Sunday, June 2, 2013

சோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை !!

இந்த  சோலை டாக்கீஸ் ஆரம்பித்தபோது இளையராஜாவின் பாடல்களும், எனக்கு பிடித்த பாடல்களும் என்று பகிர்ந்துகொண்டிருந்தேன், அப்போது ஒரு முறை ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, மெல்போர்ன் நகரின் புகழ்பெற்ற விக்டோரியா மார்க்கெட் பகுதியில் ஒருவர் இசை கருவி கொண்டு வாசித்ததை கண்டு இது போல புதுமையான இசை உலகில் அதிகம் இருக்கிறதே, அதை ஏன் உங்களுக்காக பகிர்ந்து கொள்ள கூடாது என்று நினைத்து அன்றிலிருந்து புதுமையான இசையை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன், சமயத்தில் நமது மறக்கப்பட்ட இசையையும் ! இதற்க்கு நல்ல வரவேற்ப்பு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி, தங்களுக்கு நன்றியும் கூட !



இந்த வாரம் சோலை டாக்கீஸ்சில் ஒரு இசை கருவியே இல்லாமல் இசையை கொடுக்கும் காணொளி. முதல் முறை இதை கேட்டபோது இதற்க்கு நிறைய பயிற்சி தேவை என்று கேட்கும்போதே தெரிந்தது, இதை கேட்டால் நீங்கள் நிச்சயம் ஆச்சர்யபடுவீர்கள்.


Labels : Suresh, Kadalpayananagal, solai talkies, music without instrument

3 comments:

  1. வியப்பாக தான் இருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார் !

      Delete
  2. இசைக்கருவி இல்லாமல் ஓர் இசை தமிழிலும்!
    https://www.youtube.com/watch?v=TGZtwKx-Cjc

    ReplyDelete