Monday, May 6, 2013

அறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)

உணவகம் என்பது சாபிடுவதற்கு மட்டும்தான் என்பது போய் இப்போது வெகுவாக சிந்தித்து அழகுபடுத்துவதிலும், இன்னும் ஒரு படி மேலே போய் புது டெக்னாலஜி அறிமுகபடுத்துவதிலும் என்று இருந்து வருகிறது ! என்னுடைய சிறிய வயதில் கோவை அன்னபூர்ணா ஹோடேலில் முதன் முதலாக கையை நீட்டினால் தண்ணீர் வரும் தானியங்கி பைப் ஒன்றை பொருத்தி இருந்தனர். அந்த வயதில் அது பெரிதாக தெரிந்தது, ஒவ்வொரு முறையும் சென்று கை கழுவிக்கொண்டு வருவேன். அதன் பின்னர் வெளிநாடு போகும்போதெல்லாம் இது போல சில அதிசயங்களை காண முடிந்தது, அப்போதெல்லாம் நம்முடைய நாட்டில் ஏன்  இது போல ஒன்று இல்லை என்ற கேள்விக்கு விடையாக இருந்தது இந்த உணவகம், ஆனால் அதற்க்கு கொடுக்கும் விலை மிகவும் அதிகம் !!


 
இந்த உணவகத்தின் சிறப்பு என்பது டச் ஸ்க்ரீன் கொண்ட (தொடு திரை) மேஜைதான். உங்களது முன்னிருக்கும் மேஜையில் ஒரு பெரிய 40 இன்ச் டிவி போன்ற அமைப்பு உள்ளது, அது தொடு திரை வசதி கொண்டது, இதில் நீங்கள் சாப்பிட போகும் மெனு, விளையாட்டு, அன்றைய செய்திகள் என்று பல பல விஷயங்கள் இருக்கும். முதலில் இந்த ஹோடேலில் உள்ளே நுழையும்போதே உங்களது பெயர், முகவரி வாங்கி கொள்கின்றனர், பின்னர் ஒருவர் உங்களை உள்ளே கூட்டி சென்று ஒரு மேஜையின் முன்னே அமர வைக்கும்போது உங்களது பெயர் அந்த தொடு திரையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும். நீங்கள் நடந்து வருவதற்குள் உங்களது பெயரை அந்த மேஜையின் மேலே வரும்படி செய்தது ரசிக்கும்படியாக இருந்தது. பின்னர் ஒருவர் வந்து அந்த தொடு திரை பற்றி ஒரு சிறிய வகுப்பு எடுத்து விட்டு சென்றவுடன், நீங்கள் குறைந்தது பத்து நிமிடமாவது அதை குழந்தைபோல தொட்டு விளையாடுவது நிச்சயம் ! எதிரில் உட்கார்ந்து இருப்பவர் பார்க்க அந்த திரையை தொடுவத்தின் மூலம் காட்சிகள் திரும்பும் என்பது ஒரு சிறப்பம்சம்.




இதை எல்லாம் செய்தவுடன், உங்களுக்கு வேண்டியதை அந்த தொடுதிரையில் ஆர்டர் செய்ய அது உள்ளே சென்று உணவாக வரும் ! முதலில் நாங்கள் ஒரு சூப் ஆர்டர் செய்துவிட்டு அதன் பின்னர் எதையுமே சாப்பிட முடியாத அளவுக்கு அவ்வளவு சூப் வந்தது. பின்னர் வந்தது எதையும் அவ்வளவாக சாப்பிட முடியவில்லை !! உணவின் தரம் என்பது மிகவும் நன்றாக இருந்தது, விலையும் கூட !! என்ன சாபிட்டோம் என்று கேட்பவர்களுக்கு....அவ்வளவு இருட்டாக இருந்ததால் தட்டில் இருந்தது கூட தெரியவில்லை என்றால் பாருங்களேன்.





 
பஞ்ச் லைன் :

சுவை - அருமையான சுவை. பல உணவு இந்திய - ஐரோப்பிய உணவுகளின் கலவை.

அமைப்பு -  சிறிய இடம், மிகவும் பெரிய ஆட்கள்தான் என்பதால் சத்தமே இல்லாமல் சாபிடுகிறார்கள். என்னை போல கும்பலை விரும்பும் ஆட்கள் தள்ளி செல்லவும்.

பணம் - ரொம்பவே ஜாஸ்தி சார் !

சர்வீஸ் - கொடுக்கிற காசுக்கு நல்ல சர்விஸ்.

அட்ரஸ் :

762, 3rd Floor, Above Reid & Taylor Showroom,
100 Feet Road, Indiranagar, Bangalore 



Labels : Kadalpayanangal, Suresh, high tech restaurant, Touch screen hotel

No comments:

Post a Comment