Monday, June 3, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 4/5)

என்ன சென்ற பதிவில் புடவை சாயம் போடுவதும், அந்த புடவையில் டிசைன் செய்வதும் பார்த்திருந்தீர்களா ?! எப்படி இருந்தது ?? அப்படி செய்யப்பட்ட புடவைகளை இங்கு கஞ்சி போட்டு காய வைப்பதை பார்க்கலாமா ? சென்ற பதிவுகளை படித்துவிட்டு போன் செய்த நண்பர் ஒருவர் "அடேய், எப்படி உன்னை எல்லாம் உள்ளே விட்டாங்க ? இவ்வளவு விரிவா எழுதி இருக்கே ? உண்மையாகவே தமிழ்நாட்டில் இவ்வளவு சிறப்பு இருக்கு அப்படின்னு நினைச்சாலே பெருமையாக இருக்கு....... இன்னும் என்ன என்ன வைச்சிருக்கே ?" அப்படின்னு கேட்க எனக்கு சந்தோசமாக இருந்தது. நிறைய இது போல இருக்கு, எழுததான் நேரம் இல்லை..... விரைவில் நாமக்கல் முட்டை, கரூர் கொசுவலை என்று இதே போல வெகுவாக நெருங்கி சென்று பார்த்ததை பகிர்கிறேன். இப்போ வாங்க சேலைக்கு கஞ்சி போடுவோம்.....



புடவைக்கு கஞ்சி போடும் முறை என்பது ஒன்றும் அவ்வளவு ரகசியமானது இல்லை..... ஸ்டார்ச் எனப்படும் கஞ்சி மாவை எடுத்து அடுப்பில் தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். அது ஒரு பதமாக வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு ஆற விட வேண்டும். இப்போது கஞ்சி தயார் !! எதற்கு புடவைக்கு அதுவும் சுங்குடி சேலைக்கு கஞ்சி போட வேண்டும் என்று கேட்டபோது, அப்போதுதானே நன்கு விறைப்பாக இருக்கும், அதுவும் அப்படி செய்தால்தான் புடவை நன்கு எடுப்புடன் இருக்கும் என்கின்றனர்.....உணமையாவா ?




பின்னர் கஞ்சியை எடுத்து ஒரு பிளாஸ்டிக் கேன்னில் ஊற்றி புடவையை நன்கு சுருட்டி முக்கி முக்கி எடுக்கின்றனர். நானும் அது போல செய்கிறேனே என்று ஆசையுடன் கேட்க்க, அவர்கள் என்னிடம் சில புடவைகள் கொடுத்தனர். நானும் அவர்களை போல சுருட்டி முக்கி எடுக்க அவர்கள் பதற்றத்துடன் வந்து "அண்ணே, நீங்க சரியாவே புடவையை சுருட்டலை" என்று சொல்லி அவர்கள் சுருட்டி காண்பித்தனர். சரியாக புடவையை சுருட்டாமல் இருந்தால் கஞ்சி நன்கு பரவாது என்பது பின்னர்தான் புரிந்தது. புடவையை சுருட்டுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா ? நமக்கு தெரியாம போச்சே.....




பின்னர் இப்படி சுருட்டிய புடவைகளை ஒருவர் எடுத்து சென்று வெயிலில் காய வைக்கிறார். ஒரு கருவேலம் காட்டினுள் இப்படி கஞ்சி காய்ச்சி புடவையை அழகாக்கும் இவர்களின் உழைப்பை பார்த்தால் அடுத்த முறை அந்த புடவையை இன்னும் காதலுடன் பார்ப்பீர்கள் என்பது நிச்சயம் !! சரி புடவை காய்கிறது, அடுத்தது.......வாங்க அயன் செய்து வியாபாரம் செய்வோம் !! அடுத்த பதிவு வரை காத்திருங்களேன்......!!



Labels : Oor special, chinnalapatti sarees, sungudi sarees, Suresh, Kadalpayanangal

6 comments:

  1. கஞ்சி இல்லாத சுங்குடி சேலை விற்பது சிரமம்...

    ReplyDelete
    Replies
    1. நன்கு சொன்னீர்கள், அது மட்டும் இல்லை......பார்ப்பதற்கும் நன்றாக இருக்காது சார் ! தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  2. Replies
    1. நன்றி பாவா ஷரீப் ! தங்களது உற்சாகமான கருத்துக்கள் என்னை மேலும் எழுத தூண்டுகிறது !

      Delete
  3. விரிவான விளக்கங்கள்... அருமை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !

      Delete