Thursday, June 13, 2013

டெக்னாலஜி - கண்ணாடி

கண்ணாடி என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும், வெறும் முகம் பார்க்கும் கண்ணாடியோ அல்லது கண்ணுக்கு போடும் கண்ணாடியோதானே  ? ஆனால் அதை எல்லாம் தாண்டி நிறைய வகை கண்ணாடிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ?
 
 
 
கண்ணாடியில் இவ்வளவு வகை எல்லாம் இருக்கா என்று உங்களை ஆச்சர்ய பட வைக்கும் ஒன்றை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். இதன் மூலம் இன்று டெக்னாலஜி எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள், விரைவில் நம்மூரில் வரலாம், யார்  கண்டது ?! 
 
 
 
இப்போது கண்ணாடியில் கடின தன்மையை அதிகரிக்க நிறைய முயற்சி நடக்கிறது, இதனால் இரும்பிற்கு பதில் இனிமேல் கண்ணாடிகள் அதன் இடத்தை நிரப்பலாம். எந்த அளவிற்கு கடினமாக என்று கேட்பவர்கள் கீழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 
 
இதெல்லாம் கதை, உலகத்தில் இப்படி எல்லாம் நடக்க நிறைய வருஷம் ஆகும் என்று சொல்பவர்கள் மட்டும் இந்த வீடியோவை பார்க்கவும். இது இன்று சிகாகோ நகரத்தில் இருக்கும் சியர்ஸ் டவரின் உச்சியில், ஒரு கண்ணாடியில் ஆன ஒரு அறையை வெளியே ஆட்களுடன் நகர்த்துவார்கள், உங்களது கால்களுக்கு கீழே பல நூறு அடியில் ஆட்களும், டாக்ஸியும் உங்களை கடக்கும்.......இது உங்களை விரைவில் வந்து அடையும்.
 
 
Lables : Suresh, Kadalpayanangal, Technology, glass 

2 comments:

  1. கடைசி காணொளி அதிர வைத்தது... குழந்தைகளுக்கு என்னவொரு சந்தோசம்...!

    நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார், இப்போது இது எல்லா நாடுகளிலும் பிரபலம் ஆகி வருகிறது.

      Delete