தங்கம்.....மக்கள் கூட்டம் அலைமோதும் தங்க நகை கடைகளை பார்க்கும்போது எல்லாம் எனக்கும் உங்களை போலவே ஆர்வம்தான், ஆனால் இந்த சுரங்கத்தின் உள்ளே சென்று வந்தவுடன் அதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது, அவ்வளவு வலி நிறைந்ததும், ஆச்சர்யங்கள் அடைந்ததும் மிக்க ஒரு பயணம் இது.
ஜோஹன்நெஸ்பெர்க் - சிட்டி ஆப் கோல்ட், தங்க நகரம் என்று அழைக்கபடுகிறது. உலகத்தின் 35 சதவிகித தங்கம் இங்கிருதுதான் வெட்டி எடுக்க படுகிறது என்று உங்களுக்கு தெரிந்தால் அது ஏன் சிட்டி ஆப் கோல்ட் என்று அழைக்கபடுகிறது என்பது விளங்கும். நான் சென்ற முறை அங்கு சென்றிருந்தபோது விளையாட்டாக அந்த தங்க சுரங்கம் செல்ல வேண்டும் என்று சொல்ல ,எனது தென் ஆப்ரிக்க நண்பர் ஆஸ்கார் என்னை ப்ரிம்ரோஸ் என்னும் நகரத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய மலை போன்ற மணல் திட்டு தெரியும், அது தங்கம் எடுப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண், அங்கு 1880ம் ஆண்டுகளில் கோல்ட் ரஷ் எனப்படும் தங்க வேட்டை ஆரம்பித்தபோது மக்கள் சுரங்கங்களில் இருந்து கற்களை, மண்ணை எடுத்து இப்படி மலை போல ஆக்கி இருந்தனர். அந்த நகரம் இந்த மக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது எனும்போது மலைப்பாக இருந்தது. முடிவில் அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் வரை சென்று விட்டோம், அது மூடி இருந்தது, அது ஒரு மூடப்பட்ட தங்க சுரங்கம்.....தங்கம் இனி இல்லை என்று மூடி விட்டிருந்தனர், அதை காண்பித்துவிட்டு அவர் திரும்ப, நான் அந்த மூடப்பட்ட சுரங்கத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்றேன். அவர் அதிர்ச்சியாய் என்னை பார்த்து இல்லை அது முடியாது என உறுதியாக சொன்னார். எனது முடிவில் நான் உறுதியாக இருந்ததால், அவர் வேறு ஒரு தங்க சுரங்கம் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளது அங்கு செல்லலாம் என்று சொல்ல எனக்கு ஆர்வம் இன்னும் அதிகமானது.



"கோல்ட் ரீப் சிட்டி"இது முன்பு ஒரு தங்க சுரங்கம், ஆனால் என்று தங்கம் இங்கு இல்லை என்று முடிவு செய்யபட்டதோ அப்போது இந்த சுரங்கம் மூடப்பட்டது. அதை இப்போது ஒரு தீம் பார்க் ஆக்கி விட்டிருக்கிறார்கள். அங்கு 4000 அடி சுரங்கம் ஒன்று இருக்கிறது, அதில் ஒன்றை சுற்றுலாவிற்க்காக திறந்து விட்டிருக்கிறார்கள். அதில் நீங்கள் 225 அடி வரை ஒரு சுரங்க தொழிலாளி போல பயணம் செய்யலாம் அதற்க்கு சுமார் நம்மூர் மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. எனது அந்த பயணம் தங்கத்தை பற்றிய கருத்தை மாற்றும் என்று அப்போது தெரியாது !
 |
சுரங்க தொழிலாளர்களின் தங்கும் அறைகள் |
 |
அந்த சுரங்கத்தின் வரைபடம்....225 அடி வரை நீங்கள் செல்லலாம் |
சுரங்கத்தின் உள்ளே நுழைவதற்கு முன்னே உங்களுக்கு ஒரு வீடியோ போட்டு காண்பிக்கிறார்கள், அதில் அந்த இடத்தின் வரலாறு, தங்கத்தை பற்றிய சில விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. அது முடிந்தவுடன் எங்களை ஒரு இடத்திற்கு கூட்டி சென்றனர், அங்கு மிக பெரிய மெசின்கலுக்கு இடையில் நடந்து சென்றவுடன் ஒரு இடத்தில் அந்த சுரங்கத்தின் உள்ளே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சுருக்கமாக சொல்லியவுடன், உங்களுக்கு மாட்டி கொள்ள ஒரு தொப்பியும், இரண்டு பேருக்கு ஒரு டார்ச் லைட்டும் தருகின்றனர். அதை வாங்கி கொண்டு எங்களது அந்த பயணத்தை தொடர ஆரம்பித்தோம்.
 |
அந்த லிப்ட் இயங்கும் மேற்புற அமைப்பு |
 |
இதில்தான் உடைக்கப்பட்ட பாறைகள் தங்கதிர்க்காக சலிக்கபடுகின்றன |
முன்னர், இங்கு தங்கம் கிடைக்கும் செய்தி அறிந்து வெள்ளைகாரர்கள் படையெடுத்து வரும்போது இங்கு இருந்த மக்களுக்கு அதை பற்றிய எந்த ஒரு ஞானமும் இல்லை எனலாம். அவர்கள் சுரங்கம் தோண்டுவதற்கு பணம் கொடுத்து கறுப்பின மக்களை அமர்தியவுடன், பல பல ஊர்களில் இருந்து எல்லாம் மக்கள் வர ஆரம்பித்தனர். இதில்தான் நிறைய போர் தோன்ற ஆரம்பித்தது. நாங்கள் 225 அடி தூரத்திற்கு பயணிக்க ஒரு லிப்ட் இருந்தது, அதன் உள்ளே நுழைந்தவுடன் நன்றாக இருந்தாலும் கீழே செல்ல செல்ல ஒரு பயம் மனதை கவ்வ ஆரம்பித்தது. நாங்கள் அங்கு சென்று இறங்கியவுடன் சுரங்கத்தின் உள்ளே வெள்ளை பெயிண்ட் அடித்து இருந்தனர். இது சுற்றுலா பயணிகளுக்கு என்று திறந்து விடப்பட்டு இருந்ததால், அவர்கள் டார்ச் அடிக்கும்போது வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதால் வெள்ளை பெயிண்ட் அடித்து இருந்தனர், அப்படி நாங்கள் டார்ச் அடித்தே பல இடங்களில் மை இருட்டு எனும்போது, அந்த பெயிண்ட் இல்லாமல் வெறும் பாறைகளாக இருந்தபோது நினைத்து பார்க்கவே முடியவில்லை.

தினமும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களது வேலைக்கான உபகரணங்களுடன் உயிருக்கு உத்திரவாதமில்லாத இந்த வேலையில், உங்களது கழுத்தில் மின்னும் அந்த தங்கதிர்க்காக அந்த பயணத்தை தொடர்கின்றனர் என்று நினைத்து பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இருப்பது போல அன்றைய நாளில் இந்த லிப்ட் வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் வெளியே வர இரண்டு நாட்கள் வரை கூட ஆகும் என்னும்போது சிறிது திகிலாக இருந்தது. முடிவில் குலுங்கலுடன் அந்த லிப்ட் அந்த 225 அடி ஆழம் தொட்டது. இந்த சுரங்கம் 4000 அடி வரை உள்ளது, உள்ளே செல்ல செல்ல உங்களுக்கு குப்பென்று வேர்ப்பதை அறிய முடிகிறது, அது மட்டும் இல்லை.....அந்த ஆழத்தில் பிரஷர் அதிகம் என்பதால் சுவாசிப்பதும் சிறிது சிரமமாக இருக்கிறது என்பதை உங்களால் நன்கு உணர முடியும்.
 |
லிப்ட் திறக்கும்போது அந்த சுரங்கத்தின் தோற்றம்.... |
 |
வெளிச்சம் அதிகம் வேண்டும் என வெள்ளை பெயிண்ட் அடித்த சுரங்க உள்புறம் |
 |
லிப்டை விட்டு வெளியே வருகின்றனர் |
 |
அந்த சுரங்க பயணத்தின் ஆரம்பத்தில்....... |
முடிவில் நான் 225 அடியில் உலகத்தின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு மூடப்பட்ட ஒரு தங்க சுரங்கத்தின் உள்ளே.....இனிதான் அந்த பயம் நிறைந்த, மை இருட்டில், தவறினால் நீங்கள் எங்கு என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாத அந்த பயணம் ஆரம்பமானது. என்னிடம் வேறு டார்ச் இல்லை, என்னுடன் கூட வந்தவர் அவரின் நண்பருடன் முன்னே செல்ல நான் ஒரு பொழுதில் தனியாக மை இருட்டில்......
மேலும் படிக்க அடுத்த பதிவு வரை பொறுங்களேன் !
Labels : Suresh, Kadalpayanangal, Saagasa payanam, Gold mine tour, Gold, Amazing tour, South Africa
உங்களின் பயணத்திலேயே மிகவும் (பயந்த) தங்கமான பயணம்...
ReplyDeleteஆவலுடன்...
நன்றி தனபாலன் சார் ! உங்களது தங்கமான பல கருத்துக்கள் இதை விட எனக்கு உயர்ந்தது !
Deleteதங்கமான சாகசப்பயணம் திகிலடையவைத்தது ..!
ReplyDeleteஇதற்கே அசந்தால் எப்படி, அடுத்த பாகங்களில் எல்லாம் இதை விட நிறைய இருக்கும் !
Deleteஐயோ! இனி தங்க நகையை பார்த்தால் உங்க பதிவுதன் நினைவுக்கு வரும்.
ReplyDeleteநன்றி ராஜி மேடம் ! எனது இந்த பதிவு உங்களது மனதை தொட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
Deleteபடங்களுடன் பதிவு
ReplyDeleteமிக மிக அருமை
தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதெனத்
தெரியவில்லை.
தொடர வாழ்த்துக்கள்
தங்களது கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி சார் ! தங்களது தொடரையும் நான் விடாமல் தொடர்கிறேன் தெரியுமா......
DeleteGetting Gold is not so easy!!
ReplyDeleteஆமாம் ஜெயதேவ் சார் !! நீங்கள் சொன்னது சரிதான், இந்த பயணத்திற்கு பின் தங்கம் என்பதை பார்த்தால் நடிகைகளை விட இந்த சுரங்க தொழிலாளிகள்தான் யாபகம் வருகிறார்கள்.....
Deleteதிகிலான பயணம்தான்.
ReplyDeleteநன்றி மாதேவி ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !
DeleteAmazing :)))
ReplyDeleteநன்றி கிருஷ்ணா !
Delete