Tuesday, May 7, 2013

காணாமல் போன கிராமங்கள்....!!?

 நீங்கள் சிறு வயதில் உங்களது பெற்றோருடன் ஊருக்கு பஸ்ஸில் சென்றிருப்பீர்கள், அந்த பஸ் பயணத்தின் அருமையான தருணம் என்பது ஒரு குழந்தையாக பார்க்கும்போது எதுவாக இருக்கும்....... தின்பண்டம்தான் இல்லையா ? பஸ் ஒரு ஊரின் உள்ளே நுழையும்போதே ஒரு ஆள் அந்த பஸ்சின் வேகத்தோடு ஓடி வந்து லாவகமாக தன் கையில் இருக்கும் தட்டுடன் ஏறி மேலே வந்து, சட்டென்று கட்டை குரலெடுத்து "முறுக்கு, முறுக்கு....... சூடா முறுக்கு" என்று விற்கும்போது தூக்கத்தில் இருந்து விழிப்பீர்கள். முறுக்கையும் அப்பாவையும் பார்க்கும்போதே அந்த வியாபாரி அருகில் வந்து உங்களது முன் ஒரு பாக்கெட் நீட்டும்போது அப்பா அதை வாங்கி தர, அடுத்து வரும் நிமிடங்கள் அனைத்தும் முறுக்கு மட்டுமே நினைவினிலும், நாக்கிலும் இருக்கும் அந்த தருணம் எப்படி இருந்தது. இன்று நமது நமது பயணத்தில் என்ன சாபிடுகிரீர்கள் என்று நினைத்து பாருங்கள்......... பெப்சி, பேக்கிரி வஸ்துக்கள், இளநீர், டீ மற்றும் காபி. இதற்க்கு மேலே வழியில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது ? அன்று நீங்கள் வாங்கி தின்ற வெள்ளரி பிஞ்சு, அதிரசம், முறுக்கு, காராசேவு இதெல்லாம் இன்று எங்கே ? அன்று பஸ்ஸில் ஓடி ஏறிய அந்த சிறு வியாபாரி இன்று எங்கே ?



 
அன்று நீங்கள் மதுரை செல்லவேண்டும் என்றால் வழியில் இருக்கும் அத்தனை கிராமதிர்க்குள்ளும் உங்களது பஸ் அல்லது கார் சென்று வர வேண்டியிருக்கும். உதாரணமாக, திருச்சியில் இருந்து மதுரை செல்லவேண்டுமென்றால் நீங்கள் கண்டிப்பாக மணப்பாறை, துவரங்குருச்சி, கொட்டாம்பட்டி, மேலூர் மூலமாகத்தான் மதுரை செல்ல வேண்டும். இப்படி போகும்போது மணப்பாறையில் முறுக்கும், துவரங்குறிச்சியில் காராசேவும், கொட்டாம்பட்டியில் அதிரசமும், மேலூரில் வெள்ளரி பிஞ்சும் என்று வாங்கி சாப்பிட்டு கொண்டிருப்போம். இந்த பேருந்துகளினாலும், கார்களிலும் மக்கள் செல்லும்போது அந்த கிராமங்கள் ஒரு நகரமானது. அங்கே சந்தைகளும், அய்யனார் கோவில்களும், அந்த ஊரின் பிரபலமான தின்பண்டங்களும், கடைகளும், இப்படி உருவானதுதானே ஒவ்வொரு ஊரின் ஸ்பெஷல் பண்டங்கள் ?! ஒரு ஊர் அந்த பண்டத்திற்கு பிரபலம் ஆகிவிட்டால் அந்த ஊரில் இருக்கும் எல்லா மக்களும் அந்த பண்டத்தை தயார் செய்தனர், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் இதனால் உருவானது இல்லையா ? இன்று இந்த நெடுஞ்சாலைகள் வந்த பிறகு நீங்கள் எந்த கிராமத்திற்கு உள்ளே சென்று வந்துள்ளீர்கள் ??


 


நான் இதற்க்கு முன்னே நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்களை வெட்டியதை பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன், இன்று ஒரு பயணத்தின் போது நான் இப்படி சிறு வயதில் சாப்பிட்ட ஒன்றை தேடி ஒரு கிராமதினுள்ளே சென்றபோது முகத்தில் அறைந்தது இந்த நெடுஞ்சாலைகள் அழித்த இந்த கிராமத்தின் கதை. இப்போது பேருந்துகள் எல்லாம் அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறக்கி விட, அங்கிருந்து மக்கள் தங்களது கிராமத்திற்கு நடந்து செல்கின்றனர். உள்ளே இருக்கும் அந்த கிராமத்தின் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு குறைந்து இன்று அந்த கடைகள் மக்களை தேடுகின்றன. ஒரு நாள் அந்த கடை மூட படும்போது மக்கள் நகரங்களை நோக்கி செல்ல, அந்த நகரம் ஒரு கிராமம் ஆகிறது !?




ஒரு சாலை.......ஒரு கிராமத்தினை, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி மாற்றுகிறது என்பது உங்களுக்கு தெரிகிறதா ? ஒரு முறை எனது நண்பன் அவனது ஊருக்கு சென்றிருந்தபோது எனக்கு அங்கு விற்பனை ஆகும் பன்னீர் சோடா ஒன்று வேண்டும் என்று கேட்டிருந்தேன். அவன் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து அவன் வந்தவுடன் கேட்டேன், அவனோ " இப்போ அங்க பஸ் எல்லாம் உள்ள வரதில்லை, அதனால வியாபாரம் இல்லைன்னு பேக்டரிய இழுத்து மூடிட்டானாம்....." என்று சொல்ல ஏமாற்றம் ஆனது. அறிவியல் வளர்ச்சியினால் ஒரு தொழில் மூடப்படும் என்று கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் ஒரு கட்டமைப்பு வளர்ச்சியினால் சிறு கிராமங்களின் தொழில் அழிவதை இப்போதுதான் பார்க்கிறேன். அந்த மக்கள் இன்று அதே நெடுஞ்சாலைகளின் ஓரத்தில், வேக வேகமாய் செல்லும் ஒவ்வொரு வாகனத்தினையும் பார்த்து விற்பதை பார்த்திருக்கிறீர்களா ? அதை நிறுத்தி வாங்கி கொடுக்க உங்களுக்கு பொழுது இருக்கிறதா ? வேகமாய் விரையும்போது நாம் சில பல மணி நேரங்களை காப்பாற்றி ஊரை அடைகிறோம், ஆனால் ஒரு கிராமம் இந்த சில மணி நேர மிச்சபடுதுதலில் அழியும்போது, நமது இளமை பிராய தின்பண்டங்கள் அழிந்து போனதில் நேரம் ஆனாலும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது இல்லையா ?



 Labels : Kadalpayanangal, Suresh, Lost village, highways, Village

5 comments:

  1. Replies
    1. நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி, உங்களை இந்த பதிவு பாதித்து இருக்கிறது என்பதை உணர முடிக்கிறது ! தங்கள் வருகைக்கு நன்றி !

      Delete
  2. Adhu yenn, Tiruchi kar ellam giramathai rasikirom, (why all Trichiaities likes village ?!), Nama oor thanni biased towards aa?

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான், திருச்சி மக்கள் காவிரியும், வயலும் சூழ்ந்து வாழ்பவர்கள்..... அதனால் இருக்கும் பாபு ! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete
  3. the bygone evergreen memories....fantastic narration sir...

    ReplyDelete