Thursday, May 16, 2013

சாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)

பவள பாறைகள், வண்ண மீன்கள் நிறைந்த இடங்களில் எல்லாம் இந்த 
ஸ்னோர்க்லிங் (Snorkeling) என்பது உண்டு. இது நீச்சல் கொஞ்சம் 
மட்டுமே தெரிந்தவர்கள், கடலில் மிகவும் ஆழம் செல்ல விரும்பாதவர்கள் 
எல்லாம் இதை செய்வார்கள். நீங்கள் உங்களது உடலை கடலில் மிதக்க 
விட்டு, மூச்சு விட்டு கொண்டு கீழே திரியும் வண்ண மீன்களை மெதுவாக 
ரசிக்கலாம். இந்த முறை மாலத்தீவு சென்றிருந்தபோது இதை முயற்சி செய்ய 
வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன், அது எவ்வளவு ஆனந்தம் 
என்று செய்த பிறகுதான் தெரிந்தது !!
 

ஸ்னோர்க்லிங் (Snorkeling) செய்வதற்கு மூன்று முக்கிய பொருட்கள் தேவை. கண்ணாடி, சுவாசிக்கும் குழாய் மற்றும் பின்ஸ் எனப்படும் கால் குழாய். இந்த கண்ணாடி நமது கண் மற்றும் மூக்கை மூடி விடும். வாயில் அந்த குழாயை வைத்துகொண்டால் அந்த குழாயின் மறு பக்கம்
தண்ணீருக்கு வெளியில் இருக்கும்,  இதனால் வெளி காற்றை வாய் மூலம் சுவாசிக்கலாம். காலில் அந்த பின்ஸ் மாட்டிக்கொண்டால் எளிதில் முன்னே நீந்தி செல்லலாம்.

 
 
முதலில் தண்ணீரில் இறங்கியவுடன், மெதுவாக மிதக்க ஆரம்பிக்க வேண்டும். பின்னர் கால்களை அசைக்க அசைக்க முன்னே செல்வீர்கள். இப்படி செய்யும்போது பளிங்கு போன்ற தண்ணீரில் கீழே தெரியும் பவள பாறைகள் மற்றும் வண்ண மீன்களை நேரடியாக பார்க்கலாம். நான் முதலில் நீந்தும்போது வெள்ளை மணலில் அப்படியே மணல் போலவே இருந்த மீனை பார்த்தேன். ஆடாமல் அசையாமல் வெறும் சுவாசம் மட்டும் இருத்தி பார்த்தபோது அது ஆனந்தமாக நீந்துவதை பார்க்க முடிந்தது. பின்னர் என்னை தாண்டி சென்ற பல வகையான வண்ண மீன்களையும் பார்க்க முடிந்தது. மீன்களில் இத்தனை வண்ணங்களா என்று நீங்கள் நிச்சயம் ஆச்சர்யபடுவீர்கள்.

 
 
 
 இப்படி நீரில் மேலே மிதந்தாலே இவ்வளவு ஆச்சர்யம் இருக்கிறதே, இன்னும் ஆழமாக நீந்தி சென்றால் எவ்வளவு அழகு கொட்டிக்கிடக்கும் என்று எண்ண வைக்கும் அளவு அழகு. கொஞ்ச நேரம் மூச்சு வேகமாக விடும் நீங்கள், பழகியவுடன் மெதுவாக ஆழ்ந்து இந்த அழகை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள். நீரின் வெளியே உலகம் அழகு என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய ஒன்று இந்த பவள பாறைகளும், மீன்களும். சரி, எப்போ போறீங்க ?!

 
Labels : Kadalpayanangal, Suresh, Snorkeling, Coral reef, maldives, beautiful sea, clear water

6 comments:

  1. டிக்கெட் போடுங்க... இன்னொரு முறை போயிட்டு வந்துரலாம்... ஹிஹி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சார் ! உங்களை அப்படியாவது சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சிதான் எனக்கு, உங்க போன் நம்பர் ரொம்ப நாளாக கேட்கிறேன், தர மாட்டேன் என்கிறீர்களே !

      Delete
  2. காணொளியுடன் எங்களையும்
    ரசிக்கவைத்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார் !

      Delete
  3. I too visited Andaman, but didn't go snorkeling.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயதேவ் சார் ! கண்டிப்பாக நீங்கள் அந்தமானில் செய்திருக்க வேண்டிய ஒன்று, மிஸ் செய்து விட்டீர்கள் !

      Delete