Tuesday, June 4, 2013

ஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - 5/5)

என்ன நம்ம தமிழ்நாட்டு சிறப்புகளை நினைச்சு பெருமைபடறீங்களா, ஒவ்வொரு ஊரிலும் இவ்வளவு சிறப்பு இருக்குதுன்னு மலைச்சி போய் இருக்கீங்களா ? சின்னாளபட்டி புடவை எத்தனை விதமான செயல்களை கடந்து வருகிறது ?! எனது பதிவை படிக்கும் நண்பர் ஒருவர் ஈமெயில் அனுப்பி இருந்தார், அதில் மதுரையில் அழகிரிதான் ஸ்பெஷல், நான் ஏன் அதை எழுதவில்லை என்று கேட்டிருந்தார் ?! ஊர் ஸ்பெஷல் என்பதில் ஒரு ஊரில் உள்ள மக்களின் தொழில் ஆதாரம் என்பது அங்கு செய்யும் பொருட்களில் உள்ளது என்றால் அது ஊர் ஸ்பெஷல் ஆகும் என்றேன். உதாரணமாக சின்னாளபட்டியில் நிலக்கடலை மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் அது எல்லோராலும் பயிர் செய்யபடுவதில்லை, ஆதலால் எழுதவில்லை !! சரி நாம புடவையை அயன் செய்து வியாபாரம் செய்வதை பாப்போம் வாருங்கள்....






கஞ்சி போட்ட காட்டன் புடவைகளை அயன் செய்வது என்பது ஒரு தனி கலை, சுருக்கமாக உள்ள அந்த புடவைகள் அயன் செய்த பிறகு பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அயன் செய்பவர்களின் வலி  அதில் தெரிவதில்லை ! இவர்கள் உபயோகிக்கும் அயன் பெட்டி இரண்டு வகையில் உள்ளது - கரி போட்டு, கரண்டில் என்று. இரண்டு பெட்டிகளும் வெகு கனமாக உள்ளது, ஆனால் இப்போது தமிழ் நாட்டில் நிலவும் கரண்டு பிரச்சனையில் இப்போது எங்குமே கரி போட்டு அயன் செய்வதுதான் !! புடவையை மடித்து அயன் செய்வது என்பது ஒரு கலை என்றுதான் கூற வேண்டும், சர சரவென்று மடித்து, எல்லா புடவைகலுமே ஒரே போல இருப்பது போல அவர்கள் செய்வது காண கிடைக்காத காட்சிதான் !!


அவர்களிடம் தினமும் நூற்றுகணக்கான புடவைகள் குவிகிறது, ஒருவர் புடவைகளை அயன் செய்ய இரண்டு நிமிடம் (அனுபவத்தை பொருது பொறுத்து ) ஆகிறது, ஒரு நாளில் ஒருவர் நூற்றி ஐம்பதில் இருந்து இருநூற்றி ஐம்பது வரை அயன் செய்யலாம், ஆனால் சிலர் அதிகாலையில் ஆரம்பித்து இரவு வரை கூட அயன் செய்வதை கேள்வி பட முடிந்தது. அன்றைய நாளின் முடிவில் அவர்களின் தோள் வலி பின்னி எடுக்கும் என்பது நான் அந்த அயன் பெட்டியை தூக்கும்போதே தெரிந்தது !!


 

சரி புடவை இப்போது ரெடி, அடுத்த கட்டம் என்பது வியாபாரம்தானே ! இங்கே இருக்கும் எந்த தெருவில் நுழைத்தாலும் வோல்செல் எனப்படும் மொத்த வியாபார கடைகள்தான். சில சமயங்களில் அந்த கடை உங்களுக்கு தெரிந்து இருந்தால், அல்லது பழக்கம் இருந்தால் நீங்கள் சில்லறை விலையில் எடுத்து கொள்ளலாம் ! அது போன்ற ஒரு புடவை கடையில் நுழைந்தபோது பல பல வண்ணங்களில், டிசைன்களில் புடவைகள் கண்ணை பறித்தது. கொல்கத்தாவில் இந்த காட்டன் புடவைகளுக்கு மிகவும் கிராக்கி, அது மட்டும் இல்லை தமிழகத்தில் இருக்கும் எல்லா ஜவுளி கடைகளுக்கும் இந்த ஊரில் இருந்து புடவைகள் செல்கின்றன. என்ன  சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் இவ்வளவு உழைப்புடன் உருவாகிறதா என்று ஆச்சர்யம் தருகிறதா, படிக்கும் உங்களுக்கே இப்படி என்றால் நேரில் பார்த்த எனக்கு !!
 
 
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, Chinnalapatti sarees, Sungudi sarees

5 comments:

  1. சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் உருவாக்கம் அறிய வேண்டுமெனில் உங்கள் தளத்தை பார்த்தால் போதும்... வாழ்த்துக்கள்...

    ஆமாம்... வீட்டிற்கு எத்தனை சேலைகள் எடுத்தீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா நல்ல கேள்வி கேட்டீர்கள்.....எத்தனை சேலை எடுத்தாலும் அட இவ்வளவுதானா என்று கேட்கிறாள் என் மனைவி :-)

      Delete
  2. வியக்கவைக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. great articles pls visit www.chinnalapattiinfo.com

    ReplyDelete