில் அந்த அழகு, இசையின் ஆழம் தெரியாது உங்களுக்கு..... காரணம் தவில் என்பது ஒரு அங்கமாக இருந்ததுதான். இந்த ஜீன்ஸ் படத்தில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில் வரும் தவில் இசை இவருடையதுதான், இந்த பாட்டில் கவனியுங்கள், உங்களுக்கு அந்த தவில் இசை மிகவும் பிடிக்கும்.



தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். ககர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் கவசங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.



No comments:

Post a Comment