Wednesday, June 26, 2013

ஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)

சென்ற வாரம் சின்னாளபட்டி சேலை பற்றிய பதிவுகளை பார்த்தீர்கள், உங்களது கருத்துக்களுக்கு நன்றி. இந்த வாரம், நாமக்கல் பற்றி பார்ப்போம். "நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. நாமக்கல் என்பது முக்கிய நகரங்களில் இருந்து பார்த்தால்......  சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ) , கரூர் (45 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ). சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாக செல்லும். இங்கு முட்டைகள் மிகவும் பிரபலம். ஊருக்கு வெளியே செல்லும்போது எங்கு பார்த்தாலும் கோழி பண்ணைகள். இதுவரை நீங்கள் கோழிகளை பற்றி தெரிந்து வைத்த செய்திகள் எல்லாம் இந்த பதிவின் மூலம் உடைய போவது உறுதி !





எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை, அவ்வளவு விஷயம் இருக்கிறது !! முட்டையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவுடன், எப்படி இந்த கோழி பண்ணைக்கு போவது, யாரை கேட்பது என்று புரியவில்லை. எனது நண்பன் ரவிகுமாரிடம் சொன்னவுடன் அவன் சில இடங்களில் ஏற்பாடு செய்து கொடுத்தான், அதனால் அவனுக்கு நன்றி ! முட்டை என்பது ஐந்தாம் தலைமுறை என்பது தெரியுமா ? இது நல்ல லாபம் கொடுக்கும் தொழில்....நஷ்டமும் கொடுக்கும் தொழில் என்பது தெரியுமா ?  முட்டை என்பது சைவம் என்பது தெரியுமா ? ஒரு முட்டை தட்டில் எத்தனை முட்டை இருக்கும் என்பது தெரியுமா ? வாருங்கள்......தெரிந்து கொள்வோம்!





கோழி.......ஒரு கோழி என்பது 72 வாரம் வரை உயிரோடு இருக்கும். குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம், அதற்கடுத்த 8 வாரம் என்பது வளர் பருவம், அதற்கடுத்த 56 வாரமும் முட்டை உற்பத்தி பருவம். முட்டையிடும் பருவத்தை ஆரம்பம், பீக், முடிவு என்று வைத்திருக்கின்றனர். பொதுவாக கோழிகள் 26 மணி நேரத்திற்கு ஒரு முட்டை இடும், அதுவே 28 அல்லது 30 மணி நேரம் வந்து விட்டால், அதை விற்று விடுவார்கள்.



முதலில் நீங்கள் வாங்கி சாப்பிடும் கோழி என்பது கமர்சியல் கோழிகள் என்கிறார்கள் அவர்கள் பாஷையில். புரிகிற மாதிரி சொல்வதென்றால்.......

கிராண்ட் பேரன்ட் :

முதன் முதலில் உருவாக்கப்படும் கோழி என்பதை தாத்தா கோழி (கிராண்ட் பேரன்ட்) என்கிறார்கள். இதை தயார் செய்வது என்பது அவ்வளவு கஷ்டம் ! தரமான கோழியின் விந்தணுவில் இருந்து உருவாக்கப்படும் இந்த கோழிக்கு அவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்குமாம், கறியில் சத்தும் கூட.  இந்த கோழிக்கு கவனிப்பு மிகவும் அதிகம், நாசாவில் வேலை செய்வது போல சயின்டிஸ்ட் எல்லாம் இதில் ஜீன் முறையில் சோதனை நடத்துவார்கள். இதன் விலை மிகவுமே அதிகம்.

பேரன்ட் :

கிராண்ட் பேரன்ட் என்பது சுமார் 300 முட்டைகளை வருடத்திற்கு கொடுக்கும் என்று வைத்து கொள்வோம், இந்த முட்டைகள் கோழிகுஞ்சா வெளிவந்தால் அதை இவர்கள் பாஷையில் பேரன்ட் / அப்பா கோழி என்கின்றனர். இந்த வகை கோழிகள் சிறிது எதிர்ப்பு சக்தி கம்மியாக இருக்குமாம். இந்த பேரன்ட் கோழிகள் முட்டையும், கறியும் அதிகம் கொடுத்தால்தான் உங்களுக்கு லாபம் அதிகம், அது மட்டும் இல்லை, இது நோயில்லாமல் இருக்க வேண்டும், ஏனென்றால் இது இறந்தால் நஷ்டம் மிகவும் அதிகம், அதனால்தான் இதை பார்ப்பதற்கு கூட அனுமதி மறுப்பார்கள்.

லேயர் :

பேரன்ட் கோழி ஒவ்வொன்றும் 300 முட்டைகள் இட்டு, அது கோழிக் குஞ்சுகளை கொடுத்தால் அதை பையன் கோழி அல்லது லேயர் கோழி என்பார்கள். இதுதான் நாமக்கல்லில் நீங்கள் எங்கும் பார்க்கும் கோழி பண்ணைகளில் இருப்பது. பேரன்ட், க்ராண்ட் பேரன்ட் கோழிகளை அதிக வெப்பமோ, தூசியோ, தொற்று நோய்களோ தாக்க கூடாது என்று இந்த பண்ணைகள் எல்லாம் ரோட்டில் இல்லாமல், ஒரு கிராமத்தின் உள்ளே இருக்கும், அதனால் நீங்கள் அங்கு செல்வது என்பது முடியாது. ஆனால் இந்த லேயர் கோழி பண்ணைகள் அப்படி இல்லை.இதை சுமார் 150 ரூபாயில் இருந்து கிடைக்கும், இதைதான் பண்ணைகள் அதிக அளவில் வாங்கி வருகின்றன.

கமர்சியல் :

லேயர் கோழிகள் இடும்  முட்டைகளில் இருந்து வருவதுதான் நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகள், இதை பேரன் கோழி என்கின்றனர். பிராய்லர் கோழி என்பது வெறும் 42 நாள் மட்டும் வளர்த்து எடுப்பது, இதை வெகு நாட்கள் வைத்திருந்தால் அது இடும் முட்டை என்பது ஐந்தாம் தலைமுறை, அதைதான் நாம் உண்கிறோம் ! பொதுவாய் இந்த கமர்சியல் கோழிகள் என்பது 72 வாரம் முட்டை போட்டு ஓய்ந்து போன முற்றின கோழிகளும், 42 வாரம் மட்டுமே வளர்த்த இளம் கோழிகளும் மிக்ஸ் செய்து இருப்பதுதான் !



என்ன மூச்சு வாங்குகிறதா, நான் இன்னும் பண்ணையின் உள்ளேயே செல்லவில்லையே, முதலில் கோழியை பற்றி மட்டுமே சொல்லி இருக்கிறேன், வாருங்கள் இப்ப பண்ணைக்கு செல்வோம். இந்த பண்ணை லேயர் கோழிகளை பராமரிக்கும் பண்ணை.......

இந்த கோழி பண்ணைகளில் சிறு குஞ்சுகளாக இருக்கும்போது வாங்கி வந்து இரண்டு முறைகளில் கோழிகளை வளர்ப்பார்கள்.  முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.




 இந்த இடத்தில் நீங்கள் முட்டை உருவாவதை பற்றி தெரிந்து கொண்டால்தான், அதை செயற்கை முறையில் எப்படி குஞ்சு பொரிக்க வைக்கின்றனர் என்பதை அறிய முடியும். ஒரு முட்டையின் ஆயுள் என்பது 21 நாள், அதன் பின்னர் குஞ்சு வெளி வந்துவிடும். பொதுவாக கோழி 17வது வாரத்தில் இருந்து முட்டை இட ஆரம்பிக்கும், சேவலோடு சேர்ந்து உருவாகும் முட்டைக்கு மட்டுமே உயிர் இருக்கும். அதுவே கோழி குஞ்சுகளாக வரும், ஆனால் பிராய்லர் கோழி இடும் முட்டைகள் சேவலோடு சேராதது......அதாவது கோழிகள் இடும் இந்த முட்டைகளுக்கு உயிர் இல்லை, ஆகவேதான் முட்டை சைவம் என்கின்றனர். நாம் இப்போது பார்ப்பது லேயர் கோழிகள், இதுதான் கமர்சியல் கோழிகளை உருவாக்குவது, ஆகவே சேவலிடம் இருந்து விந்துக்களை எடுத்து (அது ஒரு தனி முறை சார், அதை பற்றி எழுதினால் இந்த ப்ளாக் வாசிப்பவர்கள் சங்கடபடலாம் !) ஒரு ஊசியில், கோழியிடம் சேர்கின்றனர். அது முட்டைகளாக உருவாகிறது !




ஆக, நீங்கள் மிக முக்கியமான விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டாகிவிட்டது. இப்போது செயற்கை முறையில் இந்த முட்டைகளை குஞ்சு பொரிக்க வைக்க இருக்கும் முறையை பற்றி பார்ப்போம். என்ன......இப்பவே கண்ணு கட்டுதா !! சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, Namakkal, Muttai, Koli, Egg


17 comments:

  1. படத்துடன் விளக்கம்... இவ்வளவு விரிவாக... மேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் ! இது நாமக்கல்லிலேயே சென்று மிகுந்த கஷ்டப்பட்டு சேகரித்த பதிவு, இதற்க்கு நீங்கள் இட்ட கருத்து உணமையிலேயே நான் எடுத்த முயற்சிக்கு மகிழ்ச்சி சேர்த்தது.

      Delete
  2. இதுவரை அறியாத தகவல்கள்
    படத்துடன் எளிதாக விரிவாக விளக்கிய விதம்
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார் ! திண்டுக்கல் தனப்பாலன் சாரை சந்தித்து விட்டேன், தங்களையும் சந்திக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

      Delete
  3. good information.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே !

      Delete
  4. very informative article...

    ReplyDelete
  5. யாரையாவது திட்டுறதுன்னா கூமுட்டைன்னு திட்டிடுறோம். அந்த முட்டைக்குள்ள இம்புட்டு விசயம் இருக்கா? தொடருங்கள் அறிய ஆவல்.., பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. ராஜி மேடம், நீங்கள் சகோ என்று கூப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முட்டை பதிவு உங்களது மனம் கவர்ந்தது கண்டு மகிழ்ச்சி, அதே போல உங்களது பட்டத்து யானை பதிவும் நன்றாக இருந்தது.

      Delete
  6. அதாவது கோழிகள் இடும் இந்த முட்டைகளுக்கு உயிர் இல்லை, ஆகவேதான் முட்டை சைவம் என்கின்றனர்.

    .என் ப்ரெண்ட், முட்டைக்குள்ள ஒரு உயிர் இருக்கு அதுனால அது நான்வேஜ்தான்னு சொல்லிட்டு இருந்தான் , நானும் அப்படிதான் நெனசிட்டுருந்தன் ...

    என் அறிவு கண்ண திறந்துடிங்க அண்ணே ....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மட்டும் இல்லை ஆனந்த், நானும் நாமக்கல் செல்லும் வரை இது போல்தான் நினைத்திருந்தேன். நீங்கள் பதிவு ரசித்தது கண்டு மகிழ்ச்சி !

      Delete
  7. Replies
    1. நன்றி கிருஷ்ணா, விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் இந்த முட்டை பதிவும், இன்னும் நிறைய ஊர் ஸ்பெஷல் பதிவும் வரும். தங்களது வருகைக்கு நன்றி !

      Delete
  8. Dear sir,
    what is your profession? How can U get time for this?

    ReplyDelete
    Replies
    1. மனதிற்கு பிடித்ததை செய்யும்போது நேரம் என்பது ஒரு தடை இல்லை நண்பரே ! நான் பெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்கிறேன்.....தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  9. முட்டை இடும் லெகான் கோழிகள் வேண்டும் எங்கு கிடைக்கும்

    ReplyDelete